உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / முடியாதவர்கள் ஓய்வு பெறுங்கள் மா.செ.,க்களுக்கு முதல்வர் உத்தரவு

முடியாதவர்கள் ஓய்வு பெறுங்கள் மா.செ.,க்களுக்கு முதல்வர் உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

'ஒரு பூத் கமிட்டியில், 30 சதவீதம் உறுப்பினர்கள் சேர்க்கையை, வெற்றிகரமாக முடித்து கொடுக்க முடியாத மாவட்டச் செயலர்கள், தங்கள் பதவியில் இருந்து விலகி, விருப்ப ஓய்வில் செல்லுங்கள்' என, முதல்வர் ஸ்டாலின் பேசிய தகவல் வெளியாகி உள்ளது.தி.மு.க., மாவட்டச் செயலர்கள், சட்டசபை தொகுதி பார்வையார்கள், சார்பு அணிகளின் நிர்வாகிகள் கூட்டத்தில், முதல்வர் ஸ்டாலின் பேசியது குறித்து, கட்சியினர் கூறியதாவது:'ஓரணியில் தமிழகம்' இயக்கத்தில் இணைந்தவர்களில், விருப்பம் உள்ளவர்கள், தி.மு.க.,வில் உறுப்பினர்களாகவும், இணைவர். ஜாதி, மதம், கட்சி சார்பு என எதையும் பார்க்காமல், தமிழகத்தின் ஒவ்வொரு குடும்பத்தையும், நாம் சென்றடைய வேண்டும். தமிழகத்திற்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக, மக்களை ஒன்றிணைக்க வேண்டும்.ஜூலை 1ல் துவங்கி, 45 நாட்கள் ஓரணியில் தமிழகம் முன்னெடுப்பு நடக்கும். கட்சியின் ஐ.டி., அணி சார்பில் தொகுதிக்கு ஒருவர் என, 234 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் வழியாக, 68,000 ஓட்டுச்சாவடிகளில் உள்ள, பூத் டிஜிட்டல் ஏஜன்ட்களுக்கு, பயிற்சி அளிக்கப்படும். இதற்கான உதவிகளை, மாவட்டச் செயலர்கள் செய்து தர வேண்டும். தமிழகம் முழுதும் பொதுக்கூட்டங்கள் நடத்த வேண்டும். வீட்டுக்கு வீடு பிரசாரம் செய்ய வேண்டும். ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும், ஓட்டுச்சாவடி முகவர், பூத் டிஜிட்டல் ஏஜன்ட், ஒரு பெண், ஒரு இளைஞர் ஆகியோர் அடங்கிய குழு அமைக்க வேண்டும். இது கட்டாயம். இதில் யாருக்கும் விதிவிலக்கு கிடையாது. இவர்களுடன் கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் இணைந்து கொள்ள வேண்டும். ஆக.,15ம் தேதிக்கு பின் நிறைவு விழாக்களை நடத்த வேண்டும். இந்த திட்டங்களை செய்து முடிக்க வேண்டிய முழு பொறுப்பும், மாவட்டச் செயலர்கள், மண்டல பொறுப்பாளர்கள், தொகுதி பார்வையாளர்கள் ஆகியோருக்கு உண்டு.தமிழகத்தில் உள்ள அனைத்து வீடுகளில் உள்ளவர்களை சந்தித்திருக்க வேண்டும். எதிர்க்கட்சியினர் இல்லங்களுக்கு நேரில் சென்று பேச வேண்டும். பூத் கமிட்டிகளில், 30 சதவீதம் பேரை, உறுப்பினர்களாக சேர்க்கும் திட்டத்தை, நிறைவேற்ற முடியாத மாவட்டச் செயலர்கள், விருப்ப ஓய்வு பெற்றுக் கொள்ளுங்கள். இவ்வாறு முதல்வர் பேசினார் என, கட்சியினர் தெரிவித்தனர். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

Raj S
ஜூலை 01, 2025 02:48

சிறையில் கைதி மரணம், கஞ்சா, டாஸ்மாக் ஊழல், நீட் விளக்கு, கனிமவள ஊழல், திருட்டு திராவிடர்களின் ரவுடித்தனம் இப்படி நிறைய இருக்கு... இதெல்லாம் தடுக்க முடியாத "முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்" அவரை என்ன பண்றது?


Bhakt
ஜூன் 30, 2025 22:42

நைனா, இந்த படு மோசமான ஆட்சிகட்சி ஒட்டு மொத்தமா எப்போ ஒழியும்னு ச்சீ ஓய்வு பெறும்னு இருக்கு.


Ramesh Sargam
ஜூன் 30, 2025 22:16

முடியாதவர்கள் பிரசவ மருத்துவமனையில் அட்மிட் ஆகி சிகிச்சை பெறுங்கள்.


theruvasagan
ஜூன் 30, 2025 22:04

அநத காலத்தில் கப்பம் கட்ட தவறின குறுநில மன்னர்களை அரசன் பதவியிலிருந்து நீக்கி விடுவானாம்.


RAMESH
ஜூன் 30, 2025 20:18

உங்கள் குடும்ப உறுப்பினர்கள் கட்சிக்காக உழைப்பார்களா......இது என்ன உங்கள் குடும்ப சொத்தா


என்றும் இந்தியன்
ஜூன் 30, 2025 16:26

"முடியாதவர்கள் ஓய்வு பெறுங்கள் மா.செ.,க்களுக்கு முதல்வர் உத்தரவு" குழந்தாய் சுடலை மாயாண்டி ஜோசப் கான் அப்போ முதலில் நீ அப்படி செய்து நல்வழி காட்டு


theruvasagan
ஜூன் 30, 2025 16:00

விருப்ப ஓய்வு பெற மறுப்பவர்களை கட்டாய ஓய்வில் அனுப்பிடுவாங்களா. ரிடயர்மென்ட் பலன்கள் என்னன்ன கிடைக்கும். எதுக்குன்னா சம்பளமே 200 மற்றும் உற்சாகபானம் பிரியாணி . ஓய்வு பெற்ற பிறகு என்ன பெரிசா கிடைக்கப் போகுது.


Manaimaran
ஜூன் 30, 2025 13:33

உனக்கே முடியல ?


M Ramachandran
ஜூன் 30, 2025 12:10

முடியாதவங்க மட்டுமல்ல குடும்ப உறுப்பினருக்கு ஜிங் ஜாங் அடிக்க தயங்குறவங்க குஞ்சு குளுவான்களை கொஞ்சி மகிழாதவங்க மனம் மில்லாதவங்க தானாக கட்சியை விட்டு வெளியேரி விடுங்க. எங்க குடும்ப கும்பலிய்ய வைத்து கட்சி பணி அமைச்சர் பதவி கொடுத்தி விடுவேன். இது நடப்பது முகலாயர்கள் ஆட்சி. கட்சியும் நானெ அரசும் நானெ சட்டம் என் கையிலெ. ஆட்சிய எங்க குடும்ப இளவல்கள்கையில்


kannan sundaresan
ஜூன் 30, 2025 11:59

தமிழை சரியாக படிக்க தெரியாதவர்களுக்கும் இது பொருந்துமா


முக்கிய வீடியோ