உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / டில்லி உஷ்ஷ்ஷ்: ராகுலுக்கு சங்கடம்

டில்லி உஷ்ஷ்ஷ்: ராகுலுக்கு சங்கடம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ஆப்பரேஷன் சிந்துார் குறித்து வெளிநாடுகளின் தலைவர்களுக்கு விளக்கம் அளிக்க, 51 எம்.பி.,க்கள் அடங்கிய ஏழு குழுக்கள் பல்வேறு நாடுகளுக்கு சென்றுள்ளன. சசி தரூர், ரவிசங்கர் பிரசாத், கனிமொழி உள்ளிட்ட பலர் இந்த குழுக்களுக்கு தலைமை தாங்கி சென்றுள்ளனர்.ஆப்பரேஷன் சிந்துார் எப்படி நடந்தது; இதில் பாகிஸ்தானுக்கு இழப்பு எவ்வளவு; பயங்கரவாதிகளை பாகிஸ்தான் எப்படி ஆதரிக்கிறது என்பது உட்பட பல விஷயங்களை இந்த எம்.பி.,க்கள் வெளிநாட்டு தலைவர்களிடம் விளக்கி கூறியுள்ளனர்.டில்லி திரும்பியதும் இவர்களது பயணம் குறித்து அறிக்கை தயாரிக்கப்பட உள்ளது. இந்த குழுக்களுடன் வெளியுறவு துறை அதிகாரிகளும் சென்றுள்ளனர். இந்த அதிகாரிகள் அறிக்கைகளை தயார் செய்வர். ஒவ்வொரு குழுவும் ஒரு அறிக்கையை தயாரிக்கும்.இந்த அறிக்கைகள் பார்லிமென்டில் தாக்கல் செய்யப்படும் என்றும், இதன் மீது விவாதங்கள் நடைபெற வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்படுகிறது. எம்.பி.,க்கள் குழுக்கள் தயாரித்த அறிக்கைகளை மொத்தமாக ஒரு புத்தகமாகவும் தயாரிக்க பிரதமர் ஆலோசித்து வருகிறாராம். இந்த புத்தகம் உலக நாடுகளில் உள்ள அனைத்து இந்திய துாதரகங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுமாம்.இந்த குழுக்களால் காங்கிரசுக்கு பெரிய அடி. இந்த குழுவில் இடம்பெற்றுள்ள காங்கிரசைச் சேர்ந்த சசி தரூர், சல்மான் குர்ஷித் ஆகியோர், மத்திய அரசை ஆதரித்து பேசி வருவது ராகுலுக்கு கோபத்தையும், கட்சிக்கு சங்கடத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

ராமகிருஷ்ணன்
ஜூன் 01, 2025 14:45

ராவுலுக்கு பெரிய அளவில் அடி தான். ஆமாம் இவர் வெளிநாட்டில் பி ஜே பி அரசை குறை சொல்ல முடியாதே. இவரின் இந்த குணம் தெரிந்து மோடிஜீ முன்னேற்பாடுகள் செய்து காங்கிரஸ் பிரதிநிதிகள் கொண்ட குழுக்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்தனர் ஒருவேளை ராவுலு வெளிநாடுகளில் உளறிக் கொட்டினாலும் அவர்கள் கட்சியினரே .....


பேசும் தமிழன்
ஜூன் 01, 2025 07:21

பப்பு ....நீயும் ....உங்க குடும்பமும் உங்க தாய்நாடு இத்தாலியில் முயற்சி செய்து பார்க்கலாம் .....அங்கே உங்களுக்கு வளமான எதிர்காலம் காத்துக் கொண்டிருக்கிறது....ஆனால் இங்கே இந்திய மக்கள் யாரும் உங்களையும் உங்க குடும்பத்தையும் நம்ப தயாராக இல்லை.


R S Devarajan
ஜூன் 01, 2025 08:55

India born congress party members are real patriotic.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை