உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / பரிசு, பணம் கொடுத்து த.வெ.க.,வை வளைக்கும் தி.மு.க.,

பரிசு, பணம் கொடுத்து த.வெ.க.,வை வளைக்கும் தி.மு.க.,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தீபாவளி பண்டிகை முடிந்த நிலையில், த.வெ.க., நிர்வாகிகளை ரகசியமாக அழைத்து, தி.மு.க.,வினர் பரிசு வழங்கி வருகின்றனர். தன் கட்சி மாநாட்டில், தி.மு.க.,வையும், அரசையும் கடுமையாக விமர்சித்து, விஜய் பேசினார். இது தி.மு.க., தலைமைக்கு கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. பதிலடி கொடுக்கும் வகையில், புதிய வியூகத்தை அக்கட்சி வகுத்து செயல்படத் துவங்கியுள்ளது.அதன்படி, ஒன்றியம், பேரூராட்சி அளவில் உள்ள த.வெ.க., நிர்வாகிகளை, தி.மு.க., ஒன்றிய மற்றும் பேரூராட்சி செயலர்கள் ரகசியமாக சந்தித்து வருகின்றனர். அப்போது, விஜய் கட்சி துவக்கியதற்கு வாழ்த்து கூறுகின்றனர். பின், தீபாவளிப் பரிசு என்ற பெயரில், இனிப்புகள், பரிசு, பணம் ஆகியவற்றை வழங்கி வருகின்றனர். இதன் வாயிலாக, ஆளுங்கட்சிக்கு எதிராக செயல்படாதபடி, அவர்கள் வளைக்கப்பட்டு வருகின்றனர். தி.மு.க.,வினரின் வளைப்பு முயற்சியால், தேர்தலை சந்திக்க அடுத்தடுத்து விஜய் எடுக்கும் முயற்சிகளில் பின்னடைவு ஏற்படும் வாய்ப்புள்ளது என அஞ்சும் த.வெ.க.,வினர், இதில் இருந்து கட்சியினரை எப்படி விலகி இருக்கச் சொல்லலாம் என்பது குறித்து தீவிரமாக யோசித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Ramesh Sargam
நவ 10, 2024 21:51

பணத்துக்கும், பரிசுகளுக்கும் விலை போகாத அரசியல்வாதிகள் உண்டா...??


கண்ணா
நவ 10, 2024 19:41

தவெக திமுகவின் ஆ கட்சி.....தேர்தல் வரை ஆ கட்சியாக இருந்து இருவரும் எதிரிகள் போல காண்பித்து...பேதை மக்கள் அதை முழுவதுமாக நம்பி ஓட்டு போட்டு பின்னர் இரு தலைவர்களும் கைமேல் துண்டு போட்டு என்ன விலை என்று முடிவு செய்வார்கள்.


எஸ் எஸ்
நவ 10, 2024 16:02

75 ஆண்டுகள் ஆன கட்சி, அடி மட்ட கிளைகள் உறுதியாக உள்ள கட்சி, மீடியாவை கைக்குள் வைத்து இருக்கும் கட்சி, பண பலம் உள்ள கட்சி, எந்த அளவுக்கும் இறங்க தயாரான கட்சி - இதை எதிர்த்து கட்சி ஆரம்பித்து ஜெயித்தவர் எம்ஜிஆர் மட்டுமே. பிறகு திமுகவுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தவர் ஜெயலலிதா. விஜய் தாக்குபிடிப்பது சந்தேகம்


கல்யாணராமன் மறைமலை நகர்
நவ 10, 2024 11:56

இதுபோன்ற தில்லாலங்கடி வேலைகளில் கழகக் கண்மணிகள் பிஎச்டி வாங்கியவர்களாயிற்றே. தேர்தலில் பணம், குவாட்டர் கொடுத்து மக்களை வளைக்கும் இவர்களுக்கு இதெல்லாம் ஜூஜுபி.


xyzabc
நவ 10, 2024 11:35

வரும் பணத்தை எடுத்து கொள்ளுங்கள்


BALAJI Ramanathan
நவ 10, 2024 08:53

DMK knows the tricks to handle political games. Our political members are not strong enough to avoid freebies. The party will be taken care. Vijay can not play his role as he is now. He will surrender to DMK and will go like Kamal in due course.


Venkatesan.v
நவ 10, 2024 16:22

? உண்மை


முருகன்
நவ 10, 2024 07:31

அரசியல் ஆட்டம் ஆரம்பம்


முக்கிய வீடியோ