உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / துாய்மை பணியாளர் எலும்பை முறித்த தி.மு.க., வட்ட செயலர் விஜயன் கைது

துாய்மை பணியாளர் எலும்பை முறித்த தி.மு.க., வட்ட செயலர் விஜயன் கைது

சென்னை: தாம்பரம் மாநகராட்சி, இரண்டாவது மண்டலத்தில், குப்பை சேகரிக்கும் பணியில், ஆந்திராவை சேர்ந்த காசராஜ், 42, என்பவர் ஈடுபட்டு வருகிறார். ஜூன், 8 மாலை 4:00 மணிக்கு, லோடு ஆட்டோவில் குப்பை ஏற்றிச் சென்ற அவர், கன்னடப்பாளையம் கிடங்கில் கொட்டிவிட்டு திரும்பினார்.அப்போது, தாம்பரம் மாநகராட்சி, 52வது வட்ட தி.மு.க., செயலர் விஜயன், 44, மற்றும் அவரது கூட்டாளிகள் நான்கு பேர் சேர்ந்து, 'பல்லாவரம் குப்பையை எதற்காக எங்கள் பகுதியில் கொட்டுகிறாய்' எனக்கேட்டு, இரும்பு பைப் மற்றும் கட்டையால் சரமாரியாக தாக்கினர்.இதில், காயமடைந்த காசராஜை, சக பணியாளர்கள் மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்று, மேல் சிகிச்சைக்காக, சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு, 'சிடி' ஸ்கேன் எடுத்து பார்த்ததில், காசராஜியின் இடது தோள்பட்டை எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து, கே.கே., நகரில் உள்ள இ.எஸ்.ஐ., மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட, அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.சம்பவம் குறித்து, தாம்பரம் போலீசார் வழக்கு பதிந்து, நேற்று முன்தினம், இருவரை கைது செய்தனர். தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியான தி.மு.க., வட்ட செயலர் விஜயனை, நேற்று கைது செய்தனர். மேலும் இருவரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Ramesh Sargam
ஜூன் 11, 2025 20:51

திமுக என்றாலே திருட்டுப்பயல்கள்தான்.


Ganapathy
ஜூன் 11, 2025 17:57

பொம்பள பொறுக்கிகளின் ஆட்சி நடக்கிறது.


ராமகிருஷ்ணன்
ஜூன் 11, 2025 14:14

வர உள்ள தேர்தலில் திமுகவின் முதுகெலும்பு முறியப்போகுது. அப்புறம் இந்த குப்பை எல்லாம் திருட்டு கேஸில் உள்ளே வச்சு எல்லா எலும்புகளையும் முறிக்கலாம்


ஏமாளி
ஜூன் 11, 2025 13:02

ஜாதி குற்றங்கள் எல்லாம் அந்த காலம் கட்சி வெறி குற்றங்களே புதிய காலம் ஆனால் நீதிமன்றத்துக்கு இது புரிய இன்னும் ஆயிரம் வருஷங்கள் ஆகும் அதுவரை நாம் வரி கட்ட வேண்டியதுதான் அவர்களின் சம்பளத்திற்கு


ஆரூர் ரங்
ஜூன் 11, 2025 10:32

கருணா எப்போதுமே தன்னை ஏழைப் பங்காளி, சாமானியன் என்றெல்லாம் அழைத்துக் கொள்வார். இப்போ கடமை கண்ணியம் கட்டுப்பாடு எல்லாம் காற்றில் பறக்கவிட்டு வட்டம் ஆடுகிறது. தெலுங்கர் ஆட்சியில் ஒரு தெலுங்கர் மீது கைவைக்க என்ன தைரியம்?.


திருட்டு திராவிடன்
ஜூன் 11, 2025 10:11

பொறுக்கிகள் நிறைந்த கட்சி என்பது எவ்வளவு உண்மை பாருங்கள். அயோக்கியர்கள் அதிகம் உள்ள கட்சி அதுவே. வாழ்க்கையில் இவர்கள் என்ன கதியாவார்களோ கடவுளுக்கு தான் வெளிச்சம். இந்த அயோக்கியர்கள் ஒரு நாள் நிச்சயம் அழிந்தே போவார்கள்


சமீபத்திய செய்தி