வாசகர்கள் கருத்துகள் ( 1 )
கண்டிப்பாக இந்த கூடுதலான வரி தேவையானது.
மேலும் செய்திகள்
லஞ்சம் என்னிடம் பறித்தனர்; யார் எதற்கு எவ்வளவு?
16 hour(s) ago | 10
திருமாவளவன் தி.மு.க.,வின் பிள்ளையா: குஷ்பு விளாசல்
18 hour(s) ago | 16
புதுடில்லி: மத்திய கலால் திருத்த மசோதா - 2025 பார்லி.,யில் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், 18 ரூபாய் சிகரெட், இனி 72 ரூபாய்க்கு விற்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. நடந்து முடிந்த குளிர்கால கூட்டத்தொடரில், கலால் திருத்த மசோதா - 2025ஐ மத்திய அரசு நிறைவேற்றியது. சிகரெட், சுருட்டு, ஹூக்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் மீதான வரிகளை அதிகரிப்பதே இதன் நோக்கம். இது, ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தற்போதைய சட்டத்தின்படி, சிகரெட்டுகளின் நீளம் மற்றும் வகையை பொறுத்து, 1,000 சிகரெட்டுகளுக்கு, 200 முதல் 735 ரூபாய் வரை கலால் வரி விதிக்கப்படுகிறது. புதிய சட்டம் அமலானால், 1,000 சிகரெட்டுகளுக்கு, 2,700 - 11,000 ரூபாய் வரை வரி விதிக்கப்படும். அதாவது, 18 ரூபாய்க்கு விற்கப்படும் ஒரு சிகரெட், இனி 72 ரூபாய்க்கு விற்கப்படும். அதே போல, மெல்லும் புகையிலை மீதான வரி, 25 சதவீதத்தில் இருந்து, 100; ஹூக்கா புகையிலை வரி, 25 சதவீதத்தில் இருந்து, 40; பைப் மற்றும் சிகரெட்டுகளுக்கான புகை கலவைகள் மீதான வரி, 60 சதவீதத்தில் இருந்து 325 சதவீதமாக அதிகரிக்க உள்ளது. இந்த விலை உயர்வு, கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. புகைப்பழக்கத்தை கைவிட உதவும் என ஒரு தரப்பினரும், சட்ட விரோத விற்பனை அதிகரிக்கும் என, மற்றொரு தரப்பினரும் சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளனர்.
கண்டிப்பாக இந்த கூடுதலான வரி தேவையானது.
16 hour(s) ago | 10
18 hour(s) ago | 16