உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / டில்லி உஷ்ஷ்ஷ்: பா.ஜ.,வின் கூட்டணி கணக்கு

டில்லி உஷ்ஷ்ஷ்: பா.ஜ.,வின் கூட்டணி கணக்கு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'பா.ஜ.,வுடன் கூட்டணி இல்லவே இல்லை' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி பல முறை சொன்னாலும், டில்லியில் நிலைமை வேறு மாதிரியாக உள்ளது. 'ஜனவரி இறுதியில் அல்லது பிப்ரவரி முதல் வாரத்தில் பா.ஜ.,வின் புதிய தேசிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார். இதன் பின், தமிழ கத்தில் மீண்டும் அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைக்கும் வேலைகள் ஆரம்பிக்கும்' என பா.ஜ.,வில் பேசப்படுகிறது.'கூட்டணிக்காக என்ன வேலைகளை செய்ய வேண்டும் என, ஒரு சில தமிழக தலைவர்கள் பா.ஜ., தலைவர்களிடம் கூறி உள்ளனர். அதை நடைமுறைப்படுத்த, நட்டாவிற்கு பதிலாக பதவியேற்கும் பா.ஜ., தேசிய தலைவர் அமல்படுத்துவார்' என்கின்றனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=5k28xaur&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அ.தி.மு.க.,வின் முன்னாள் அமைச்சர்களான வேலுமணி மற்றும் தங்கமணி ஆகியோருடன் நெருக்கமாக இருப்பவர், மத்திய அமைச்சர் பியுஷ் கோயல்; இவர் விரைவில் தமிழகம் வர உள்ளாராம். கூட்டணி தொடர்பான பூர்வாங்க வேலைகளை செய்ய உள்ளதாக சொல்லப்படுகிறது. பா.ஜ.,வின் தேசிய தலைவர், அ.தி.மு.க., பொதுச்செயலரை டில்லி வரும்படி அழைப்பு விடுப்பார் என்றும் சொல்லப்படுகிறது.இதையடுத்து, 'டில்லியில் உள்ள அ.தி.மு.க., அலுவலகத்தை பார்வையிட பழனிசாமி டில்லி வருவார்; அப்போது, பா.ஜ., தலைவர்களை சந்திப்பார்' என டில்லி பா.ஜ., தலைவர்கள் கூறுகின்றனர்.'தேர்தல் என்றால் வெற்றி தான் முக்கியம்; அதற்கு கூட்டணி அவசியம். கூட்டணி அமைத்து, தமிழகத்தில் போட்டியிட்டால், தி.மு.க.,வை வீழ்த்த முடியும். எனவே, பா.ஜ., கூட்டணிக்கான வேலைகளில் இறங்கியுள்ளது' என, பா.ஜ., தலைவர்கள் கூறுகின்றனர்.அ.தி.மு.க.,விலும், சில தலைவர்கள், 'கூட்டணி அமைத்து போட்டியிடாவிட்டால், அ.தி.மு.க., காணாமல் போய்விடும்' என்கிற கருத்தில் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

மோகன் சுந்தரம் லண்டன்
ஜன 12, 2025 13:33

இவனுங்க சரியான மானங்கெட்ட பிறவிகள்.


SP
ஜன 12, 2025 13:11

தோல்வி என்றாலும் பாஜக தனித்து தான் போட்டியிட வேண்டும். அதிமுகவுடன் கூட்டணி வேண்டாம். கூட்டணி வைப்பதாக இருந்தாலும் எடப்பாடியார் இல்லாத அதிமுக தான் சரி வரும்.


Oviya Vijay
ஜன 12, 2025 10:12

பாஜக தேசியத் தலைமையின் முடிவும் தமிழக தலைமையின் முடிவும் வெவ்வேறு... மேலும் பாஜக 2026 தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டாலும் அக்கூட்டணி தோல்வியே பெறும். மக்கள் நம்பிக்கை என்பது இந்த இரண்டு கட்சிகள் மீதும் கிடையாது. 2026 தேர்தல் முடிவு என்பது அதிமுக வரலாற்றில் மிகப்பெரிய அதிர்ச்சியைக் கொடுக்கக் கூடியதாக இருக்கும். அக்கட்சியே காணாமல் போவதற்கான வாய்ப்பும் உண்டு. கூட்டணி அமைத்து போட்டியிட்டாலும் தேர்தல் முடிவுக்கு பிறகு வழக்கம் போல் ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்திக் கொள்வர்... தவெக கட்சித் தலைவர் தற்போது அவருடைய கடைசி திரைப்படத்தில் பிஸியாக உள்ளார். அதை முடித்துக் கொடுத்துவிட்டு வந்தவுடன் அவரது ஆட்டமும் வெகுவாக இருக்கும். அந்த கட்சி 2026 தேர்தலில் வாங்கப் போகும் வாக்குகள் பாஜக மற்றும் அதிமுகவே மிரண்டு போகக்கூடிய வகையில் மிகக் கணிசமாக இருக்கும்.


புதிய வீடியோ