உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / இந்திரா பவன்.. 47 ஆண்டுகளுக்கு பின் காங்கிரசுக்கு சொந்த கட்டடம்: பா.ஜ., பாணியில் காங்.,

இந்திரா பவன்.. 47 ஆண்டுகளுக்கு பின் காங்கிரசுக்கு சொந்த கட்டடம்: பா.ஜ., பாணியில் காங்.,

டில்லியில், 15 ஆண்டுகளாக நடந்து வந்த கட்டுமானப் பணிகள் முடிவடைந்த நிலையில், பிரமாண்ட புதிய தலைமை அலுவலகக் கட்டடத்தை சோனியா திறந்து வைத்தார். 47 ஆண்டுகளுக்கு பின் சொந்த கட்டடத்தில் காங்கிரஸ் குடியேறியுள்ளது.கடந்த, 1978 முதல் டில்லி அக்பர் சாலையில் உள்ள அலுவலகத்தில் காங்கிரஸ் இயங்கி வருகிறது. அரசியல் கட்சிகள் அலுவலகம் கட்டுவதற்கு என நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டதில், தீனதயாள் உபாத்யா சாலையில் காங்கிரசுக்கு இடம் கிடைத்தது.கடந்த 2009ல், அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங் கட்டுமானப் பணிகளை துவக்கி வைத்தார். பா.ஜ.,வின் முன்னோடியும், ஜனசங்க தலைவருமான தீனதயாள் உபாத்யாவின் பெயரை தவிர்க்க முடிவு செய்து, அதையொட்டி அமைந்துள்ள கோட்லா சாலை பக்கம் நுழைவாயில் இருக்கும்படி வைத்து கட்டுமானப் பணிகள் மளமளவென துவங்கின.மத்தியில் ஆட்சி அதிகாரத்தை இழந்தது, தொடர் தோல்விகள், கட்சியின் பொருளாளர் அகமது படேலின் திடீர் மறைவு, பணப்பற்றாக்குறை, கொரோனா காலம் என பல்வேறு காரணங்களால் கட்டுமானப் பணிகளில் தொய்வு ஏற்பட்டது. இவை எல்லாவற்றையும் ஒருவழியாக சமாளித்து கட்டடம் கட்டி முடிக்கப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது.காங்கிரஸ் முன்னாள் தலைவரும், பார்லிமென்ட் குழு தலைவருமான சோனியா ரிப்பன் வெட்டி புதிய கட்டடத்தை திறந்து வைத்தார். விழாவில் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், மூத்த தலைவர்கள் கே.சி. வேணுகோபால், பிரியங்கா உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

'இந்திரா பவன்'

அதிநவீன வசதிகளுடன் கூடிய இந்த அலுவலகத்திற்கு 'இந்திரா பவன்' என பெயரிடப்பட்டுள்ளது. இரண்டு ஏக்கர் நிலப்பரப்பில், தரைதளத்துடன் ஐந்து மாடிகளுடன் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது. 400 தலைவர்கள் ஒரே நேரத்தில் பங்கேற்கும் வகையில் உள் அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. 5வது தளத்தில், சோனியா, மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் ஆகியோருக்கு தனித்தனி அலுவலகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பா.ஜ., பாணியில்..

கடந்த 2018லேயே, புதிய அலுவலகத்திற்கு பா.ஜ., குடியேறி விட்டது. 7 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையிலும் நம்பர் 11, அசோகா சாலையில் அமைந்துள்ள பழைய அலுவலகத்தை பா.ஜ., இன்னும் காலி செய்து அரசிடம் ஒப்படைக்கவில்லை. அதே பாணியில் காங்கிரசும் அக்பர் சாலை பழைய அலுவலகத்தை காலி செய்யப்போவதில்லை. மாறாக, அங்கிருந்தபடி கட்சியின் சில பிரிவுகள் பணிகளை மேற்கொள்ள உள்ளன. பா.ஜ., அலுவலகத்தைப் போலவே இந்த புதிய அலுவலகத்திலும் முதல் தளம் வரை மட்டுமே பத்திரிகையாளர்களுக்கு அனுமதி என தெரிவிக்கப்பட்டுள்ளது.- நமது டில்லி நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

பேசும் தமிழன்
ஜன 16, 2025 18:59

இந்த கட்டிடம்.... கான் கிராஸ் கட்சி பெயரில் இருக்குமா... இல்லை இத்தாலி மாஃபியா கும்பல் கட்டுபாட்டில் இருக்குமா ???


அன்பே சிவம்
ஜன 16, 2025 16:38

1). முழுகி கொண்டு இருக்கும் கப்பலுக்கு முகவரி எதற்கு? 2). காங்கிரஸின் உப தலைவர் மற்றும் தமிழகத்தின் மன்னர் பரம்பரையை அங்கு காணவில்லை! 3). பழைய old model building போல் தெரிகிறதே! பழைய எண்ணங்கள்! 4). Rahul வழக்கம் போல் மறதியாக பழைய office போய் விடக்கூடாது என்பது எல்லா காங்கிரஸ் தொண்டர்களின் வேண்டுகோள்.


வல்லவன்
ஜன 16, 2025 14:39

காங்கிரஸ் அடுத்த தேர்தலில் ஆட்சியை இந்திய ஆட்சியை பிடிக்கும்


ஆரூர் ரங்
ஜன 16, 2025 10:34

இப்போது கூட சொந்த நிதியை செலவழிக்க மறுத்து அரசு இடத்தில் கட்டியுள்ளனர். கட்சியின் நிதி குடும்ப ட்ரஸ்ட் நிதியாக ஆனதோ?


thiravadan
ஜன 16, 2025 08:39

மீண்டும் சர்க்கஸ் கூடாரம் திறப்பு... ராகுல் கான் கோமாளி யின் நடிப்பு அருமை


lana
ஜன 16, 2025 07:29

அவர்கள் சொந்த கட்சி அலுவலகம் கட்டுவதற்கு இவ்வளவு தாமதம். இவர்கள் அரசு கட்டிடங்கள் எவ்வளவு வேகமாக கட்டுவதற்கு அக்கறை காட்டி இருப்பார்கள்


ராமகிருஷ்ணன்
ஜன 16, 2025 07:14

கட்டிடம் கட்ட ஆரம்பித்த நாளில் இருந்து பல்வேறு தடைகள், இறுதியில் இறுதி மரியாதை செய்ய காங்கிரஸுக்கு நினைவு இல்லம் கிடைத்தது விட்டது


பிரேம்ஜி
ஜன 16, 2025 08:02

அருமையான கருத்து. உண்மைதான்!


புதிய வீடியோ