உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / டில்லி உஷ்ஷ்ஷ்: தமிழிசையை அடுத்து..ஒடிசா கவர்னர் ரகுபீர் தாஸ்

டில்லி உஷ்ஷ்ஷ்: தமிழிசையை அடுத்து..ஒடிசா கவர்னர் ரகுபீர் தாஸ்

புதுடில்லி: கவர்னர்கள் பதவியைத் துறந்து, தீவிர அரசியலில் ஈடுபட்டு வருவது, தற்போது வழக்கமாகி விட்டது. தெலுங்கானா கவர்னராக பதவியில் இருந்த தமிழிசை, லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். தற்போது, மற்றொரு கவர்னரும் பதவி விலகி, அரசியலில் ஈடுபட தயாராகி வருகிறார்.அவர் ஒடிசா கவர்னர் ரகுபீர் தாஸ்; இவர் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர். அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா, ஜார்க்கண்ட் பா.ஜ.,வின் பொறுப்பாளராக உள்ளார். இவரும், ஒடிசா முதல்வர் மோகன் சரண் மஜியும், கவர்னர் தாஸை சமீபத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினர். முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவும், ரகுபீர் தாஸை சந்தித்துள்ளார்.'இதையெல்லாம் பார்க்கும்போது, ரகுபீர் தாஸ் நிச்சயம் பதவியை ராஜினாமா செய்து விட்டு, தீவிர அரசியலுக்கு வருவார்' என்கின்றனர்.ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தல் நவம்பர்-, டிசம்பரில் நடைபெற உள்ளது. ஜார்க்கண்ட் மற்றும் மஹாராஷ்டிரா மாநில தேர்தல் தேதிகளை, தேர்தல் ஆணையம் விரைவில் அறிவிக்க உள்ளது. ஜாம்ஷெட்பூர் லோக்சபா தொகுதியை, ஐந்து முறை தொடர்ச்சியாக வென்றவர், தாஸ். கடந்த 2019ல், பா.ஜ., அதிருப்தியாளரிடம் 15,000 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.'ஜார்க்கண்டில் பவர் சென்டராக இருந்த ரகுபீர் தாஸ், மீண்டும் அரசியலுக்கு வருவது நிச்சயம்' என, பா.ஜ.,வில் சொல்லப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

அப்புசாமி
அக் 06, 2024 17:36

ரெண்டாவது விக்கெட் டவுன். பா.ஜ ஆளுங்க வெச்சு செய்வாங்க.


ஆரூர் ரங்
அக் 06, 2024 09:18

ஜார்கண்ட் மாநிலத்துடன் தொடர்பு குறைந்து விட்டது. சட்டசபைத் தேர்தலில் நிச்சய வெற்றி எனும் போது ஒரு புதுமுகத்தை முதல்வர் வேட்பாளராக அறிவிக்கலாம்.


RAMAKRISHNAN NATESAN
அக் 06, 2024 08:04

டுமீலிசை மாதிரி ரகுபீர் தாஸ் அந்த அளவுக்கு மக்கள் சேவைக்கு முன்னுரிமை கொடுக்குறாரு .........


புதிய வீடியோ