மேலும் செய்திகள்
எஸ்.ஐ.ஆர்., பணியில் தி.மு.க.,வினர் மிரட்டல்
26 minutes ago
அ.தி.மு.க., - தே.மு.தி.க., கூட்டணி மலருமா?
2 hour(s) ago
புதுக்கோட்டை: ''தி.மு.க., வெற்றி பெறுவதற்கு காங்கிரஸ் ஓட்டுகள் முக்கிய காரணமாக உள்ளது,'' என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்தார். புதுக்கோட்டையில், நேற்று முன்தினம் அவர் அளித்த பேட்டி:
பீஹார் தேர்தல் முடிவுகள் எந்த விதத்திலும் தமிழகத்தை பாதிக்காது; தமிழக காங்கிரஸ் கட்சிக்கு எந்த பாதகமும் இல்லை. வரும் 2029 லோக்சபா தேர்தலில் ராகுல் பிரதமராவார். தமிழக மக்களை வஞ்சிக்கவே, தேர்தல் கமிஷனும், மத்திய அரசும் இணைந்து எஸ்.ஐ.ஆர்., எனும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தை கொண்டு வந்துள்ளன. தி.மு.க., தங்களை மதிக்கவில்லை என்றும் தங்களுடன் ஒத்துப்போகவில்லை என்றும் தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் கூறி வருகின்றனர். இது குறித்து எங்களது டில்லி தலைமைக்கும் தி.மு.க., தலைமைக்கும் எடுத்துக்கூறி பிரச்னையை சரி செய்வோம். தேர்தலில், தி.மு.க., வெற்றி பெறுகிறது என்றால் அதில், காங்கிரஸ் கட்சியின் ஓட்டுகளும் முக்கியமாக உள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோல் இருந்தால் தான், ஒரு இடத்துக்கு வாகனத்தில் செல்ல முடியும் எனும்போது, உங்கள் வாகனத்தில் 900 மி.லி., பெட்ரோல் மட்டுமே உள்ளதாக வைத்துக் கொள்வோம். மீதமுள்ள 100 மி.லி.,யை மற்றவரிடம் பெற்று, அந்த இடத்துக்கு செல்லலாம். அதாவது, 100 மி.லி., பெட்ரோல் இருந்ததால் தான் இலக்கை அடைய முடிந்தது. அதுபோல தான், தி.மு.க.,வும் காங்கிரசும். தி.மு.க., வலிமையாக இருந்தாலும், காங்கிரஸ் ஓட்டுகளை வைத்து தான் தி.மு.க., வெற்றி பெறுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
26 minutes ago
2 hour(s) ago