உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / தி.மு.க.,விற்கும், சமூக நீதிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை: அன்புமணி

தி.மு.க.,விற்கும், சமூக நீதிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை: அன்புமணி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

விருத்தாசலம்: ''தி.மு.க.,விற்கும், சமூக நீதிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை,'' என, பா.ம.க., தலைவர் அன்புமணி கூறினார். விருத்தாசலத்தில் நடந்த தமிழக மக்கள் உரிமை மீட்பு நடைபயணத்தில், பா.ம.க., தலைவர் அன்புமணி பங்கேற்றார். பின், பாலக்கரையில் நடந்த பொதுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது: கடலுார் மாவட்டத்தில் உள்ள இரு அமைச்சர்கள், என்.எல்.சி., நிறுவனத்திற்காக மக்களிடம் இருந்து நிலத்தை பறித்து கொடுக்கும் புரோக்கர்களாக செயல்படுகின்றனர். நேபாளத்தில் ஆட்சி மாற்றம் நடந்துள்ளது. அதேபோல், தமிழகத்திலும் விரைவில் ஆட்சி மாற்றம் நடக்கும். நேபாள மக்களை போல, ஆட்சியாளர்கள் மீது கடும் கோபத்தில் தமிழக மக்கள் உள்ளனர். தமிழகத்தில் கல்வித்துறை நாசமாகி விட்டது. 15 ஆண்டுகளுக்கு முன், அரசு பள்ளியில் 75 லட்சம் மாணவர்கள் பயின்றனர். ஆனால், தற்போது 52 லட்சம் மாணவர்கள் மட்டுமே படிக்கின்றனர். தி.மு.க.,விற்கும், சமூக நீதிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தி.மு.க., சமூக நீதிக்கு எதிரி. ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தால், எங்களுக்கு அதிகாரம் இல்லை என்று முதல்வர் ஸ்டாலின் பொய் கூறுகிறார். இருக்கும் அதிகாரத்தை இல்லை என்று சொல்பவர் கோழை. அதிகாரம் இல்லை என்றாலும், அதிகாரம் உள்ளது என்று கூறுபவர் தான் வீரன். பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்றாததால், அரசு ஊழியர்கள் தி.மு.க., அரசு மீது பெரும் கோபத்தில் உள்ளனர். வன்னியர் இட ஒதுக்கீட்டை நிறைவேற்ற வலியுறுத்தி, விரைவில் சிறை நிரப்பும் போராட்டத்தை பா.ம.க., சார்பில் நடத்தப் போகிறோம். அதில், 5 லட்சம் பேர் பங்கேற்பர். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Tamilan
செப் 14, 2025 21:32

விஜய் தான் சமூக நீதியின் தலைவர் என்று கூறிக்கொள்கிறார்


Mariadoss E
செப் 14, 2025 20:32

முதலில் ஜாதிக் கட்சி என்ற இமேஜை உடையுங்கள் பிறகு சமூக நீதி பற்றிப் பேசலாம்....


Vasan
செப் 14, 2025 16:54

Anbumani Sir, Tamilnadu waiting for your FDFS First Day First Signature. Please fulfill this in May 2026. Please form a new party with symbol of cashew fruit. Not only cashew farmers, all people of Tamilnadu will vote for you.


pakalavan
செப் 14, 2025 11:14

ராமதாசு அப்பா, அன்புமனி மகன், மருமகள், மகள், மச்சினிச்சி, அக்கா, அக்கா மகன், சம்மந்தி என்று எல்லோரும் கட்சில பதவி வாங்கி நல்லா சம்பாரிச்சு விட்டு,


Abdul Rahim
செப் 14, 2025 10:37

உங்க அப்பாருக்கும் உங்களுக்குமே சம்பந்தம் இல்லாம போச்சே அத பத்தி பேசுங்க சார்


pmsamy
செப் 14, 2025 05:23

உனக்கும் அரசியலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை இன்று மக்கள் இப்பொழுது முடிவு செய்து விட்டனர்


முக்கிய வீடியோ