புதுடில்லி: லோக்சபா தேர்தலில் மோடியை எதிர்த்து அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓரணியில் சேர்ந்து ஆரம்பிக்கப்பட்ட, 'இண்டி' கூட்டணி, தற்போது காணாமல் போய்விட்டது. மம்தா பானர்ஜி, ஒமர் அப்துல்லா, லாலு பிரசாத் யாதவ், உத்தவ் தாக்கரே என, முக்கிய தலைவர்கள் கூட்டணியிலிருந்து பிய்த்துக்கொண்டு சென்று விட்டனர்.இது, வட மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மம்தா, லாலு உட்பட சில தலைவர்கள் டில்லி சட்டசபை தேர்தலில், கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக குரல் கொடுத்து உள்ளனர். அதாவது, காங்கிரசுக்கு எதிராக பிரசாரம் செய்கின்றனர்; இது, ராகுலுக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=wk48a79x&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இண்டி கூட்டணியில் காங்., ஆதரவாக தற்போது இருக்கும் ஒரே கட்சி தி.மு.க., தான். 'வட மாநில அரசியல் மாற்றம் தி.மு.க.,வை மடை மாற்றுமா' என, காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் மற்றும் மல்லிகார்ஜுன கார்கே சந்தேகப்படுகின்றனர். காங்கிரசின் சில சீனியர் தலைவர்கள், தி.மு.க., - எம்.பி.,க்களிடம் பேசி, அவர்கள் கருத்தை கேட்டு வருகின்றனர்.தி.மு.க.,வை பொறுத்தவரை காங்கிரசை கைவிடாது; காரணம், காங்கிரஸ் கூட்டணி இருந்தால் தான், தமிழகத்தில் தி.மு.க., வெற்றி பெற முடியும். என்ன தான் மம்தா, கெஜ்ரிவால் ஆகியோர் ஸ்டாலினுக்கு ஆதரவாக இருந்தாலும், தி.மு.க.,வால் காங்கிரசை விட்டுக் கொடுக்க முடியாது.இந்நிலையில், தமிழக கட்சி தலைவர்கள் டில்லி தேர்தலில் பிரசாரம் செய்ய உள்ளனர். லட்சக்கணக்கில் தமிழர்கள் டில்லியில் வசிக்கின்றனர்; இவர்களுடைய ஓட்டுகளை கவர, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, தமிழ் மாநில காங்., தலைவர் வாசன் ஆகியோர் பிரசாரம் செய்ய உள்ளனர்; வேறு சில தமிழக பா.ஜ., தலைவர்களும் பிரசாரம் செய்ய உள்ளனர். காங்கிரசுக்கு ஆதரவாக தி.மு.க., தலைவர்கள் டில்லியில் பிரசாரம் செய்ய முன்வருவரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.