உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / காங்கிரஸ் சிதம்பரத்துக்கு முட்டு கொடுக்கும் திருமாவளவன்

காங்கிரஸ் சிதம்பரத்துக்கு முட்டு கொடுக்கும் திருமாவளவன்

திருச்சி: ''காங்கிரஸ் தலைமையிலான 'இண்டி' கூட்டணியை வலுப்படுத்தும் நல்ல நோக்கத்தில் தான், அக்கட்சியின் மூத்த தலைவர் சிதம்பரம் கருத்து சொல்லியிருக்கலாம்,'' என, விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் முட்டுக் கொடுத்து பேசியுள்ளார்.

வலிமையாக இல்லை

திருச்சியில் அவர் அளித்த பேட்டி: https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=3y380amk&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மதச்சார்பின்மையை காக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அதனால், திருச்சியில் மதச்சார்பின்மை காப்போம் பேரணியை அறிவித்தோம். அது, ஜூன் 14க்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த பேரணியில், சட்டத்தின் மீது, மதச்சார்பின்மை மீது, ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உள்ள அனைவரும் பங்கேற்க வேண்டும். பல்கலைகளுக்கு துணைவேந்தர் நியமிக்கும் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் சமீபத்தில் வழங்கிய தீர்ப்பு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில், உச்ச நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் வகையில் மத்திய அரசு நடந்து கொள்கிறது. ஜனாதிபதியை கொண்டு பா.ஜ., அரசு, 14 கேள்விகளை உச்ச நீதிமன்றத்திடம் விளக்கம் என்ற பெயரில் கேட்டுள்ளது.இண்டி கூட்டணி வலிமையாக இல்லை என்று காங்., மூத்த தலைவர் சிதம்பரம் கூறியிருப்பது, அவருடைய சொந்த கருத்து தான். ஆனாலும், இண்டி கூட்டணியை இன்னும் கூடுதலாக வலுப்படுத்த வேண்டும் என்ற நல்ல நோக்கம்தான் பின்னணியாக இருக்க வேண்டும். இண்டி கூட்டணி எம்.பி., தேர்தலை சந்தித்து ஓராண்டாகிவிட்டது. தேவைப்படும் போது, அனைத்து கட்சிகளை சேர்ந்தோரும் ஒன்றிணைந்து செயல்படுவோம். தமிழகத்தில் தி.மு.க., தலைமையிலான கூட்டணி தான், கூட்டணி என்ற வடிவத்தோடு உள்ளது. அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி, தேர்தல் வரை தொடருமா என்று தெரியவில்லை.

நிச்சயம் வெற்றி

அவர்கள் கூட்டணியில் அங்கம் வகிப்பதாக சொல்லப்படும் பா.ம.க., - தே.மு.தி.க., ஆகிய கட்சிகள், வரும் சட்டசபை தேர்தலில் எந்த கூட்டணியில் இடம் பெறப் போகின்றன என்று உறுதியான நிலைப்பாடு எதையும் எடுக்கவில்லை. வரும் 2026 தேர்தலில், தி.மு.க., தலைமையிலான எங்கள் கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும். இவ்வாறு திருமாவளவன் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

S Ramkumar
மே 20, 2025 12:26

ஜனாதிபதி உச்சநீதி மன்றத்திடம் கேள்விகளை கேட்டு உள்ளார். அதற்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம்.


Haja Kuthubdeen
மே 20, 2025 12:18

தமிழ்நாட்டில் பரபரப்பா முக்கிய விசயம் நடந்து கிட்டு இருக்கு.. அதெல்லாம் தெரியாம தினதினம் எல்லோருக்கும் அறிவுரை வழங்கிட்டு கிடக்கு...


S Sivakumar
மே 20, 2025 11:16

திரு திருமா மதம் மற்ற மதமாற்ற எந்த கொள்கை விளக்கக் வேண்டும்


VENKATASUBRAMANIAN
மே 20, 2025 07:41

சீட்டுக்கும் ஓட்டுக்கும் எப்படியெல்லாம் முட்டு கொடுக்க வேண்டியுள்ளது. திருட்டு கும்பல். மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும்


SUBBU,MADURAI
மே 20, 2025 06:47

இன்னும் எத்தனை நாளைக்குதான் இந்த மதச்சார்பின்மை என்ற வார்த்தையை சொல்லி தமிழக மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்க போகிறீர்கள்?


kumarkv
மே 20, 2025 06:43

இத ஒரு நாசமாய் போற கட்சி


A Viswanathan
மே 20, 2025 12:52

Most useless, unethical fellow.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை