வாசகர்கள் கருத்துகள் ( 1 )
தினமலர் உக்ஷ்க்ஷ்க்ஷ்
புதுடில்லி: எம்.பி.,க்கள் டில்லியில் வசிக்க, அவர்களுக்கு அரசு தரப்பிலிருந்து வீடுகள் ஒதுக்கப்படுகின்றன. எம்.பி.,யின் சீனியாரிட்டியைப் பொறுத்து, தோட்டத்துடன் கூடிய பெரிய பங்களா சிலருக்கு ஒதுக்கப்படும். முதன் முறையாக எம்.பி., பதவி வகிப்பவர்களுக்கு அடுக்குமாடி அபார்ட்மென்டில் வீடு வழங்கப்படும்.இப்படி வீடுகள் ஒதுக்கப்படுவதில், உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பங்கு அதிகம். பா.ஜ., கூட்டணி கட்சியைச் சேர்ந்த ஒரு பிரபலத்திற்கு பெரிய பங்களா கொடுக்கப்பட்டது, டில்லி அரசியல் வட்டாரங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.மஹாராஷ்டிராவின் துணை முதல்வர் அஜித் பவார்; இவர், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியை உடைத்து, பா.ஜ., கூட்டணியில் சேர்ந்தவர். இவருடைய மனைவி சுனேத்ரா பவார். இவர், ராஜ்ய சபா எம்.பி.,யாக தற்போது உள்ளார்; முதன் முறையாக எம்.பி.,யாகியுள்ள சுனேத்ராவுக்கு டில்லியின் பிரபல பகுதி யான ஜன்பத்தில், 11ம் எண் பெரிய பங்களா ஒதுக்கப்பட்டுஉள்ளது. சரத் பவார் வீட்டிற்கு எதிரே உள்ளது இந்த பங்களா.'முதன்முறை எம்.பி.,யான இவருக்கு இவ்வளவு பெரிய பங்களாவா' என, மற்ற எம்.பி.,க்கள் ஆச்சரியப்படுகின்றனர். எண் 10, ஜன்பத் பங்களாவில் சோனியா வசிக்கிறார். மற்ற அரசியல் பிரபலங்களும் இங்கு உள்ளனர்.'மஹாராஷ்டிரா அரசியலில், சரத் பவாரை ஒழித்துக்கட்ட, அஜித் பவாருக்கு அமித் ஷா முக்கியத்துவம் தருகிறார் என்பதற்கு, இந்த பங்களா ஒதுக்கீடு ஒரு உதாரணம்' என, சொல்லப்படுகிறது.
தினமலர் உக்ஷ்க்ஷ்க்ஷ்