உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / டில்லி உஷ்ஷ்ஷ்: நீக்கப்படுவாரா சசி தரூர்?

டில்லி உஷ்ஷ்ஷ்: நீக்கப்படுவாரா சசி தரூர்?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: காங்கிரஸ் கட்சிக்குள் இப்போதைய சர்ச்சை-, திருவனந்தபுரம் எம்.பி., சசி தரூர் கட்சியிலிருந்து நீக்கப்படுவாரா? என்பதுதான்.ஆப்பரேஷன் சிந்துாருக்கு ஆரம்பத்திலிருந்தே ஆதரவாக குரல் கொடுத்தவர் சசி தரூர். 'எத்தனை இந்திய விமானங்களை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியது?' என, ராகுல் தொடர்ந்து கேள்வி கேட்டுக் கொண்டிருக்க, சசி தரூரோ, பிரதமர் மோடிக்கு ஆதரவாகவே பேசி வருகிறார். 'தாய்நாட்டிற்காக பேசுவதில் என்ன தவறு?' என்றும், தன் கட்சிக்காரர்களிடம் கூறியுள்ளாராம் தரூர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ze1x57mh&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதனால், சசி தரூர் மீது கோபத்தில் உள்ளார் ராகுல். ஏற்கனவே, காங்கிரசின் நிலை குறித்து சசி தரூர் வெளிப்படையாக பேசி சர்ச்சையில் சிக்கினார். இதற்கிடையே, ஆப்பரேஷன் சிந்துார் தொடர்பாக வெளிநாடுகளுக்கு சென்ற குழுக்களில் ஒன்றிற்கு, தலைமை தாங்கி சென்றுள்ளார் சசி தரூர். காங்கிரஸ் சார்பாக வெளிநாடு செல்ல, வேறு பெயர்களை பரிந்துரை செய்திருந்தார் ராகுல்; அதில் சசி தரூர் பெயர் இல்லை. இருப்பினும், அவரை தேர்ந்தெடுத்தார் மோடி. இது, ராகுலின் கோபத்தை மேலும் அதிகப்படுத்திவிட்டது.சசி தரூர் இந்தியா திரும்பியதும், அவர் கட்சியிலிருந்து 'சஸ்பெண்ட்' செய்யப்பட வாய்ப்புள்ளதாக, காங்கிரஸ் கட்சிக்குள் பேசப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

madhu sudanan
மே 25, 2025 14:57

Modi is playing game with the help of some Congress leaders. High command should sack sasi Tharoor to avoid these kind of treacherous in future.


உ.பி
மே 25, 2025 09:26

நியாயமாக இருந்தால் காங்கிரஸில் இடம் கிடையாது


sankaranarayanan
மே 25, 2025 08:49

அடுத்த தேர்தலில் சசி தருவர் திருவனந்தபுரம் தொகுதி பாஜ எம்பியாக தேர்ந்தெடுக்கப்படுவார் என்பது நிச்சயம்


பிரேம்ஜி
மே 25, 2025 07:54

காங்கிரஸ் இருந்தாலும் இல்லாவிட்டாலும் எல்லாம் ஒன்றுதான்!


ஆரூர் ரங்
மே 25, 2025 07:33

பிஜெபி யில் இருந்து கொண்டே கட்சியின் செயல்பாடுகளை எதிர்க்கும் சுப்பிரமணியன் சுவாமியை கட்சி வெளியேற்றவில்லை. நீண்டகால வளர்ச்சிக்கு கொஞ்சம் சகிப்புத்தன்மை தேவை.


Karthik
மே 25, 2025 07:08

என்ன நடக்கனும்னா என்ன பேசணும், என்ன பேசினா என்ன நடக்கும் அப்படிங்கறது கூட தெரியாத பப்பு கிடையாது சசிதரூர்.


மனி
மே 25, 2025 04:19

ர்க்கபடனும் என்பது அந்த நபரின் . என்னம். அதான். இப்ப