உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / டில்லி உஷ்ஷ்ஷ்: அமித் ஷாவின் ஆவேசம்

டில்லி உஷ்ஷ்ஷ்: அமித் ஷாவின் ஆவேசம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'மூன்று மொழிக் கொள்கை, தமிழகத்திற்கு பணம் தரவில்லை, வக்பு சட்டம்' என, பல விஷயங்களை வைத்து, மத்திய அரசை எதிர்த்து, சட்டசபையிலும், வெளியிலும், தி.மு.க., பேசி வருகிறது.'இதற்கு பதிலும் தர வேண்டும். அதேசமயம், தகுந்த ஆவணங்களைக் காட்டி, பார்லிமென்ட் ரெகார்டில் வரும்படி செய்து, தி.மு.க.,வை ஒரு வழியாக்க வேண்டும்' என, ஒரு திட்டத்தை தயார் செய்தாராம், உள்துறை அமைச்சர் அமித் ஷா; அதன்படி ஆறு மத்திய அமைச்சர்களுக்கு உத்தரவிடப்பட்டது.பார்லிமென்டின் கேள்வி நேரம் மற்றும் விவாத நேரத்தின் போதும், இந்த அமைச்சர்கள் தி.மு.க.,வை ஒரு பிடிபிடித்து விட்டனர். இதற்கு தலைமை தாங்கி, தாக்குதலை துவங்கியவர் உள்துறை அமைச்சர். 'இலங்கை பிரச்னையில் தி.மு.க., என்ன செய்தது? 10 ஆண்டுகள் காங்கிரசுடன் கூட்டணி ஆட்சி நடத்தியது தி.மு.க., தானே?' என, கடுமையாக தாக்கியவர், '39 தமிழக எம்.பி.,க்கள், தமிழக நலன் குறித்து என்ன பேசினர், என்ன செய்தனர்?' எனவும் கேள்வி எழுப்பினார் ஷா.'போதைப்பொருட்களும், மதுவும் தமிழகத்தை நாசப்படுத்திக் கொண்டிருக்கின்றன. 2026 தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் வரும்போது, இதெல்லாம் இருக்காது' என அமித் ஷா கூறியபோது, தி.மு.க., - எம்.பி.,க்களால் வாய் திறக்க முடியவில்லை.ஒரு தி.மு.க., - எம்.பி.,க்கு அவையில் வகுப்பெடுத்துவிட்டார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். தேசிய கிரைம் பீரோ ஆவணங்களை சுட்டிக்காட்டி, 'தமிழகத்திலிருந்து அதிக அளவில் சைபர் குற்றங்கள் அதிகரித்துள்ளன' என, அவையில் பேசினார், மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்.இப்படி தி.மு.க.,வை பார்லிமென்டில் உலுக்கிவிட்டனர் மத்திய அமைச்சர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

கிஜன்
மார் 30, 2025 21:39

திராவிட அதிமுகவுடன் சேர்ந்து அதன் தலைமையில் திராவிட திமுகவை தோற்கடிப்பார்களாம் .... அது அவா வெற்றியாம் ... அப்புறம் பாலாறும் தேனாறும் ஓடுமாம் .... அப்படி நடந்தால் தமிழகத்தில் சேன்ஸ்கிரிட் வந்துவிடும் ....


Saai Sundharamurthy AVK
மார் 30, 2025 20:16

பார்லிமெண்ட் ரெகார்டில் திருட்டு திமுக பற்றிய இன்னும் பல விஷயங்களை சேர்க்க வேண்டும்.


V Gopalan
மார் 30, 2025 16:50

So far many ED, IT Raids took place in Tamilnadu. Either the Supreme court will dismiss the case saying no evidence nor took any further action. Many are on bail and no further action till date taken. BJP gives a lot of flowers to cover the ears.


Sridhar
மார் 30, 2025 11:23

இவ்வளவு பெரிய கொள்ளை அடிச்சிருக்காங்க, அவங்க மேல சரியான நடவடிக்கை எடுக்க வக்கில்ல, சும்மா பார்லியமென்ட்ல அட்டகத்தி வீசினா எல்லாம் சரியாயிடுமா? தேர்தல் வர்றதுக்கு இன்னும் ஒரு வருஷம் கூட இல்ல. இதுவரைக்கும் மாநில பிஜேபி கிராம பகுதிகள்ல மக்கள் தொடர்பு நடவடிக்கைகள் ஒன்றுகூட ஆரம்பிக்கவில்லை. ஒரு நடிகனுக்கு இருக்கற கவர்ச்சிகூட இல்லாத தலைமையை வச்சுக்கிட்டு கொஞ்சம்கூட கட்டமைப்பை வலுப்படுத்தற சிந்தனையும் இல்லாம, ஏனோதானோனு கட்சி நடத்திட்டு இருக்காங்க. ஜெயிக்கணும்ங்கற ஆசையே இல்லாத ஒரே கட்சி தமிழக பிஜேபியாதான் இருக்கும். காந்தி சுதந்திரம் வாங்க போராடினதுபோல இருக்கு ஒரு இலக்கோ அதை பற்றிய தீவிர சிந்தனையோ செயல்பாடுகளோ இல்லாமல், பொழுதுபோக்கு கூட்டம் மாதிரி அப்பப்போ கொஞ்சம் வீராவேசம் காண்பிக்கறதுன்னு ... ரொம்ப கேவலம்


venugopal s
மார் 30, 2025 11:11

மத்திய பாஜக அரசு தமிழகத்தின் எதிரி ,தமிழின விரோதி என்ற உண்மையை திமுக தமிழக மக்கள் மனதில் ஆழமாக விதைத்து விட்டது.அதன் விளைவுகள் அடுத்த சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு புரியும்!


krishna
மார் 30, 2025 15:47

EERA VENGAAYAM VENUGOPAL YAARU MANADHIL UNGALAI PONDRA 200 ROOVAA GOPALAPURAM AAYUTKAALA KOTHADIMAI MANADHILDHAANE.INDHA NAATHAM PIDITHA TASMAC KANJA MANAL KANIMAVALA KOLLAI DRAVIDA MODEL VIDIYAA AATCHIKKU EPPADI IVVALAVU KEVALA MUTTU JUST 200 OOVAA COOLIKKU.


subramanian
மார் 30, 2025 22:10

அறிவிலி.


தமிழ்வேள்
மார் 30, 2025 10:42

இந்திய ராணுவத்தை உள்ளே இறக்கி திராவிடத்தை வெளுத்து முடமாக்காமல் இவர்கள் என்ன விதமான அரசியல் நடவடிக்கை எடுத்தாலும் தமிழகம் திருந்தாது... குடிகார கும்பலை அடித்து உதைத்து நொறுக்கி தான் வழிக்கு கொண்டு வர முடியும்... அடுத்த பத்து தலைமுறையும் தன்னுடைய டிஎன்ஏ வில் பயம் என்பதை பதியவைக்கும் வகையில் மத்திய சர்க்கார் நடவடிக்கை இருக்க வேண்டும்... திராவிடத்தின் கொழுப்பு மிதமிஞ்சி போய் விட்டது....


கிஜன்
மார் 30, 2025 10:20

எல்லா ஆவேசமும்.. ஆழ்வார்பேட்டை ஆண்டவர் அங்கு வரும் வரையில் தான்.. அப்புறம் தான இருக்கு ...தலைவனோட ஆட்டம்.


ராஜா
மார் 30, 2025 06:58

இந்த செய்திகள் தமிழக மக்களை சென்றடையவில்லை. பத்திரிக்கைகள், ஊடகங்கள் எல்லாம் திமுகவின் கைப்பாவை ஆகிவிட்டது. ஜனம் டிவி, தாமரை டிவி நிகழ்ச்சிகள் மக்களை ஈர்க்கவில்லை. இவற்றை எல்லாம் சரி செய்தால்தான் திராவிட இருட்டில் அடைக்கப்பட்ட மக்களை காப்பாற்ற முடியும்


Kumar
மார் 30, 2025 06:02

எதற்காக பாஜக வுக்கு இப்படி முட்டு குடுக்கிறது


guna
மார் 30, 2025 08:14

உன் போன்ற 200 ரூபாய் கு புரியாது


Prabhakar Krishnamurthy
மார் 30, 2025 04:27

மற்ற தமிழக ஊடகங்கள் இதை பற்றி பேசவெல்லேயே. பிஜேபி தமிழ்நாட்டிற்கு விரோதி என்ற முத்திரை ஐ என விஜய், திமுக படிக்க முயல்கிறார்கள் விஜயின் மேல் நடு மட்ட வகுப்பினருக்கு ஈர்ப்பு குறைய ஆரம்பித்தது விட்டது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை