உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / விடியல் பயணம் என உயிரோடு விளையாடுவதா?: காலாவதி பஸ்களை இயக்குவதால் மக்கள் திக் திக்

விடியல் பயணம் என உயிரோடு விளையாடுவதா?: காலாவதி பஸ்களை இயக்குவதால் மக்கள் திக் திக்

சேலம்: 'விடியல் பயணம்' என, மக்கள் உயிரோடு விளையாடும் அவலம் நிலை உள்ளதாக, பா.ஜ., குற்றம் சாட்டியுள்ளது. மேலும், காலாவதி பஸ் இயக்க அனுமதி கொடுத்தோர் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தியுள்ளது.பா.ஜ., சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவு மாநில தலைவர் கோபிநாத், தமிழக அரசு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனருக்கு அனுப்பிய மனு:கடந்த, 12ல், சேலம் மாவட்டம் ஆத்துாரில் இருந்து தவளப்பட்டிக்கு சென்று கொண்டிருந்த அரசு பஸ், கள்ளுக்காட்டில், 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில், பள்ளி மாணவர், மூன்று பேர் உட்பட ஏழு பேர் காயமடைந்து மருத்துவமனையில் உள்ளனர்.விபத்துக்குள்ளான பஸ்சுக்கு தகுதிச்சான்று, 2024 ஜூலை, 27ல் முடிந்திருந்தது. தகுதியற்ற பஸ்சை இயக்கியதே விபத்துக்கு காரணம். இதுபோன்று பணிமனைகளில் ஏராளமான பஸ்கள் உள்ளன. தமிழக முதல்வரும், போக்குவரத்து அமைச்சரும், 'விடியல் பயணம்' என சொல்லி, மக்கள் உயிர் பயத்துடன் பயணிக்கும் அவல நிலையை உருவாக்கி வருகின்றனர். காலாவதி வாகனம் இயக்க அனுமதி கொடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.கோபிநாத் கூறுகையில், ''கள்ளுக்காட்டில் விபத்துக்குள்ளான பஸ் எண்ணை வைத்து, ஆர்.டி.ஓ., இணையதளத்தில் ஆய்வு செய்ததில், அந்த பஸ் காலாவதி என தெரிந்தது. பள்ளி பஸ் விபத்தில் சிக்கினால், அதற்கான அனுமதி, தரத்தை ஆய்வு செய்து கிடுக்கிப்பிடி போடும் அரசு, ஆயிரக்கணக்கான மாணவ - மாணவியர் பயணிக்கும் அரசு பஸ்களை கண்டு கொள்ளாதது கண்டிக்கத்தக்கது. இதுகுறித்து, மாநில தலைமைக்கு கொண்டு சென்று போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம். இது தொடர்பாக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்,'' என்றார்.

15 ஆண்டுக்கு பிறகும் 35 பஸ்கள் இயக்கம்

சேலம் கோட்ட அரசு போக்குவரத்து அலுவலர்கள் கூறியதாவது:சேலம் கோட்டத்தில் உள்ள, 32 கிளை பணிமனைகள் வாயிலாக, 837 டவுன் பஸ் உட்பட, 1,900 பஸ்கள் இயக்கப்படுகின்றன. பஸ்களை, 15 ஆண்டுகள் மட்டுமே இயக்க வேண்டும். பின் கழிவு செய்ய வேண்டும். 15 ஆண்டுகளுக்கு மேல் இயக்கப்படும் பஸ்சுக்கு, 2024 செப்டம்பர் முதல், 2025 செப்டம்பர் வரை, ஆர்.சி., நீட்டித்துக்கொள்ள, வட்டார போக்குவரத்து அலுவலர் வாயிலாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சேலம் கோட்டத்தில், 35 பஸ்கள், ஆர்.சி., காலம் முடிந்து, புதுப்பிக்கப்பட்ட நிலையில் இயக்கப்படுகின்றன. வரும் மே மாதம், 106 புது பஸ்கள் வழங்கப்பட உள்ளன.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Ramesh Sargam
பிப் 16, 2025 20:05

காலாவதி பஸ்களில் பயணிப்பதால் மட்டும் மக்கள் திக் திக் அடைவதில்லை. அது வீதியில் செல்லும்போது, வீதியில் நடமாடுபவர்கள் அத்தகைய பஸ்களை கண்டாலே திக் திக் அடைகிறார்கள்.


Ram pollachi
பிப் 16, 2025 12:46

தானம் கொடுத்த மாட்டு பல்லை புடிச்சு பார்த்த கதை, சும்மா கொடுத்த தோசையை சாப்பிடாமல் அதில் உள்ள ஓட்டையை....., எந்த ஜனங்களும் இலவச பேருந்து வேண்டும் என கேட்கவில்லை. நாம் ஓட்டும் வாகனங்கள் எப்படி உள்ளது... ரோட்டில் ஓடும் இரண்டு நான்கு சக்கர வண்டியின் நிலையை முதலில் பாருங்கள். அரசியல்வாதிகளின் வயிற்றில் அடிக்க வேண்டாம் பிழைத்து போகட்டும்.


Ramesh Sargam
பிப் 16, 2025 12:23

இலவசம் என்று கூறி, காலாவதியான பஸ்களை இயக்கி, மக்களின் உயிர்களை பணயம் வைத்து திமுக அரசு மக்களின் உயிருடன் விளையாடுகிறது. அப்படிப்பட்ட பஸ்களில் எவனாவது ஒரு அமைச்சரோ, MP -யோ, MLA -வோ, ஏரியா கவுன்சிலரோ பயணிப்பார்களா? மாட்டார்கள். ஏன் என்றால் அவர்கள் உயிரின் மீது அவர்களுக்கு அவ்வளவு அக்கறை. மக்கள் உயிர் என்றால் சக்கரை.


subramanian
பிப் 16, 2025 11:12

200 கோடி காரில் விளையாடி மகிழும் உதயநிதி.


நிக்கோல்தாம்சன்
பிப் 16, 2025 08:53

பள்ளி பேருந்து விபத்தில் சிக்கினால் தாளாளர் மீது கேஸ் போடுவாங்க, அப்போ இங்கே போக்குவரத்து துறை அமைச்சர் மீது கேஸ் பதியலாம்


கிஜன்
பிப் 16, 2025 07:55

எல்லாத்தயும் இலவசமா கேட்டா இந்தமாதிரி வண்டிதான் ஓட்டமுடியும் ....


orange தமிழன்
பிப் 16, 2025 06:14

எங்கும் எதிலும் லஞ்சம்.....திராவிட மாடலின் அரசு முற்றிலும் செயல் இழந்துவிட்டது......சாலைகள் படு மோசம், அரசு பேருந்துகள் கேவலம்..... காசு வாங்கி ஒட்டு போடுகிற மக்கள் இருக்கும் வரை இத்தகைய அவலங்கள் தொடரும்.....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை