உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / டில்லி உஷ்ஷ்ஷ்: நெருக்கடியில் மஹாராஷ்டிரா முதல்வர்

டில்லி உஷ்ஷ்ஷ்: நெருக்கடியில் மஹாராஷ்டிரா முதல்வர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: மஹாராஷ்டிராவில் பா.ஜ., கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. சட்டசபையில், 288 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். இதில், பா.ஜ., மற்றும் அதன் கூட்டணி கட்சியை சேர்ந்த, 238 பேர் உள்ளனர். அதாவது, மொத்த எம்.எல்.ஏ.,க்களில் 82 சதவீதம் பா.ஜ., கூட்டணி. ஆனாலும், கடந்த நான்கு மாதங்களாக முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் திண்டாடி வருகிறார்.ஒரு பக்கம், கூட்டணியில் உள்ள சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் தங்களுக்கு சரியான பதவிகள் தரப்படவில்லை என, வெறுப்பில் உள்ளனர். இன்னொரு பக்கம், பா.ஜ.,விலேயே குழப்பம் நிலவுகிறது. 'புதிதாக வந்தவர்களுக்கு பதவிகளை அள்ளிக் கொடுத்து, சீனியர்களை மட்டம் தட்டிவிட்டனர்' என, பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் கோபத்தில் உள்ளனர். இதற்கிடையே, அவுரங்கசீப் கல்லறை விவகாரம் வேறு ஆட்சியை களங்கப்படுத்திவிட்டது. முதல்வர் வசம் உள்துறை இருப்பதால், கடுமையான விமர்சனத்திற்கு ஆளானார் பட்னவிஸ்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=vat5lcvv&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0'வெற்றி பெறுவதற்காக, பா.ஜ., கூட்டணி அறிவித்த இலவசங்கள் அரசு கஜானாவை காலியாக்கி விட்டன. மஹாராஷ்டிரா இப்போது, 9.2 லட்சம் கோடி ரூபாய் கடனில் உள்ளது. இந்நிலையில், பட்னவிஸ் எப்படி கட்சிக்குள்ளும், வெளியேயும் உள்ள எதிர்ப்புகளையும், நிதி நிலையையும் சமாளிக்கப் போகிறார்?' என, அவருடைய எதிரிகள் காத்திருக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Haja Kuthubdeen
மார் 23, 2025 15:15

ஆட்சியை பிடித்ததே 2500ரூபாய் மாத மாதம் தருவேன் என்ற தேர்தல் அறிக்கையால்தான்....


Barakat Ali
மார் 23, 2025 14:51

ஐந்து வருடங்களைப் பிரச்னை இன்றி நிறைவு செய்வார் ..... அடுத்த முறையும் இதே கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும் .....


Srinivasan Krishnamoorthy
மார் 23, 2025 17:52

correct. with double engine padvavis will have two to three terms like yogiji.mva can never think coming to power


மோகனசுந்தரம் லண்டன்
மார் 23, 2025 13:37

திருட்டு திராவிட மாடலை அகில இந்தியாவிலும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ஸ்டாலின் விரும்பினார். அவர் விரும்பிய பிரகாரம் இலவசங்களுக்கு மக்களை அடிமைப்படுத்தி விட்டார்கள். அதுதான் திருட்டு திராவிட அயோக்கிய மாடல்.


கிஜன்
மார் 23, 2025 08:50

சத்ரபதி சிவாஜியை அரசராக ஏற்க மறுத்தவர்களின் வழித்தோன்றல் ... இவர் ...


VENKATASUBRAMANIAN
மார் 23, 2025 08:31

மக்கள் இலவசங்களை புறக்கணிக்க வேண்டும். அப்போதுதான் இதெல்லாம் நடக்காது. மக்கள் கை ஏந்தும வரை இது தொடரும். ஓட்டுக்காக எதையும் செய்யும் நிலைக்கு வந்து விட்டார்கள். இதற்கு வித்திட்டது தமிழ்நாடு. இதுதான் திராவிட மாடல்


Prem
மார் 23, 2025 07:09

இந்திய மக்கள், யாரும் எதையும் இலவசமாகச் செய்ய மாட்டார்கள் என்பதை உணர வேண்டும் .இலவசம் என்று சொன்னால், அவர்கள் உணர வேண்டும், அவர்கள் தங்கள் சொந்தப் பணத்தால் ஏமாற்றப்படப் போகிறார்கள் என்று.


अप्पावी
மார் 23, 2025 06:42

ஊரை ஏமாத்தும் கட்சின்னு பேர் எடுத்துக்கிட்டு வருது அங்கே.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை