உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / மூன்று முறை எம்.எல்.ஏ.,வாக இருந்தால் சீட் மறுக்க தி.மு.க., தலைமை முடிவு

மூன்று முறை எம்.எல்.ஏ.,வாக இருந்தால் சீட் மறுக்க தி.மு.க., தலைமை முடிவு

தி.மு.க.,வில், மூன்று முறைக்கு மேலாக எம்.எல்.ஏ., பதவி வகிப்பவர்களில், யார் யாருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கலாம் என்பது குறித்து, தேர்தல் வியூக வகுப்பு நிறுவனம், அக்கட்சி தலைமைக்கு ஆலோசனை வழங்கியுள்ள தகவல் வெளியாகி உள்ளது.தி.மு.க., நிர்வாகிகள் கூறியதாவது: தி.மு.க.,வில் சட்ட சபை தேர்தல் பணிகளை திட்டமிட, மூன்று வியூக வகுப்பு நிறுவனங்கள் பணியமர்த்தப்பட்டு உள்ளன. மேலும், தேர்தல் பணிகளை ஒருங்கிணைத்து செயல்படுத்த துணை முதல்வர், மூத்த அமைச்சர்கள் கொண்ட குழு ஒன்றும் தனியாக செயல்படுகிறது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=zlkl3zyv&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கடந்த 2021, சட்டசபை தேர்தலில், 173 பேர், தி.மு.க., வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். முன்னாள் அமைச்சர்கள், மூத்த எம்.எல்.ஏ.,க்கள், மூத்த மாவட்ட செயலர்கள் என்ற அடிப்படையில், பலருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. ஐந்தாறு முறை எம்.எல்.ஏ., பதவி வகித்தவர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது.பெரிய அளவில் புதிய முகங்களுக்கு வாய்ப்பு தரவில்லை என்பதால், எதிர்பார்த்துக் காத்திருந்த பலரும் அதிருப்தி அடைந்தனர். சில தொகுதிகளில் சரியாக வேட்பாளர் தேர்வு நடக்கவில்லை என்பதாலும், கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கப்பட்டதாலும், நிர்வாகிகள் சிலர் கோபத்தில் இருந்தனர். இதையடுத்து, பல தொகுதிகளில் உள்ளடி வேலையும் நடந்தது.இதனால் போட்டியிட்ட 173 பேரில், 133 பேர் வெற்றி பெற்றனர். அதாவது, 40 பேர் தோல்வி அடைந்தனர். எனவே, வரும் சட்டசபை தேர்தலில், இதுபோன்ற தவறுகள் நடந்து விடக்கூடாது என்பதில், முதல்வர் ஸ்டாலின் கவனமாக இருக்கிறார்.தேர்தல் வியூக நிறுவனங்கள் தரும் பட்டியலை, உளவுத்துறை தரும் பட்டியலுடன் ஒப்பிட்டு, வேட்பாளர்களை தேர்வு செய்ய, அவர் திட்டமிட்டுள்ளார். நேர்காணல் வாயிலாக, தன்னுடைய நேரடி பார்வையில் வேட்பாளர்களை தேர்வு செய்யவும் முதல்வர் முடிவு செய்துள்ளார். அதற்காக, பத்து முறை, எட்டு முறை, ஐந்தாறு முறை, மூன்று முறை எம்.எல்.ஏ., பதவி வகித்தவர்கள் யார் யார் என்ற விபரம் சேகரிக்கப்பட்டு வருகிறது. அதில், அமைச்சர்கள், மாவட்ட செயலர்கள் என, 30க்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர்.அவர்களின் பணபலம், ஜாதி பலம், தொகுதியில் உள்ள நற்பெயர், மக்கள் நலப்பணி, வெற்றி வாய்ப்பு குறித்து, 'சர்வே' எடுக்கப்பட உள்ளது. அதில் தேர்வாகும் நபர்களுக்கே மீண்டும் 'சீட்' வழங்கலாம் என ஆலோசிக்கப்பட்டு உள்ளது. ஒருவேளை, மூத்த அமைச்சராக இருந்தபோதிலும், 'சர்வே' முடிவில் தேர்வாகவில்லை எனில், அவரது மகள் அல்லது மகனுக்கு, 'சீட்' கொடுத்து, அவரை சம்மதிக்க வைக்கலாம் என்றும் திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

Bhaskaran
ஏப் 04, 2025 15:02

புதுசா வர்றவங்களும் சம்பாதிக்கும் அவங்க கிட்டே 50 விழுக்காடு பிடுங்கலாம் ஆனால் பழம் பெருச்சாளிகள் கிட்டே அந்த கதை நடக்காது அதனால்தான்


Velusamy Dhanaraju
ஏப் 03, 2025 22:31

ஆ கிங் சொல்லிட்டாரு அப்ப சுடலைக்கு சீட் இல்லை


sampurnam panneerselvam
ஏப் 03, 2025 16:20

நான் 6 தடவை சட்டமன்ற கும் 1 தடவை நரடாளுமன்றகும் தலைமை அனுமதி வழங்கவீல்லை.


Neethan K
ஏப் 03, 2025 07:57

இந்த விதிமுறை கோபாலபுர குடும்பத்திற்கு பொருந்துமா..??


Tetra
ஏப் 03, 2025 18:10

கிடையாது


c.mohanraj raj
ஏப் 02, 2025 20:44

இது முதல்வருக்கும் பொருந்துமா


Senthil
ஏப் 03, 2025 12:00

கட்சியே அவர் தானே அவரையும் கழட்டி விட்டால் திமுகவும் அதிமுக போல் தடுமாற வேண்டும் என்ற தங்கள் எண்ணம் வெளிப்படுகிறதே திமுக என்றால் கருணாநிதி குடும்பம்தான், அதிமுக என்றால் சசிகலா குடும்பம்தான், அப்பொழுதுதான் இவ்விரு கட்சிகளும் ஸ்திரத்தன்மையோடு செயல்பட்டு அந்நியர்களை உள்ளே விடாமல் தடுக்க முடியும்.


krishna
ஏப் 02, 2025 16:55

PHOTO SUPER THALA.KOLLAYO KOLLAI.ULAGA PANAKKARARGAL VARISAYIL UNGAL KUDUMBAM IDAM PIDIKKA VAITHADHIL VANDHA SIRIPPU.TASMAC DUMILANS HINDHUKKAL PONDRA VEKKAM MAANAM SOODU SORANAI ILLADHA JENMANGALAI ULAGIL ENGUM PAARKKA MUDIYAADHU. INDHA MAFIA DRAVIDA MODEL KUMBALUKKU VOTTAI VIRKKUM KEVALANGAL.


vijai hindu
ஏப் 02, 2025 15:41

அப்ப முதல்வர் உட்பட பெருசுகளுக்கு எல்லாம் சீட்டு இல்லை ஓரளவு தமிழ்நாடு தப்பிக்கும்


SP
ஏப் 02, 2025 15:34

இதையாவது ஒழுங்காக நிறைவேற்ற வேண்டும் பாகுபாடு காட்டக்கூடாது.


கலைஞர்
ஏப் 02, 2025 14:12

ஸ்டாலினுக்கு வாய்ப்பு இல்லையா


Muralidharan S
ஏப் 02, 2025 13:35

ஒருத்தரை தவிர யாருக்கும் சீட்டு கிடையாது.. அடுத்த தலைமுறைக்கும் தொழில் கத்து தரணும் இல்லையா? அப்பத்தான் இன்னொரு 60 வருஷம் வியாபாரம் நடக்கும்..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை