உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / கிட்னி விற்கும் நிலைக்கு தள்ளாதீங்க! அரசுக்கு விசைத்தறியாளர் வேண்டுகோள்

கிட்னி விற்கும் நிலைக்கு தள்ளாதீங்க! அரசுக்கு விசைத்தறியாளர் வேண்டுகோள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பல்லடம்: 'நாமக்கல்லில் நடந்ததை போன்று, கிட்னியை விற்கும் நிலைக்கு எங்களை தள்ளிவிட வேண்டாம்' என, விசைத்தறிஉரிமையாளர்கள், அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். திருப்பூர், கோவை மாவட்ட விசைத்தறி உரிமையாளர் சங்க செயலர் பாலசுப்பிரமணியம் கூறியதாவது: திருப்பூர், கோவை மாவட்டங்களில் உள்ள விசைத்தறிகளில், 20 லட்சத்துக்கும் மேற்பட்ட நெசவாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பயனடைந்து வருகின்றனர். கொரோனா காலத்தில் இருந்தே தொழில் அழிவு பாதையை நோக்கி சென்று வருகிறது. நவீன தறிகள் அதிகரித்ததால், விசைத்தறிகளின் உற்பத்தி குறைந்து, தறிகளை பழைய இரும்புக்கு உடைத்து விற்கும் அவலம் ஏற்பட்டு வருகிறது. விசைத்தறியாளர்களுக்கு ஊதிய இழப்பு ஏற்படுவதால், குடும்பம் நடத்த இயலாமல், வாங்கிய கடன்களை அடக்க, உடலின் மிக முக்கிய உறுப்பாக கருதப்படும் கிட்னியை விற்கும் அவலம் ஏற்படுகிறது. நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் பகுதியில் நடந்துள்ள சம்பவம், விசைத்தறி தொழில் எந்த அளவுக்கு உள்ளது என்பதை எடுத்துக்காட்டுகிறது. விசைத்தறியாளர்களுக்கு முழு வேலைவாய்ப்பு கிடைக்க வழிவகை செய்தால் மட்டுமே தொழிலை காப்பாற்ற முடியும். விசைத்தறிகளுக்கான தனி ரக ஒதுக்கீடு, அரசு பணியாளர்களுக்கான சீருடைகள் தயாரித்தல், மஞ்சள் பை திட்டம் உள்ளிட்டவற்றை செயல்படுத்தினால் தான் விசைத்தறி தொழில் மேம்படும். நீண்ட காலமாக கேட்கப்பட்டு வரும் கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் கவனத்தில் கொண்டு செயல்படுத்தினால் தான், விசைத்தறி தொழிலை பாதுகாக்க முடியும். விசைத்தறியாளர்களை, கிட்னியை விற்கும் அவல நிலைக்கு தள்ளிவிட வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

RAMESH
ஜூலை 22, 2025 19:27

இதில் உள்ள உண்மை தன்மையை தெரிந்து கொள்ள சிபிஐ விசாரணைக்கு தமிழக முதல்வர் உத்தரவு இட வேண்டும்......


அப்பாவி
ஜூலை 22, 2025 07:43

உங்கள் தயாரிப்புகளை மக்கள் வாங்கணும். அவிங்க கிட்டே சொல்லுங்க. இல்லே நீங்களும் விசைத்தறிக்கு மாறுங்க. எதுக்கெடுத்தாலும் அரசுகளை குறைசொன்னா அவிங்களால் ஒண்ணும் கழட்ட முடியாது. புதுசா கட்சி வந்து ஆட்சி அமைச்சாலும் இதே கதிதான்.


vivek
ஜூலை 22, 2025 15:57

அப்பாவிக்கு மூளை இல்லை. அதை மட்டும் கேட்காதீங்க


raja
ஜூலை 22, 2025 07:18

திராவிட மாடல் ஆட்சி நடத்தும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாப்களின் ஆட்சியில் தமிழகம் அனைவருக்கும் ஆன முன்னேற்றத்தை அடைந்து கொண்டு இருக்கிறது. எப்படின்னா முன்னே நெசவாளிங்களுக்கு கஞ்சி தொட்டி வச்சாங்க ... இப்போ கிட்னி விக்கிறாங்க....விடியல் சூப்பரடா...