உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / கம்யூனிசத்தை விமர்சித்து தி.மு.க., ராஜா பேச்சு: பதிலடியாக வெளியான பாடலால் சர்ச்சை

கம்யூனிசத்தை விமர்சித்து தி.மு.க., ராஜா பேச்சு: பதிலடியாக வெளியான பாடலால் சர்ச்சை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெரம்பலுார்: 'அந்த சாரு யாரு சொல்லவேணும் ராசா' என, நீலகிரி எம்.பி.,யும், தி.மு.க., துணை பொதுச்செயலருமான ராஜாவை விமர்சித்து, மார்க்சிஸ்ட் கம்யூ., நிர்வாகி எழுதியுள்ள பாடல் சமூக வலைதளங்களில் வைரலாகி, அரசியல் வட்டாரத்தில் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.சென்னை பச்சையப்பன் கல்லுாரியில் நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சியில், கம்யூனிசம் மற்றும் திராவிட கொள்கைள் குறித்து ராஜா பேசுகையில், 'சுயநலவாதிகள் ஆன தலைவர்களால் கம்யூனிசம் தோற்றது' என விமர்சனம் செய்திருந்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=avvf1otx&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ராஜாவையும், அவர் சார்ந்திருக்கும் தி.மு.க.,வையும் விமர்சித்து, மார்க்சிஸ்ட் கம்யூ., நிர்வாகி வரத வசந்தராஜன் என்பவர் எழுதியுள்ள பாடல், சமூக வலைதளங்களில் வைரலாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அந்த பாடல் வரிகள்:

காளை மாட்டில் கறப்பவராம் ராசா ராசாகாம்புமில்லே மடியுமில்லே லேசா லேசாகாற்றலையில் காசுபார்த்த ராசா ராசாகம்யூனிசம் பழிக்க வந்த காமெடி பீசா!பெண்ணுரிமை பேசியதும்பழங்கதையாச்சு!மாணவிகள் வெளிவரவேபயப்படலாச்சு!உடன்பிறப்பு மாட்டுதுங்க பாலியல் கேசாஅந்த சாரு யாரு சொல்லவேணும் ராசா ராசா! (காளை)பரம்பரைக்கு தலைமைப்பதவி பட்டா போட்டாச்சுபட்டியல் ஜாதிகளை ஒதுக்கி விட்டாச்சுசமூகநீதி பேசுகிற ராசா ராசாசந்ததிக்கே துாக்கலாமா கூசா கூசா!இப்படி அந்தப் பாடல் வரிகள் உள்ளன.

பதிலடி கொடுக்கவே பாடல்!

பாடலாசிரியர் வரத வசந்தராஜன் கூறுகையில், “மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியின் திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டக்குழு உறுப்பினராகவும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்க மாவட்ட செயற்குழு உறுப்பினராவும் உள்ளேன்.“சென்னை பச்சையப்பன் கல்லுாரியில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய, எம்.பி., ராஜா, 'கம்யூனிசம் தோற்றது' என, சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையிலேயே இந்த பாடலை எழுதியுள்ளேன்,” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Raj S
ஜன 10, 2025 19:26

கனிஞ்ச பாட்டியை பத்தி பாட்டுல எதுவும் இல்லையே... ஏன் இப்டி ஜோடி புறாக்களை பிரிக்கிறீங்க?


Yes your honor
ஜன 10, 2025 18:07

உண்டியலில் கிடக்கும் சேஞ்சுகளில் ஒரு பீஸ் எதோ ரேர் பீஸாக தெரிகிறதே


Karthik
ஜன 10, 2025 14:42

இப்ப உன்னோட டேர்ன்.. பதில் சொல்லு ராசா..?? யாரு "" அந்த "" சாரு..????


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜன 10, 2025 11:20

பாடல் வரிகள் குறித்து .. கருத்தென்ன ????


கிஜன்
ஜன 10, 2025 10:39

கலைஞரால் தகத்தகாய சூரியன் என்ற பாராட்டைப்பெற்ற ஒரே கட்சிக்காரர் அ.ராசா மட்டுமே ...


V வைகுண்டேஸ்வரன்,chennai
ஜன 10, 2025 13:54

யோவ் கிச்சன் அதான் perambalur ரில் இருந்து பேக் பண்ணி வேற தனி தொகுதியில் அனுப்பினார்கள். சமூக நீதி மாடல் இதுதான் .


சம்பா
ஜன 10, 2025 10:00

ராசா ஒரு ....


கட்டத்தேவன்,,திருச்சுழி
ஜன 10, 2025 11:16

ராசா பாட்டெல்லாம் டெரராத்தான்யா இருக்கு ஆனா கடைசியில உண்டியல தூக்க வேண்டி வருமோ என பயந்து திமுகவுக்கு ஜால்ரா தட்ட ஆரம்பிச்சிடுறீங்களே!


kulandai kannan
ஜன 10, 2025 09:41

திமுகவுக்கு இப்போது ஏழரை. பலமுனை தாக்குதல் நடக்கிறது.


ராமகிருஷ்ணன்
ஜன 10, 2025 09:15

எது எப்படியோ அடித்து கொண்டு கூட்டணி உடைந்து துண்டு துண்டாக போயி திமுக படுதோல்வி அடைய மனப்பூர்வமான வாழ்த்துக்கள்


subramanian
ஜன 10, 2025 08:56

ஊழல் கைதி ஆ....ராசா.... வாயில் சனி பகவான் ப்ரேக் டான்ஸ் ஆடுகிறார்


பேசும் தமிழன்
ஜன 10, 2025 07:46

உண்மை நிலையை அப்படியே எழுதி இருக்கிறார்... ராஜா தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும்.... யார் அந்த சார் ???


புதிய வீடியோ