உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / பயங்கரவாதிகளை மதுரை சிறைக்கு மாற்ற வேண்டாம்; பாரத் ஹிந்து முன்னணி மனு

பயங்கரவாதிகளை மதுரை சிறைக்கு மாற்ற வேண்டாம்; பாரத் ஹிந்து முன்னணி மனு

சென்னை; 'சென்னை புழல் சிறையில் இருக்கும் பயங்கரவாதிகளை, மதுரை சிறைக்கு மாற்ற வேண்டாம்' என, பாரத் ஹிந்து முன்னணி சார்பில், சிறைத்துறை டி.ஜி.பி.,யிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட, போலீஸ் பக்ருதீன், பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் போன்றோர், சென்னை புழல் சிறையில்அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீது, சிறைத்துறை காவலர்கள் தாக்குதல் நடத்தியதாக கூறி, அவர்களுக்கு ஆதரவாக, த.மு.மு.க., உள்ளிட்ட முஸ்லிம் அமைப்பினர், போராட்டம் அறிவித்தனர்.காவலர்களை தாக்கிய பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பாரத் ஹிந்து முன்னணி உள்ளிட்ட ஹிந்து அமைப்புகள், போராட்டம் அறிவித்தன.நேற்று ஒரே நாளில், இரு தரப்பினரும் சிறைத்துறை டி.ஜி.பி., அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்த நிலையில், போலீசார் அனுமதி மறுத்து விட்டனர்.இதன் காரணமாக, போராட்டம் எதுவும் நடக்கவில்லை. பாரத் ஹிந்து முன்னணி மாநிலத் தலைவர் பிரபு, சிறைத்துறை டி.ஜி.பி.,யிடம், கோரிக்கை மனு அளித்தார்.அதில் கூறியிருப்பதாவது:புழல் சிறையில் உள்ள, அல் - உம்மா இயக்கத்தைச் சேர்ந்த பயங்கரவாதிகள், போலீஸ் பக்ருதீன், பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் போன்றோர், சிறைத்துறை காவலர்களை அடித்து, கொலை முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் மீது சிறைக்கு உள்ளே, சட்டத்திற்கு புறம்பாக மொபைல் போன் பயன்படுத்தியது உள்ளிட்ட வழக்குகள்உள்ளன.

சிறையில் பாதாம், முந்திரி

'சிறையில் என்னை அடித்து துன்புறுத்தினர்; அதனால் மருத்துவ வசதி வேண்டும்' என, போலீஸ் பக்ருதீன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை பரிசோதனையில், அவருக்கு, உள் காயம், எலும்பு முறிவு போன்ற எதுவும் இல்லை என்பது தெரியவந்தது. சிறையில் அவர் பாதாம், பிஸ்தா, முந்திரி, பேரிச்சம்பழம் என, சத்தான உணவுகளை சாப்பிட்டு சகல வசதியுடன் உள்ளார். அவரது அறையை சுத்தம் செய்ய, உணவு சமைத்து கொடுக்க, துணி துவக்க, மூன்று ஹிந்து சிறைவாசிகள் பணியாற்றுகின்றனர். குற்றவாளிகளுக்கு ஆதரவாக தொடர்ந்து குரல் கொடுக்கும், அப்துல் ரஹீமின் பின்னணியை ஆராய்ந்து, அவர் மீதும், அவர் கட்சியை சார்ந்தவர்கள் மீதும், நடவடிக்கை எடுக்க வேண்டும்.குற்றவாளிகளை, மதுரை சிறைக்கு மாற்ற வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர். அவ்வாறு மாற்றினால், வழக்கு விசாரணை தாமதப்படும். எனவே, புழல் சிறையில் இருந்து, அவர்களை மதுரை சிறைக்கு மாற்றக்கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

balasanthanam
ஜன 21, 2025 22:54

All this desa drohikal should be encountered immediately there is no need for any more enquiries or cases.Like saudi Arabia rules here implented.Waste of expensez for exchequer


Ramesh Sargam
ஜன 21, 2025 13:26

ஒன்று செய்யலாம். அப்படி மாற்றும்போது அவர்கள் தப்பிச்செல்ல முயல்வார்கள். அப்பொழுது என்கவுண்டர் செய்து வழக்கை முடிக்கலாம்.


Nandakumar Naidu.
ஜன 21, 2025 13:25

தேச விரோத, ஹிந்து விரோத ஆட்சி நடத்தினால் சிறைகளின் லட்ச்ணம் இப்படித்தான் இருக்கும்.


Dharmavaan
ஜன 21, 2025 12:38

இந்த வசதிகளை நிறுத்த மனுவில் ஏன் சேர்க்கவில்லை சிறையா வீடா திருட்டு சிறை அதிகாரிகளை எப்போது தண்டிப்பது


சமீபத்திய செய்தி