உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / விஜயுடன் ஆசிரியர் சங்கத்தினர் சந்திப்பு; கடும் அதிர்ச்சியில் தி.மு.க., தலைமை

விஜயுடன் ஆசிரியர் சங்கத்தினர் சந்திப்பு; கடும் அதிர்ச்சியில் தி.மு.க., தலைமை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தமிழ்நாடு உயர்நிலை - மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக நிர்வாகிகள், த.வெ.க., தலைவர் விஜயை சந்தித்து, தங்கள் போராட்டத்திற்கு ஆதரவு கேட்டது, தி.மு.க., தலைமையை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. ஓட்டு வங்கி பறிபோய் விடுமோ என்ற கவலையில் அக்கட்சியினர் இருப்பதாக கூறப்படுகிறது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=47fk1nvy&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அ.தி.மு.க., ஆட்சியில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்களில் ஈடுபட்டனர். அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின், அனைத்து போராட்டத்திற்கும் ஆதரவு தெரிவித்தார். 'தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும்' என, உறுதி அளித்தார். தி.மு.க., தேர்தல் அறிக்கையிலும், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என்பது உட்பட, பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன.இதையடுத்து, கடந்த சட்டசபை தேர்தலில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், அதிக அளவில் தி.மு.க., கூட்டணிக்கு ஓட்டளித்தனர். தி.மு.க., வெற்றி பெற்றது.ஆனால், பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட பல கோரிக்கைகள், ஆட்சிக்கு வந்து நான்காண்டுகளாகியும் நிறைவேற்றப்படவில்லை. இது, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களிடம், அரசு மீது கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், தமிழ்நாடு உயர்நிலை - மேல்நிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் நிறுவனத் தலைவர் மாயவன், மாநிலத் தலைவர் ஜெயகுமார் மற்றும் நிர்வாகிகள், கடந்த 13ம் தேதி த.வெ.க., தலைவர் விஜயை சந்தித்தனர். அப்போது, 'கடந்த நான்கு ஆண்டுகளில், முதல்வரை எட்டு முறை நேரில் சந்தித்தோம். ஒவ்வொரு முறையும் அதே கோரிக்கையை திரும்ப திரும்ப சொன்னோம். அவரும் கேட்டார். புகைப்படம் எடுத்துக் கொண்டார். 'போய் வாருங்கள் என்றார். மறுநாள், முதல்வருடன் எடுத்த புகைப்படங்கள் நாளிதழ்களில் வரும். ஆனால், கோரிக்கைகள் மட்டும் நிறைவேற்றப்படவில்லை. இப்படிப்பட்ட சூழலில் தான், உங்களை சந்திக்கிறோம். உங்களின் ஆதரவை நாடுகிறோம்' என தெரிவித்தனர்.

ஒன்பது கோரிக்கை

அதை கேட்ட விஜய், 'உங்களுக்கு என்னுடைய ஆதரவு உண்டு' என சொல்லி அனுப்பினார். இந்த தகவல் தான், தி.மு.க., தலைமையை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. 'அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆதரவு எப்போதும் தங்களுக்கு தான்' என, தி.மு.க., நினைத்திருந்த நிலையில், ஆசிரியர் சங்கத்தினர், விஜயை சந்தித்து பேசியதால், தங்கள் ஓட்டு வங்கி பாதிக்கப்படுமோ என, அச்சம் அடைந்தனர்.அதைத் தொடர்ந்து, மற்ற சங்க நிர்வாகிகளை தொடர்பு கொண்டு, 'விரைவில் உங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்' என, அரசு தரப்பில் உறுதி அளித்துள்ளனர். இந்நிலையில், ஜாக்டோ - ஜியோ அமைப்பு ஒருங்கிணைப்பாளர்கள் வெளியிட்ட அறிக்கை:விஜயை ஜாக்டோ - ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் சந்திக்கவில்லை. ஜாக்டோ - ஜியோ தொடர்ந்து பேச்சு நடத்தியும், பல்வேறு கட்ட போராட்ட நடவடிக்கையில் ஈடுபட்டதாலும், அரசிடம் இருந்து சரண்டர், மகப்பேறு விடுப்பு என, ஒன்பது கோரிக்கைகளை பெற்றுள்ளோம்.பழைய ஓய்வூதிய திட்டத்திற்காக அமைக்கப்பட்ட குழு அறிக்கை, செப்., 30க்குள் பெறப்படும் என, அரசு உத்தரவாதம் அளித்துள்ளது. எனவே, அரசிடம் இருந்து நல்ல முடிவுகள் வரும் என எதிர்பார்த்து, தற்காலிகமாக இயக்க நடவடிக்கைகளை ஒத்தி வைத்துள்ளோம்.ஜாக்டோ - ஜியோ பேரமைப்பு, பல்வேறு சங்கங்கள் கொண்ட கூட்டமைப்பு. இதில் பங்கேற்றுள்ள சங்கங்களின் மாநில அமைப்புகள், தங்கள் முடிவுகளுக்கு ஏற்ப தனித்துவமாக செயல்படுவது, அவர்களின் தனிப்பட்ட முடிவாகும். அதற்கும், ஜாக்டோ - ஜியோவுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நம்பிக்கை

அரசை சமாதானப்படுத்துவதற்காக, இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இது, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து, அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் சிலர் கூறுகையில், 'குறிப்பிட்ட சங்க நிர்வாகிகள் விஜயை சந்தித்தது, தி.மு.க.,வை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. 'அதனால், அந்த சந்திப்புக்கும், தங்களுக்கும் சம்பந்தம் இல்லை என, ஜாக்டோ - ஜியோ வெளியிட்ட அறிக்கையை, சாதகமாக பரப்பி வருகின்றனர். விஜய் உடனான சந்திப்பால், எங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் என்ற நம்பிக்கை எங்களுக்கு வந்துள்ளது' என்றனர். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

ஆரூர் ரங்
ஜூன் 16, 2025 19:31

60 சதவீத ஆசிரியர்கள் அல்லேலூயா. வேறெங்கு ஆதரவு கேட்பர் ?


நிவேதா
ஜூன் 16, 2025 16:27

திமுக அதிர்ச்சி அடையாது. திமுக நோக்கமே விஜயை வளர்த்து விட்டு திமுக எதிர்ப்பு வாக்குகளை அதிமுக பெற விட முடியாமல் தடுப்பதுவே


Subburamu Krishnasamy
ஜூன் 16, 2025 11:49

Tamizhagam teachers association is again going in wrong direction. Their issues can be sorted out only by the strong leadership in the state. Joseph Vijay is not worth to lead the state. He is just a director's artist. Not an administrator or an economist. He never can be a quality politician or quality citizen.


புரொடஸ்டர்
ஜூன் 16, 2025 11:09

ஜோசப் விஜய்யின் "புஸ்ஸி" பாடங்கள் ஆசிரியர்கள் கற்றுக்கொள்கினறனரா?


theruvasagan
ஜூன் 16, 2025 10:59

அவருகிட்ட முறையிட்டா அறுத்து தள்ளிடுவாராக்கும். வேலை சொச்சம். சம்பளம் லட்சம்.தனியார் பள்ளிகளில் பத்தாயிரத்துக்கும் பதினஞ்சாயிரத்துக்கும் மாடாய் உழைக்கிறார்கள்.


theruvasagan
ஜூன் 16, 2025 10:56

தீயசக்தி மறுபடியும் உயிர்தெழ காரணமாக இருந்தவர்களுக்கு நிவாரணமும் கிடைக்காது. மன்னிப்பும் கிடைக்காது.


Rajarajan
ஜூன் 16, 2025 08:34

நிதர்சனமாக சில விஷயங்களை புரிந்துகொள்ள வேண்டும். அரசியலுக்கு வாய் இருந்தால் போதும். ஆனால் நிர்வாகம் என்ற அட்மினிஸ்டரேஷனுக்கு செயல் வேண்டும். அரசியல்வாதிகள், அவர்கள் வீட்டு பணத்தை எடுத்து கொடுக்கப்போவதில்லை. அனைத்தும் மக்களின் வரிப்பணம் தான். இன்றைய நிலையில், அரசு ஊழியர்கள் பெறும் சம்பளம் மற்றும் சலுகைகள் மிக அதிகம். இவர்களை மேலும் மேலும் தூண்டிவிட்டு, வயதான தொழிற்சங்க தலைவர்கள் தூண்டிவிட்டு குளிர்காய்வது வேதனையிலும் வேதனை. இதில் நடிகர் விஜயும் விதி விலக்கல்ல. இவர் முதல்வர் ஆனால் மட்டும், கஜானாவின் வருமானம் எப்படி பல மடங்கு ஆகும் ? எப்படி வசதிபடைத்த அரசுஊழியருக்கு மீண்டும் மீண்டும் அள்ளி அள்ளி வழங்க முடியும்? இதிலேயே சமத்துவம் இல்லை. மேலும், அரசு ஊழியர்கள் தங்கள் சுயநலத்திருக்காக எந்த அளவும் இறங்க தயங்குவதில்லை. மனசாட்சியே இல்லாதவர்கள். இதில் எரியும் கொள்ளியில், என்னை விடுவது மிகவும் தவறு. இதற்க்கு கடிவாளம் போட, ஒரு பொதுநல வழக்கு வேண்டும். அதாவது, அரசின் மொத்த வருவாய் எவ்வளவு, செலவு எவ்வளவு, பற்றாக்குறையை எப்படி, எவ்வளவு நாட்களில் சீரமைப்பர் ? அரசு ஊழியர் மற்றும் பெரும்பாலான தனியார் ஊழியரின் வாழ்வாதாரம் ஆகியவற்றை உள்ளடக்கிய பொதுநல வழக்கு வேண்டும். ஒரு சாராருக்கே அள்ளி அள்ளி வழங்கும், துறை மீதே பொதுநல வழக்கு தொடுப்பதில் எந்த தவறும் இல்லை.


Kulandai kannan
ஜூன் 16, 2025 07:29

ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர் களில் பலர் கிறிப்டோக்கள்.


Manian
ஜூன் 16, 2025 07:01

See how missionaries are manipulating the fate of the country .Shame on Hindus.


Raja
ஜூன் 16, 2025 07:00

அரசியல் களத்தில் விஜயை ஜோக்கர் ஆக பலர் பார்க்கிறார்கள்.. குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.. கமல் போல தோர்த்த அரசியல்வாதியாக மாட்டார்.. கிங் ஆக நல்ல வாய்ப்பு உள்ளது.. கூட்டணி சரியாக அமைய வேண்டும்..