உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / பா.ஜ., அண்ணாமலைக்கு எதிராக... பேசாதீர்கள்! கட்சியினருக்கு அ.தி.மு.க., பழனிசாமி உத்தரவு

பா.ஜ., அண்ணாமலைக்கு எதிராக... பேசாதீர்கள்! கட்சியினருக்கு அ.தி.மு.க., பழனிசாமி உத்தரவு

சென்னை: 'தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கு எதிராக எதுவும் பேச வேண்டாம்' என, அ.தி.மு.க.,வினருக்கு அக்கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். அ.தி.மு.க., மாவட்ட செயலர்கள் கூட்டம், சென்னையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. பொதுச்செயலர் பழனிசாமி தலைமை வகித்தார். காலை 11:30 மணிக்கு துவங்கி பகல் 1:00 மணி வரை நடந்த கூட்டத்தில், 2026 சட்டசபை தேர்தல் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

60 லட்சம் மக்கள் கூட்டத்தில் நடந்த நிகழ்வுகள் குறித்து, மாவட்ட செயலர்கள் கூறியதாவது:

கடந்த 40 நாட்களில், 118 சட்டசபை தொகுதிகளில் பிரசார பயணத்தை முடித்துள்ளேன். இப்பயணத்தில், 60 லட்சம் மக்களை சந்தித்துள்ளேன். தி.மு.க., ஆட்சிக்கு எதிராக, தமிழக மக்கள் கடும் கோபத்தில் இருப்பதை பார்க்க முடிந்தது. நான் சென்ற 118 தொகுதிகளில், 100ல் அ.தி.மு.க.,வுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. அந்த வெற்றியை பெற்றுத்தர வேண்டியது, மாவட்ட செயலர்களின் பொறுப்பு. சட்டசபை தேர்தல் அறிவிப்புக்கு இன்னும் ஆறு மாதங்களே உள்ளன. ஏழரை மாதங்களில் தேர்தலே முடிந்து விடும். எனவே, இன்றிலிருந்து மாவட்ட செயலர்களின் ஒரே பணி, தேர்தல் பணியாக மட்டுமே இருக்க வேண்டும். துாக்கத்தை பற்றி கூட கவலைப்படாமல், கடுமையாக உழைத்தால் தான், ஆட்சியை பிடிக்க முடியும். தி.மு.க., மீது, மக்களுக்கு உள்ள அதிருப்தியை பயன்படுத்தி, தேர்தல் பணிகளை வேகப்படுத்த வேண்டும். தமிழக அரசு ஊழியர்கள் தான், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளில் ஈடுபட போகின்றனர். இதில், ஆளுங்கட்சி முறைகேடு செய்ய வாய்ப்புள்ளது. எனவே, ஒவ்வொரு ஓட்டுச் சாவடியிலும் அ.தி.மு.க., கூட்டணிக்கு ஆதரவான ஓட்டுகள் நீக்கப்படாமலும், சம்பந்தமே இல்லாமல் அதிக வாக்காளர்கள் சேர்க்கப்படாமலும் தடுக்க வேண்டும். பண பலம் இறந்தவர்கள், இடம் மாறியவர்களின் ஓட்டுகள் நீக்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும். பூத் கமிட்டி நிர்வாகிகளை இப்பணியில் முழுமையாக ஈடுபடுத்த வேண்டும். இவ்வாறு பழனிசாமி பேசியதாக, மாவட்ட செயலர்கள் கூறினர். கூட்டத்தில் மாவட்ட செயலர்கள் பேசுகையில், கூட்டணியை பலப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியதுடன், தி.மு.க.,வின் பண பலம், த.வெ.க., மாநாட்டில் அ.தி.மு.க.,வை விஜய் விமர்சித்தது பற்றி, தங்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர். அதற்கு பதில் அளித்த பழனிசாமி, “வலுவான கூட்டணி கண்டிப்பாக உருவாகும்; அதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. அ.தி.மு.க., -- பா.ஜ., கூட்டணியை உடைக்க முயற்சிகள் நடக்கின்றன. அதற்கு நிர்வாகிகள் யாரும் இடம் கொடுக்கக் கூடாது . “தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை இப்போது அ.தி.மு.க.,வை விமர்சிப்பதில்லை; பழனிசாமியே முதல்வர் என்று பேச துவங்கி விட்டார். எனவே, அ.தி.மு.க.,வினர் யாரும் அண்ணாமலைக்கு எதிராக பேசக்கூடாது. ''புதிதாக கட்சி துவங்கியுள்ள விஜய், தொண்டர்களை உற்சாகப்படுத்துவதற்காக, சில விஷயங்களை பேசி இருக்கலாம். அதுகுறித்து நாம் கவலைப்பட தேவையில்லை. விஜய்க்கு எதிராகவும் கருத்து தெரிவிக்க வேண்டாம்,” என்று தெரிவித்துள்ளார்.

பழனிசாமி முதல்வராவார் அண்ணாமலை உறுதி

சென்னையில் நேற்று, மறைந்த மூப்பனார் நினைவு தின நிகழ்ச்சியில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி ஆகியோர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில், தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை பேசுகையில், “2026ல் ஆட்சி மாற்றம் வேண்டும் என, அனைவரும் பேச ஆரம்பித்து விட்டனர். தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வர் வேட்பாளரான முன்னாள் முதல்வர் பழனிசாமி, நிச்சயம் முதல்வர் நாற்காலியில் அமருவார். புதிய புரட்சி வரட்டும். ஏழைகளுக்கு விடிவெள்ளியாக அரசு செயல்பட வேண்டும்,” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

ராஜா
ஆக 31, 2025 16:11

திருமதி கேப்டன் சரியாக கணித்து இருக்கிறார்.நம்பினால் அது விளக்கெண்ணெய்க்கு கேடு என்று கூறியுள்ளார்


Oviya Vijay
ஆக 31, 2025 11:19

இதில் காமெடி என்னவென்றால் தேர்தல் முடிந்ததும் இக்கூட்டணி தோல்வி அடைகின்ற நிலையில் மீண்டும் இந்த கூட்டணியில் பிணக்கு ஏற்படும். கூட்டணி கண்டிப்பாக முறியும். அப்போது ஆட்டுக்குட்டி மீண்டும் எடப்பாடியைப் பார்த்து தற்குறி என்று சொல்லும். அதற்குள் எடப்பாடி உட்கட்சி பூசலில் செல்லாக்காசாகி காணாமல் போயிருப்பார். சொல்லப்போனால் தான் போட்டியிடும் தொகுதியிலேயே எடப்பாடி தோற்றுப் போனாலும் ஆச்சர்யப் படுவதற்கில்லை... 2026 தேர்தல் முடிந்தவுடன் அதிமுக என்ற ஒன்றே தள்ளாடி நின்று கொண்டிருக்கும்...


செல்வேந்திரன்,அரியலூர்
ஆக 31, 2025 15:53

அதெப்பிட்றா மதம் மாறிட்டாலே ஆட்டோ மேடிக்கா இந்திய எதிர்ப்பு என்பது உங்கள் இரத்தத்தில் ஊறி விடுமா நீ இதுவரை பதிவிட்ட கருத்துக்கள் அனைத்தும் இந்த தேசத்திற்கு எதிரானவையே இனிமேலும் இதுபோன்று வெறுப்பு கருத்துக்களை பதிவிடாதே எச்சரிக்கை...


Oviya Vijay
ஆக 31, 2025 22:44

அதெப்படி மிஸ்டர் செல்வேந்திரன்... சங்கியாக நீங்கள் இருப்பதனால் தான் உங்கள் மூளை வேலை செய்யவில்லையோ... பலமுறை நான் கூறியும் எனக்கு சம்பந்தம் இல்லாத ஒரு மதத்தை நீங்கள் சீண்டிக் கொண்டிருக்கும் போதே தெரிகிறது. நீங்கள் எவ்வளவு கீழ்த்தரமானவர் என்று... கொஞ்சமாவது திருந்துங்கடே...


அப்பாவி
ஆக 31, 2025 11:08

இங்கிலாந்தில் அரசியல் படிச்சிட்டு வந்திருக்காரு.


Venugopal S
ஆக 31, 2025 10:02

நான்கு நாட்களுக்கு முன்பு நயினார் நாகேந்திரன் ஒரு மீட்டிங்கில் நடிகர் சரத்குமார் எம் ஜி ஆர் அளவுக்கு மக்கள் ஆதரவு பெற்ற தலைவர் என்று பேசினார். அதிமுகவினர் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் இருக்கும் போதே தெரிகிறது அவர்கள் எம் ஜி ஆரை மறந்து விட்டனர். அடுத்து குஷ்பு ஜெயலலிதாவை விட செல்வாக்கு வாய்ந்த தலைவர் என்றாலும் ஏற்றுக் கொள்ளும் அளவுக்கு ஈ பி எஸ் பதவி மோகத்தில் இருக்கிறார்!


Oviya Vijay
ஆக 31, 2025 11:27

மிக உன்னிப்பாக அரசியலைக் கவனித்து, தனக்கே உரித்தான நாகரிக வார்த்தைகளைக் கொண்டு தன் கருத்துக்களை இங்கே பதிவிடுகிறார். பலமுறை இதனை நான் கவனித்திருக்கிறேன்... வாழ்த்துக்கள்... உங்கள் பணி தொடரட்டும்... மகிழ்ச்சி...


ராஜாராம்,நத்தம்
ஆக 31, 2025 15:55

அரிசி மூட்டைக்கு முட்டுக் கொடுப்பதில் வியப்பேதும் இல்லையே மதமாறிய கும்பல்களுக்கு பாஜக பெயரைக் கேட்டவுடன் சும்மா அல்லு விடுது


T.sthivinayagam
ஆக 31, 2025 09:50

தண்ணி தொட்டி தேடி போன கன்னுக்குட்டி இங்கு தாமரை நழிவி குட்டையில் விழுந்து தடா சாமி சாமி மக்கள் மத்தியில் தோன்றும் பாட்டு என்று கூறினார்கள்


vivek
ஆக 31, 2025 10:47

அந்த மனுக்களை திருடியது நீ என்று மக்கள் கூறுகின்றனர்


Oviya Vijay
ஆக 31, 2025 08:49

இதெல்லாம் எவ்வளவு கேவலம் தெரியுமா...


vivek
ஆக 31, 2025 09:10

இது கேவலம் இல்லை இருநூறு சொம்பு....முதலில் பிளாஸ்டிக் சேர் கும்பலை விடாதே


vivek
ஆக 31, 2025 09:10

இது கேவலம்மில்லை அறிவாலய அடைப்பு


vivek
ஆக 31, 2025 09:13

இது தான் கேவலம்...ஆக்சுபோர்டு பல்கலைக் கழகத்தில் வாடகை ரூம் எடுத்து பெரியார் படம் திறக்கப்பட்டது ஹி.. ஹி


T.sthivinayagam
ஆக 31, 2025 11:59

பெரியார் படம் திறந்தால் என்ன ஆரியபவன் ஹோட்டல் மீந்த வடைகள் கெட்டா போகபோது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை