உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / ரூ.7.61 கோடி மோசடி வழக்கு; ஈமு பார்ம்ஸ் இயக்குநருக்கு 10 ஆண்டு சிறை

ரூ.7.61 கோடி மோசடி வழக்கு; ஈமு பார்ம்ஸ் இயக்குநருக்கு 10 ஆண்டு சிறை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை: சுசி ஈமு நிதி நிறுவனம், 7.61 கோடி ரூபாய் மோசடி வழக்கில், அந்த நிறுவன அதிபர் குருசாமிக்கு, 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.சேலம், ஐந்து ரோடு சிக்னல் பகுதியிலுள்ள காம்பளக்சில், 'சுசி ஈமு பார்ம்' என்ற நிதி நிறுவனத்தின் கிளை செயல்பட்டது. இந்த நிறுவனத்தின் நிர்வாகிகளின் ஆசை வார்த்தையை நம்பி, நுாற்றுக்கணக்கானோர் டிபாசிட் செய்தனர். ஆனால், முதிர்வு காலம் முடிந்தும் பணத்தை திருப்பித் தராமல் 385 பேரிடம், 7.61 கோடி ரூபாய் மோசடி செய்தது தெரிந்தது. இது தொடர்பாக, ஈரோடு மாவட்டம், பெருந்துறை, குன்னத்துார் ரோட்டை சேர்ந்த அந்த நிறுவன நிர்வாக இயக்குநர் குருசாமி, 45, பொதுமேலாளர் கதிர்வேல், ஊழியர் சுரேஷ் ஆகியோர் மீது, வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கைதான இவர்கள் மீதான விசாரணை, 13 ஆண்டுகளாக நடந்து வந்தது. விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது.நீதிபதி செந்தில்குமார் நேற்று, குற்றம் சாட்டப்பட்ட குருசாமிக்கு, 10 ஆண்டுகள் சிறை, 7.89 கோடி ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். மற்ற இருவர் விடுதலை செய்யப்பட்டனர்.கோவை மற்றும் ஈரோட்டில் பதிவான, இரண்டு மோசடி வழக்குகளில், ஏற்கனவே, குருசாமிக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

hariharan
ஜூன் 07, 2025 15:24

இந்த மோசடி வழக்கை பதிவு செய்தவுடன் குருமா முட்டுக்கொடுத்தது நினைவு இருக்கிறதா?


karupanasamy
ஜூன் 07, 2025 11:47

சாத்தியராஜுக்கு என்ன தண்டணை?


அப்பாவி
ஜூன் 07, 2025 10:18

நாமளும் ஒரு 10, 20 கோடி அமுக்கி 19,15 வருஷம் ஆனந்தமச் அனுபவிச்சுட்டா தீர்ப்பு வர 10, 20 வருசமாகும். சேஃபா ஜெயில்ல வசதிகளோட வாழலாம். தினமும் ஈமு கோழி பிரியாணியா சாப்பிடலாம்.


Padmasridharan
ஜூன் 07, 2025 08:10

போட்ட பணம் இரட்டிப்பாகும்னு சொன்னா அத நம்பி மனுஷங்க எப்படி மொதல்ல முதலீடு பன்றாங்க.. அவங்கென்ன அமுத சுரபி மாதிரி ஏதாவது வெச்சிருக்காங்களானு யோசிக்கமாட்டாங்களா சாமி.


ஆரூர் ரங்
ஜூன் 07, 2025 07:38

அப்போ சத்தியராஜ் தப்பிச்சுவிட்டார்


புதிய வீடியோ