உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / அ.தி.மு.க.,வில் இருந்து வருபவர்களை வரவேற்க கதவை அகலத் திறந்து தயார் நிலையில் தி.மு.க.,

அ.தி.மு.க.,வில் இருந்து வருபவர்களை வரவேற்க கதவை அகலத் திறந்து தயார் நிலையில் தி.மு.க.,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: அ.தி.மு.க., முக்கிய நிர்வாகிகளை, தி.மு.க.,வில் சேர்க்க, முதல்வர் ஸ்டாலின் பச்சைக்கொடி காட்டியுள்ளார். இதையடுத்து, அறிவாலயத்தின் கதவுகள் அகல திறந்து வைக்கப்பட்டு, அக்கட்சியினர் தயார் நிலையில் உள்ளனர். ஜெயலலிதா மறைவுக்குப் பின், அ.தி.மு.க.,வில் ஏற்பட்ட குழப்பங்களை தொடர்ந்து, முன்னாள் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, பழனியப்பன், தோப்பு வெங்கடாச்சலம், தங்கதமிழ்ச்செல்வன் எம்.பி., உள்ளிட்ட பல முக்கிய நிர்வாகிகள், தி.மு.க.,வில் இணைந்தனர். அதில் செந்தில் பாலாஜி மட்டும், முதல்வர் ஸ்டாலினுக்கு நெருக்கமானவராக மாறினார். கடந்த 2021 சட்டசபை தேர்தல் தோல்விக்கு பின், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள், மாவட்டச் செயலர்கள் என முக்கிய நிர்வாகிகள், தி.மு.க.,வில் இணைய முயற்சி மேற்கொண்டனர். அவர்களைச் சேர்க்க, தி.மு.க., அமைச்சர்களும், முதல்வர் ஸ்டாலினிடம் பேசினர். ஆனால், முக்கிய நிர்வாகிகளை தி.மு.க.,வில் சேர்த்தால், அ.தி.மு.க., பலவீனமாகி விடும். அக்கட்சியின் ஆதார சக்தியாக உள்ள தி.மு.க., எதிர்ப்பு ஓட்டுகள், பா.ஜ.,வுக்கு சென்று விடும். அதனால், அ.தி.மு.க., இடத்தை பா.ஜ., பிடித்து விடக்கூடாது என்பதால், அ.தி.மு.க., முக்கிய நிர்வாகிகளை சேர்க்க, தி.மு.க., தலைமை தொடர்ந்து தயக்கம் காட்டி வந்தது. ஏற்கனவே, அ.தி.மு.க.,வில் இருந்து வந்தவர்களுக்கே தி.மு.க.,வில் முக்கியத்துவம் தரப்படுகிறது என்ற பேச்சு உள்ளது. இச்சூழலில், அ.தி.மு.க.,வை சேர்ந்த முக்கிய நிர்வாகி சேரும்போது, அவருக்கும் தி.மு.க., மாவட்டச் செயலர், அமைச்சர் ஆகியோருக்கும் இடையே மோதல் போக்கு ஏற்படுகிறது. இதுபோன்ற காரணங்களால், அ.தி.மு.க., முக்கிய நிர்வாகிகளை தி.மு.க.வில் சேர்ப்பதை, முதல்வர் ஸ்டாலின் தவிர்த்து வந்தார். தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் மட்டும், ஒரு சிலரை சேர்த்தனர். ஆனால், வரும் சட்டசபை தேர்தலில் வென்று, தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்ற ஒற்றை இலக்குடன், ஸ்டாலின் களமிறங்கியுள்ளார். அ.தி.மு.க., தலைமையில் வலுவான கூட்டணி அமையாமல் தடுக்க முயலும் தி.மு.க., தலைமை, அ.தி.மு.க.,வை பலவீனப்படுத்தும் முயற்சிகளில் இறங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாகவே, முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா, முன்னாள் எம்.பி., மைத்ரேயன் ஆகியோரை தி.மு.க.,வில் சேர்த்தனர். இப்போது, அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட, அ.தி.மு.க., பத்திரிகையான நமது எம்.ஜி.ஆர்., ஆசிரியராக இருந்த மருது அழகுராஜை சேர்த்துள்ளனர்.

இது தொடர்பாக, தி.மு.க., நிர்வாகி ஒருவர் கூறியதாவது:

வரும் சட்டசபை தேர்தலில் வெற்று பெறுவது மட்டுமே தி.மு.க.,வின் நோக்கம். அதற்காக, எதை வேண்டுமானாலும் செய்யுங்கள்; யாரை வேண்டுமானாலும் கட்சியில் இணைத்து பலப்படுத்துங்கள் என, ஸ்டாலின் சொல்லி விட்டார். மாவட்டங்களில், தி.மு.க., மாவட்டச் செயலர்கள், அமைச்சர்களுடன் இணைந்து செயல்பட தயாராக உள்ள அ.தி.மு.க., நிர்வாகிகளை, தி.மு.க.,வில் சேர்க்க பச்சைக்கொடி காட்டியுள்ளார். எனவே, அடுத்தடுத்து அ.தி.மு.க., முக்கிய நிர்வாகிகள் தி.மு.க.,வில் இணைவர். அ.தி.மு.க., -- பா.ஜ., கூட்டணி வலுவாக உள்ள கொங்கு மண்டலத்தில் முக்கிய புள்ளிகளை இழுக்க முயற்சிகள் நடக்கின்றன. அதேபோல, தென் மாவட்டங்களில் இருக்கும் முக்கிய அ.தி.மு.க., தலைவர்களையும், தி.மு.க., பக்கம் கொண்டு வர, தீவிர பேச்சு நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

Padmasridharan
செப் 20, 2025 19:28

காக்கி சட்டை காவலராக இருந்தாலென்ன வெள்ளை சட்டை போட்ட காவலராக இருந்தால் என்ன. மக்களை ஏமாற்றி பணத்தை பிடுங்க அவங்க கூட்டணி சேர்ற மாதிரி இவங்களும் சேரப்போறாங்களா சாமி. இலவசப்பயணம் மேற்கொள்ளட்டும்


Shivakumar
செப் 20, 2025 19:05

வேற வழி இல்ல உங்களுக்கு இந்த மாதிரி சில பல கட்சிகளிடம் இருந்து ஆட்களை பேரம் பேசி இழுத்து கட்சி நடத்தினால்தான் உண்டு. உங்களுக்காக உழைக்கும் கீழ்மட்ட தொண்டனுக்கு கட்சியில் பதவி கொடுக்கப்போவதில்லை என்று உங்க தொண்டர்களுக்கு எப்போ தெரியுமோ அப்போ உங்க கட்சி காலி.


சிந்தனை
செப் 20, 2025 18:45

திருடர் முன்னேற்றக் கழகம்


ramesh
செப் 20, 2025 21:31

என்ன சிந்தனை தங்களை பற்றியே புகழ்ந்து கருத்து போட்டு இருக்கிறீர்களே


krishna
செப் 20, 2025 16:41

THUNDU SEATTIU EDHAI THINNAL PITHAM THELIUM ENA THIRIVADHU COMEDY.2026 EPPADIYAAVADHU SENGAL THIRUDAN CM INBA ANNA DY CM.ADH7 MATTUME ILAKKU.KEVALATHIN UCHAM.


Rajamani K
செப் 20, 2025 13:34

என்னதான் அகலமாய்த் திறந்து வைத்தாலும், வாயில் முழுதும் சிலந்திக் கூடுதான் மிஞ்சும்


ராமகிருஷ்ணன்
செப் 20, 2025 13:06

சரியான முறையில் பங்கு தருபவர்களை வரவேற்கிறது. இதுதான் முக்கிய மைய கருத்து. செந்தில் பாலாஜி அந்த மாதிரி அள்ளி அள்ளி பங்கு கொடுத்து திமுகவின் செல்வாக்கை பெற்றார்.


சசிக்குமார் திருப்பூர்
செப் 20, 2025 11:08

ஏற்கனவே திமுக அமைச்சராக 80℅ அதிமுகவின் எடுபிடி தான்


Rajarajan
செப் 20, 2025 10:33

அது இருக்கட்டும். அண்ணா தி.மு.க.வில் இருக்கும்போது, தி.மு.க. நல்ல கட்சி என்று தெரியவில்லையா? இப்போது மட்டும் கட்சி மாறுபவர்களுக்கு, இதே கசந்த கட்சிகள் எப்படி இனிக்கிறது ?? பதவிக்காக இப்படியா கேவலமாக நடந்துகொள்வது ?? இதில் கொள்கை, சேவை, இடியாப்பம், புண்ணாக்குனு அளந்து விடுவது. அரசியல்வாதிகள் வெளியே சென்று வேலை தேடினால், யாராவது மதிப்பார்களா ?? எந்த தகுதியாவது உள்ளதா ?? இதுதான் இந்திய அரசியலின் பலமே. தகுதி, திறமை, உழைப்பு, கல்வி என எதுவுமே வேண்டியதில்லை. ஆனால், நாடாளலாம்.


சுந்தரம் விஸ்வநாதன்
செப் 20, 2025 09:51

கதவுகள் எதற்கு? கழற்றி விடலாமே. ஒருவேளை அங்கிருந்து யாரும் வெளியே ஓடிவிடக்கூடாது என்பதற்காக கதவு வைத்திருக்கிறார்களோ


hariharan
செப் 20, 2025 09:18

மேகா ஊழல் செய்ய ஆட்கள் தேவை. இஸ்த்திரி பெட்டி, மேகா வாஷிங்மிஷின் ரெடி. மாதத்திற்கு குறைந்தபட்சம் ஒரு சூட்கேஸ், ஹிஹிஹிஹி... மற்ற கவனிப்புகளும் உத்தரவாதம்.


முக்கிய வீடியோ