உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / டில்லி உஷ்ஷ்ஷ்: ராகுலுக்கு முக்கியத்துவம்?

டில்லி உஷ்ஷ்ஷ்: ராகுலுக்கு முக்கியத்துவம்?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ராகுலின் சகோதரி பிரியங்கா, கேரளாவின் வயநாடு லோக்சபா தொகுதியிலிருந்து எம்.பி.,யாக வெற்றி பெற்று, முதன் முறையாக எம்.பி.,யாகி உள்ளார். அம்மா, மகள், மகன் என குடும்பமே இப்போது எம்.பி.,யாக உள்ளனர்.'பிரியங்காவிற்கு சக காங்., - எம்.பி.,க்கள் அந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லையோ' என, பலருக்கும் சந்தேகம் எழுந்துள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=v6g0e0wg&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ராகுல் எப்போது சபைக்குள் வந்தாலும், உடனே காங்., - எம்.பி.,க்கள் தங்கள் இருக்கைகளிலிருந்து எழுந்து நின்று வரவேற்கின்றனர். சில காங்., - எம்.பி.,க்கள் பாதி உட்கார்ந்த நிலையிலும், பாதி எழுந்திருக்கும் நிலையிலும் மரியாதை தருகிற மாதிரி ஒரு, 'பாவ்லா' காட்டுகின்றனர்.அத்துடன், ராகுல் பார்லிமென்டிற்கு வரும்போதும், அவர் வெளியே போகும்போதும் எம்.பி.,க்களான வேணுகோபால், சசி தரூர் மற்றும் மாணிக்கம் தாக்கூர் ஒட்டிக் கொண்டே இருக்கின்றனர்; ஆனால் பிரியங்காவை எந்த எம்.பி., யும் கண்டுகொள்வதில்லை. இதை, பா.ஜ.,வினர் கவனித்து வருகின்றனர். 'ராகுல் எதிர்க்கட்சி தலைவராக உள்ளார்; அதனால் தான் இந்த மரியாதை' என்கின்றனர் காங்கிரசார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Dharmavaan
டிச 22, 2024 13:05

காங்கிரஸ் கொத்தடிமைகள் என்று திருந்தும் இந்த நாடு


Barakat Ali
டிச 22, 2024 09:42

எல்லோரும் மக்கள் வரிப்பணத்தில் மஞ்சக்குளிங்க .....


anonymous
டிச 22, 2024 08:47

அவர் சபையில் தூங்கும்போது யாரும் உதவவில்லையே ஏன்?


சமீபத்திய செய்தி