- நமது நிருபர் - 'சட்டசபை மற்றும் பொது மேடைகளில், முதல்வர் ஸ்டாலின் புகழ் பாடுவோருக்கு, மீண்டும் 'சீட்' வழங்க வேண்டாம்' என, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனிடம், அக்கட்சி நிர்வாகிகள் வலியுறுத்தி உள்ளனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=sm0zj8fq&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தி.மு.க., கூட்டணியில், விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.எல்.ஏ.,க்கள், சட்டசபை உட்பட பல இடங்களிலும், கட்சி தலைவர் திருமாவளவன் புகழ் பாடுவதோடு, தி.மு.க., தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் புகழ் பாடுவதையும் வழக்கமாக வைத்துள்ளனர். தி.மு.க., மற்றும் முதல்வரை எதிர்க்கட்சியினர் விமர்சித்தால், முதல் ஆளாக பதில் அளிப்பது, வி.சி., நிர்வாகிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து, வி.சி., நிர்வாகிகள் கூறியதாவது: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பலத்தை தி.மு.க., உணரவில்லை. கூட்டணியில் எங்கள் கட்சியை, காங்கிரஸ், தே.மு.தி.க.,வை விட குறைத்து மதிப்பிடுகிறது. இதற்கு, வி.சி.,யில் இருக்கும் சில நிர்வாகிகள் உடந்தையாக இருக்கின்றனர். தி.மு.க.,வால் பலன் அடைந்தவர்கள், எவ்வளவு தொகுதிகள் தி.மு.க., ஒதுக்கினாலும் கூட்டணியில் தொடர வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். தி.மு.க., அனுதாபிகளாக இருக்கும் அவர்கள், ஸ்டாலின் புகழ் பாடுவோராக உள்ளனர். எனவே, வி.சி.,யில், மாவட்டச் செயலர் போன்ற பதவிகள், எப்படி ஒருமுறை மட்டும் வழங்கப்படுகிறதோ, அதேபோல், எம்.எல்.ஏ., சீட்டும் ஒருமுறை மட்டுமே வழங்க வேண்டும். முதல்வர் ஸ்டாலின் விசுவாசிகளுக்கு, வி.சி.,யில் 'சீட்' வழங்கக்கூடாது என, திருமாவளவனிடம் தெரிவித்துள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.