உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / ஆசிரியர்கள் போராட்டத்தை தடுக்க அரசு நெருக்கடியால் அதிருப்தி

ஆசிரியர்கள் போராட்டத்தை தடுக்க அரசு நெருக்கடியால் அதிருப்தி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: சென்னையில் ஏப்., 5 ல் நடக்க உள்ள ஆசிரியர்கள் போராட்டத்தை தடுக்கும் வகையில் தமிழக அரசு நெருக்கடி கொடுப்பதாக அதிருப்தி எழுந்துள்ளது.தொடக்க கல்வித்துறையில் 2009 ல் தி.மு.க., ஆட்சியில் அமல்படுத்தப்பட்ட ஆறாவது ஊதிய குழுவில் 'ஒரே கல்வி தகுதி, ஒரே பணிக்கு இரு வேறு' அடிப்படை சம்பளம் நிர்ணயிக்கப்பட்டது. இதனால் 1.6.2009 க்கு முன் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.8370 எனவும், 1.6.2009க்கு பின் (ஒரு நாள் இடைவெளியில்) நியமிக்கப்பட்டவர்களுக்கு ரூ. 5200 எனவும் நிர்ணயிக்கப்பட்டது. 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு இந்த சம்பள முரண்பாடு 15 ஆண்டுகளாக நீடிக்கிறது.இதைக் கண்டித்து பல ஆண்டுகளாக போராட்டங்கள் நடக்கின்றன. அ.தி.மு.க., ஆட்சியில் நடந்த போராட்டத்தில் அப்போதைய எதிர்க்கட்சி தலைராக இருந்த ஸ்டாலின், ''தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும் சம்பள முரண்பாடு சரி செய்யப்படும்,'' என உறுதியளித்தார். அதன்படி 2021ல் தி.மு.க., தேர்தல் வாக்குறுதியிலும் '20 ஆயிரம் ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்படும் (எண்:311)' என உறுதியளிக்கப்பட்டது. இதுவரை நடவடிக்கை இல்லை.இதை கண்டித்து 2022ல் டிசம்பரில் இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கம் (எஸ்.எஸ்.டி.ஏ.,) சார்பில் 6 நாட்கள் நடந்த காலவரையற்ற உண்ணாவிரதம், ஆசிரியைகள், குழந்தைகள் மயக்கம், போலீஸ் நெருக்கடி, கைது என சர்ச்சை ஏற்படுத்தியது. பிரச்னைக்கு தீர்வுகாண 3 நபர் குழு அமைக்கப்பட்டது. அது 2 முறை மட்டுமே கருத்து கேட்டது. அதிலும் முன்னேற்றம் இல்லை.இதை கண்டிக்கும் வகையிலும், சட்டசபை கூட்டத்தொடரில் 110 விதியின்கீழ் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட வலியுறுத்தியும் சென்னை ஆர்.ஆர்., மைதான நுழைவு வாயிலில் ஏப்.5 ல் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என எஸ்.எஸ்.டி.ஏ., அறிவித்துள்ளது. இப்போராட்டத்திற்கு அதிக எண்ணிக்கையில் ஆசிரியர்கள் திரண்டு விடக்கூடாது என்ற வகையில் போலீஸ் மூலம் நெருக்கடி கொடுக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.எஸ்.எஸ்.டி.ஏ., நிர்வாகிகள் கூறியதாவது: சட்டசபை கூட்டத்தொடர் நடக்கும் நேரத்தில் 2022ல் நடந்தது போல் இந்த போராட்டம் மாறிவிட்டால் அரசுக்கு தேவையில்லாத நெருக்கடி ஏற்படும். இதனால் ஏப்., 5 அதிக எண்ணிக்கையில் ஆசிரியர்கள் திரளாமல் அந்தந்த மாவட்டங்களிலேயே தடுத்து நிறுத்த வேண்டும் என்பதற்காக முக்கிய நிர்வாகிகள், ஆசிரியர்களை பள்ளி சென்று வீடு திரும்பும் வரை போலீசார் தீவிரமாக கண்காணிக்கின்றனர். கடைசி நேரத்தில் 'ஹவுஸ் அரெஸ்ட்' கூட செய்யலாம். இது போராட்ட உரிமையை பறிப்பதாகும். இதையும் மீறி சென்னை போராட்டத்தில் பங்கேற்போம் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Revathi J
மார் 31, 2025 21:09

சம வேலைக்கு சம ஊதியம் என்ற கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்று கோரினால் ஆசிரியர்களின் சம்பளத்தில் தனி ஊதியம் 2000 குறைக்க வேண்டியிருக்கும். ஒத்துக் கொள்வார்களா?


Ethiraj
மார் 31, 2025 19:59

Giving false promise to get votes must be made an offence


Muthaiyan
மார் 31, 2025 19:58

திருட்டு திமுக பொய் வாக்குறுதி கொடுத்துவிட்டு ஆட்சிக்கு வந்திருக்கிறது. திறமையில்லாவிட்டால் ஆட்சியையும் கட்சியையும் கலைத்துவிட்டு வீட்டில் ஓய்வெடுக்கலாமே. அரசு ஊழியர்களுடன் சண்டை போடாமல் கொஞ்சமாவது நீதியாக நடந்து கொள்வது நல்லது


..
மார் 31, 2025 15:16

அரசு ஊழியர்கள் 2026லும் ஆளும்கட்சிக்கு கரை வேட்டி கட்டி வாக்கு சேகரிக்க வாழ்த்துக்கள்


gopalasamy N
மார் 31, 2025 13:57

அரசு பணியாளர்கள் ஆசிரியர்கள் தி மு க மீண்டும் ஆட்சி அமைக்க பாடுபட வேண்டும் 2036 கோரிகை நிறைவேத்த படும்


RAMESH
மார் 31, 2025 13:04

நீட் ரகசியம் எனக்கு தெரியும்....என்ற பொய் வாக்குறுதி போல் தான் எல்லா வாக்குறுதி களும்....இந்த ஆட்சியில் 90% சதவிகிதம் வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டேன் என்று அப்பாவின் போட்டோ சூட்......


Rajarajan
மார் 31, 2025 12:52

வேலையில் சேரும்போதே, அனைத்து நிபந்தைகளுக்கும் கட்டுப்பட்டுத்தானே சேர்கிறார்கள் ? பிடிக்கவில்லையெனில், வேலையே விட்டு விலகுவதில் தடையேதும் இல்லையே. அதுசரி, வேலையிலிருந்து ஓய்வுபெற்ற பின்னர், சங்கம் அமைத்து தூண்டிவிட்டு, போராட்டத்தை தூண்டும் வயதான ஆட்களை, முறைப்படி கவனித்தால், பின்னர் போராட்டமும், சங்கமும் அமையவே அமையாது.


Muthaiyan
மார் 31, 2025 20:00

திறனில்லாத ஆட்சியாக இருப்பதைவிட ஆட்சியை கலைத்து விட்டு வீட்டில் ஓய்வெடுக்கலாம்


Petchi Muthu
மார் 31, 2025 12:09

அரசு ஆசிரியர்கள் நிலைமை மோசமாக இருக்கிறது


Marimuthu Kaliyamoorthy
மார் 31, 2025 19:42

beggars


முக்கிய வீடியோ