உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / மக்கள் செல்வாக்கு இழந்த தி.மு.க.,

மக்கள் செல்வாக்கு இழந்த தி.மு.க.,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரில் நடந்த கிரிக்கெட் வெற்றி விழாவை காட்டிலும் மஹாராஷ்டிராவில் நடந்த விழாவில், 10 மடங்கு அதிகமாக கூட்டம் கூடியது. அதில் சிறிய அசம்பாவித சம்பவம் கூட ஏற்படவில்லை. விழா நடக்கும் போது விரிவான பாதுகாப்பை வழங்க வேண்டியது மாநில அரசின் கடமையாகும். ஆனால், பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டைப்பாக்குக்கு விலை சொல்வது போல், அமைச்சர் மனோ தங்கராஜ் சம்பந்தமே இல்லாமல் கோவிலுக்கு கூட்டமாக செல்வது நாகரிகமற்றது என்கிறார். இதற்கு தேர்தலில் மக்கள் பதிலளிப்பர்.மதுரையில் முருக பக்தர்கள் மாநாட்டிற்கு நீதிமன்றத்தில் உத்தரவு பெற்று சிறப்பாக நடத்த, ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. மக்கள் மத்தியில் செல்வாக்கை இழந்த கட்சியாக தி.மு.க., உள்ளது. இதன் காரணமாக, பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டணி வைத்துள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர்.-- நயினார் நாகேந்திரன்தமிழக பா.ஜ., தலைவர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை