உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / விஜய் கட்சியுடன் கூட்டணி வேணும்; கேட்கும் தமிழக காங் எம்பி.,க்கள்

விஜய் கட்சியுடன் கூட்டணி வேணும்; கேட்கும் தமிழக காங் எம்பி.,க்கள்

தமிழக தேர்தல் பரபரப்பு டில்லி காங்., அலுவலகத்திலும் தொற்றிக் கொ ண்டுவிட்டது. விஜய்க்கு வரும் கூட்டத்தைப் பார்த்து டில்லி காங்., தலைவர்கள் அதிர்ந்துவிட்டனர். ஏற்கனவே யாரோடு கூட்டணி என்பது குறித்து தமிழக காங்கிரசில் இரண்டு கோஷ்டிகள் உருவாகிவிட்டன. செல்வப்பெருந்தகை கோஷ்டி தி.மு.க.,வுடன் தொடர வேண்டும் என்கிறது. இன்னொரு கோஷ்டியோ விஜய் கட்சியுடன் கூட்டணி என்கிறது.இதற்கிடையே தமிழக காங்., - எம்.பி.,க்கள் சிலர், டில்லி சீனியர் காங்., தலைவர்களை சந்தித்து, 'விஜய் கட்சியுடன் கூட்டணி அமைக்க வேண்டும். அவருக்கு பெரும் ஆதரவு உள்ளது. அதோடு விஜய் முதல்வரானால் நமக்கும் ஆட்சியில் பங்கு கிடைக்கும்' என, வற்புறுத்தி வருகின்றனர்.செல்வப்பெருந்தகை தமிழக காங்., தலைவராக நீடிக்கும் வரை, தி.மு.க., கூட்டணியில் தான் காங்., நீடிக்கும் என, சில தலைவர்கள் கூறுகின்றனர். அதே சமயம் மேலிடம் என்ன முடிவெடுத்தாலும் அதற்கு தமிழக தலைவர்கள் கட்டுப்பட்டுத்தான் ஆக வேண்டும் எனவும் சொல்கின்றனர்.இதனால், காங்கிரசின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குழப்பத்தில் உள்ளார். காங்கிரசின் இப்போதைய கவனம் அனைத்தும் நவம்பரில் நடக்கவுள்ள பீஹார் சட்டசபை தேர்தல் பக்கம் உள்ளது. அது முடிந்ததும் தமிழகம் மீது கவனம் செலுத்தும் என சொல்லப்படுகிறது. தி.மு.க., கூட்டணியை விட்டு காங்., விலகுவது சற்று கடினமான காரியம்தான். ஆனால், அரசியலில் எதுவும் நடக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !