உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / காங்கிரஸ் ராகுலுக்கு தி.மு.க., பகிரங்க கேள்வி

காங்கிரஸ் ராகுலுக்கு தி.மு.க., பகிரங்க கேள்வி

சென்னை: 'தமிழகத்தில், எஸ்.ஐ.ஆர்., எனப்படும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி மூலம் லட்சக்கணக்கான வாக்காளர்கள் நீக்கப்பட்ட விவகாரத்தில், ராகுல் மவுனம் காப்பது ஏன்? அவரது நிலைப்பாடு என்ன?' என, தி.மு.க., செய்தித் தொடர்பாளரும், வழக்கறிஞருமான சரவணன் கேள்வி எழுப்பி உள்ளார்.தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரியும், எஸ்.ஐ.ஆர்., பணிகளில் நடந்ததாக கூறப்படும் முறைகேடுகளை கண்டித்தும், தலைநகர் டில்லியில், காங்கிரசைச் சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் உள்ளிட்டோர் நேற்று போராட்டம் நடத்தினர்.இந்நிலையில், தி.மு.க., செய்தித் தொடர்பாளர் சரவணன், சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்ட பதிவு: தமிழகத்தில், எஸ்.ஐ.ஆர்., மூலம் லட்சக்கணக்கான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. இது பற்றி ராகுல் வாய் திறக்காதது ஏன்? இதில் அவரது நிலைப்பாடு என்ன?'எஸ்.ஐ.ஆர்., பணிக்கு பின், புதிதாக தேர்வான அனைத்து மாநில அரசுகளையும் கலைத்து, ஓட்டுச்சீட்டு முறையில் தேர்தல்களை நடத்த வேண்டும்' என, காங்., தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ள கருத்தை ஆதரிக்கிறாரா, இல்லையா என்பதை ராகுல் முதலில் தெளிவுபடுத்த வேண்டும்.காங்கிரசின் கூட்டணி கட்சியான த.வெ.க., மற்றும் முதல்வர் விஜய்க்கு பயந்து தான், தமிழக எஸ்.ஐ.ஆர்., விவகாரம் குறித்து பேச ராகுல் தயங்குகிறாரா? ஏன் இந்த இரட்டை வேடம்?. இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

Bhakt
அக் 07, 2026 23:17

பப்புவுக்கு ராஜீவின் முகம் அல்ல சூ கூட பொருந்தவில்லை


குமரன்
அக் 07, 2026 22:45

பழைய ஓட்டுச்சீட்டு முறை என்றால் தீமுகவிற்கு பழக்கப்பட்டுபோனது அதற்காகவே கட்சி காலங்காலமாக இளைஞர் பாசறையை வைத்துள்ளது ஓட்டுச்சீட்டை மாற்றி குத்துவது கைவந்த கலை


HoneyBee
அக் 07, 2026 21:40

அவரே எப்படியாவது பிரதமர் பதவி உயர்வு வேண்டும் என்று அலைகிறார். எதையாவது உருட்டி உருட்டி பயப்புள்ள அந்த பதவி பெறனும்னு குரளி வித்தை செய்யறான் ராகுல். கட்டாயம் நடக்க முடியாத நிலையில் நீங்கள் வேறு.


பேசும் தமிழன்
அக் 07, 2026 19:46

அது வந்து... ஆனால் அது வந்து.... இப்போ என்ன சொல்லி சமாளிக்கிறது.... ஆமாம் என்று சொன்னால்.... கேரளா... கர்நாடகா... தெலுங்கானா... சட்டிஸ்கர் மாநிலங்களில் எப்படி வெற்றி பெற்றீர்கள் என்று கேட்பார்களே ?


himRa
அக் 07, 2026 18:32

காரைக்குடி ஜமீந்தார் நிலைமை ரொம்ப மோசம்..... நாளா பக்கமும் அடி விழுது...


Abdul Rahim
அக் 07, 2026 19:59

காரைக்குடி காரன பிடிச்சி தொங்காம உங்க கருத்து எழுதும் உரிமையை மட்டும் பயன்படுத்துங்க


himRa
அக் 07, 2026 20:34

காரைக்குடி அண்ணே , விடுங்க...நீங்க வாங்காத அடியா...


pkgk
அக் 07, 2026 15:42

இந்த கேள்வி நியாயமானதாகத் தெரிகிறது. SIR என்பது அனைத்து மாநிலங்களிலும் உள்ள பிரச்சினையைக் குறிக்கிறதா?


Abdul Rahim
அக் 07, 2026 14:58

ராகுல் ஜியை கேள்வி கேட்கும் தகுதி திமுக காரனுக்கு இல்லை நீங்க முதலில் மேற்கு வங்காளம் பீகார் மாநில அரசுகளை கலைக்க சொல்லுங்க அதை பின்பற்றி தமிழக தவெக அரசை கலைக்க கோரலாம் ஊழல் வழக்குகளில் இருந்து தப்பிக்க பாஜகவிடம் அடிமையாகி போன கழகங்கள் பேச அறுகதை இல்லை....


R.MURALIKRISHNAN
அக் 07, 2026 16:43

மீண்டும் இந்தியாவிற்கு எல்லை தாண்டவா? கலைக்க சொல்கிறீர்கள் ரகீம். இப்போது தான் அங்கு தீவிரவாதம் குறைந்துள்ளது.


Mahendran Puru
அக் 07, 2026 14:46

எஸ் ஐ ஆர் மேற்கொள்ளப்பட்டது ஸ்டாலின் அரசு காலத்தில். அப்போது தூங்கிவிட்டு இப்போது சற்றும் சம்பந்தமே இல்லாமல் ராகுல் காந்தியை கேள்வி கேட்பது கோமாளித்தனமாக உள்ளது.


G Mahalingam
அக் 07, 2026 13:56

ராகுல் காந்தி 53 வயது குழந்தை. பல தடவைகள் மன்னிப்பு கேட்டு கேட்டு மன்னிப்பை ஒரு நகைச்சுவையாக மாற்றிய பெருமை இவரையே சாரும்.


ராஜா
அக் 07, 2026 12:44

செத்தவனுக்கு ஓட்டு கொடுக்க நம் நாட்டு அரசியல்வாதிகளால் மட்டுமே முடியும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை