உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / தபால் ஓட்டளிக்க ஆர்வம் காட்டாத முதியோர்

தபால் ஓட்டளிக்க ஆர்வம் காட்டாத முதியோர்

ஈரோடு; இடைத்தேர்தலில் தபால் ஓட்டளிக்க, 85 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் ஏனோ அதிக ஆர்வம் காட்டவில்லை.ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், 85 வயதுக்கு மேற்பட்ட முதியவர், மாற்றுத்திறனாளிகள், ஓட்டுச்சாவடிக்கு சிரமப்பட்டு வந்து ஓட்டளிப்பதை தவிர்க்கும் வகையில், தபால் ஓட்டு பெற முடிவு செய்யப்பட்டது.தொகுதியில், 85 வயதுக்கு மேற்பட்டோர், 2,529 பேர், மாற்றுத்திறனாளிகள், 1,570 பேர் என, 4,099 வாக்காளர் கண்டறியப்பட்டனர். அவர்களுக்கு ஓட்டளிப்பதற்கான படிவம் வீடு தேடிச்சென்று வழங்கப்பட்டது.மற்றும் நேற்று வரை இவர்களிடம் தபால் ஓட்டு பெறும் பணி நடந்தது. முன்னதாக தபால் ஓட்டளிக்க, 256 பேர் விருப்பம் தெரிவித்திருந்தனர்.இதில் மூன்று பேர் இறந்து விட்டனர். 7 பேர் வாக்களிக்கவில்லை. 85 வயதுக்கு மேற்பட்டோரில், 199 பேர், மாற்றுத்திறனாளிகள், 47 பேர் என, 246 பேர் மட்டுமே தபால் ஓட்டுப்பதிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

அப்பாவி
ஜன 28, 2025 18:53

நேராப் போய் ஓட்டளித்தால் 2000 கிடைக்கலாம்.


Balasubramanian
ஜன 28, 2025 16:50

இடைத் தேர்தலில் எப்படியும் ஆளும் கட்சி தான் ஜெயிக்கும்! ஆகையால் யாரும் ஓட்டு போட விரும்ப மாட்டார்கள்! ஐம்பது சதவீதம் ஓட்டு பதிவு நடந்தாலே அதிசயம்! ஆகையால் எதிர் கட்சிகள் பங்கேற்க விரும்பவில்லை! ஏதோ சீமான் களத்தில் இறங்கி உள்ளார்! அதிசய முடிவு வந்தால் அனைவருக்கும் ஆச்சரியமே மிஞ்சும்