உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / சீமான் போக்கில் திடீர் மாற்றம்; விலகும் நிர்வாகிகள்

சீமான் போக்கில் திடீர் மாற்றம்; விலகும் நிர்வாகிகள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நாம் தமிழர் கட்சி பெண் நிர்வாகி உட்பட இருவர், பா.ஜ.,வில் இணைய பேச்சு நடத்தியுள்ள தகவல் வெளியாகி உள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=5vltek0j&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

இது குறித்து, அக்கட்சி வட்டாரத்தில் கூறப்படுவதாவது:

கடந்த லோக்சபா தேர்தலில், நாம் தமிழர் கட்சிக்கு 8.9 சதவீத ஓட்டுகள் கிடைத்தன. தேர்தல் முடிவுக்கு பின், சீமான் செயல்பாடுகளால் கட்சி நிர்வாகிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இணையும் பேச்சு

கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பாளர் பிரபாகரன் தலைமையில், நிர்வாகிகள் பலர் கட்சியில் இருந்து கடந்த மாதம் விலகினர்.அவரை தொடர்ந்து, விழுப்புரம் வடக்கு மாவட்ட பொறுப்பில் இருந்து சுகுமார் விலகினார். சீமானுக்கு நெருக்கமாக இருந்த விழுப்புரம் மேற்கு மாவட்ட செயலர் பூபாலனும் விலகினார். பின், விழுப்புரம் மத்திய மாவட்ட செயலர் மணிகண்டனும் விலகினார்.சமீபத்தில், மருத்துவ பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து இளவஞ்சியும் விலகியுள்ளார்.இந்நிலையில், மாநில பெண் நிர்வாகி உட்பட இரண்டு பேர், பா.ஜ.,வில் இணைய பேச்சு நடத்திய தகவல் வெளியாகி உள்ளது.விஜய் கட்சியின் மாநாட்டுக்கு பின், சீமானின் செயல்பாடுகள் சரியில்லை. விஜய் குறித்து சீமான் பேசிய பேச்சுகளை யாரும் ரசிக்கவில்லை; இளைஞர்களும் விரும்பவில்லை.இது மட்டுமல்ல; கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட கட்சியினர் அனைவரிடமும் சீமான் அணுகும் போக்கு முற்றிலும் மாறியிருக்கிறது.

கடும் அதிருப்தி

பணம் படைத்தவர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் தருகிறார். பெண் பேச்சாளரும், மாநில நிர்வாகியுமான ஒருவரை தனக்கு போட்டியாக சீமான் கருதுகிறார்.அதனால், பலரையும் தாறுமாறாக விமர்சிப்பதோடு, அனைவரிடமும் கோபமாக நடந்து கொள்கிறார். இதனால், கட்சி நிர்வாகிகள் பலரும் சீமான் மீது கடும் அதிருப்தியிலும், கோபத்திலும் உள்ளனர்.கடும் அதிருப்தியில் இருக்கும் கட்சியின் பெண் பேச்சாளரும் தற்போது பா.ஜ.,வில் சேர தயாராகி விட்டார். கட்சி கொள்கையை பரப்பும் நிர்வாகி ஒருவர், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தாயகம் திரும்பியதும், அவரது முன்னிலையில் பா.ஜ.,வில் இணையவிருக்கிறார்.மேலும் சில நிர்வாகிகள், பா.ஜ., - த.வெ.க., போன்ற கட்சிகளில் இணைய பேச்சு நடத்தி வருகின்றனர்.இவ்வாறு அக்கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது. - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

sundararajan
நவ 13, 2024 08:04

அந்தப் பெண் காளியம்மாள் தானே


KayD
நவ 12, 2024 19:18

இவர் எடுத்த படங்கள் பெருசா பேசப்படல , ஆனால் நல்ல வசனம் எழுத தெரிந்த இவர் இவளவு அவர் வசனத்தையே ஒரு டைரக்டர் தானே தனக்கு சொல்லி கொடுத்து செம perform பண்ணி இளைங்கர்களை கவர் பண்ணி வைத்து இருந்தார். நல்ல விஷயம் தான். தன் பகலவன் படத்துக்கு எப்படியாவது விஜய் வைத்து டைரக்ட் பண்ணி ஷங்கர், முருகதாஸ் , லோகேஷ், அட்லீ லெவல் கு போய் செட்டில் ஆகா பிளான் போட்டார் விஜய் அதுக்கு ஆப்பு வச்சி நீ பொய் பாஞ்சாலக்குறிச்சில போய் வீரநடை போடுப்பா தம்பி னு அனுப்பி வச்ச கடுப்பில்ல இப்போ வேகாத பருப்பா கொதிச்சி கிட்டு இருக்கு வெறும் சட்டியில்


ராமகிருஷ்ணன்
நவ 12, 2024 19:11

கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் இருந்து குணமாகி வீட்டிற்கு சென்று விட்டார்கள். இதிலே ஆச்சரியம் இல்லை


KayD
நவ 12, 2024 18:36

விஜய் entry இவர் எதிர் பார்க்கல.. மற்ற சூப்பர் ஸ்டார்கள் மாதிரி இன்று நாளை னு இருப்பார் nu எதிர் பாத்து உள்ள வந்த இவரை திக்கு முக்கு ஆட வைத்து இருக்கிரது. இனி இவர் பருப்பு வேகாது nu theriju இருக்கும்.. ஒரு side விஜயலட்சுமி இன்னொரு side விஜய Joseph ethanai விஜய் கிட்ட தான் அடி vaangrathu இந்த சினிமா டயலாக் எழதி இப்போ irukum youth aa ஏமாற்றி கிட்டு இருக்க முடியும்... யூத் எல்லாம் அறிவு இல்லமால் இல்லை அவுங்க தளபதி ய தப்பு thappa சொன்னா சும்மா இருக்க மாட்டாங்க. நுணலும் தன் வாயால் கெடும்" என்ற குரல் தான் ஞாபகம் வருது. இவர் வாய் அதிகம் இப்ப வாய் கிழிய கிழிய பேசி வாய் அடைத்து போய் இருக்கார்


Sridhar
நவ 12, 2024 14:02

இந்த நாதாக்களை பாஜாகாவில் சேர்த்தால், அந்த கட்சியும் நாறிடுமே? கட்சியை வளர்க்கணும்தான் அதுக்குவேண்டி கண்டவங்கள சேர்த்தால், விளைவுகள் பயங்கரமாக இருக்கும். அவுங்க எல்லாம் விஜய் கட்சியில் சேர்றதுதான் பொருத்தமா இருக்கும்.


தர்மராஜ் தங்கரத்தினம்
நவ 12, 2024 09:10

நாதக, ம நீ ம இதுங்க மேல இனி டீம்காவின் கண்காணிப்பு இருக்காது ...... சோசப்பு விசையை களம் இறக்கியாச்சே .....


bharathi
நவ 12, 2024 07:56

Few mentals running away from the mental r party


இசக்கிமுத்து,தூத்துக்குடி
நவ 12, 2024 06:38

தற்குறி விஜய் கழகத்தை சேர்ந்த ரசிக அணில் குஞ்சுகளுக்கும், நாம் தற்குறி கட்சியை சேர்ந்த திரள்நிதி ஆமை குஞ்சுகளுக்கும் இப்போது உச்சகட்ட சண்டை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. வருகின்ற தேர்தலில் இருவருமே வெற்றி பெறப் போவதில்லை யாருக்கு அதிக அளவிலான தோல்வி யாருக்கு குறைந்த அளவிலான தோல்வி என தெரிந்து கொள்வதற்கான போட்டிதான் இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.


பிரேம்ஜி
நவ 12, 2024 08:08

நல்ல நகைச்சுவையான கமெண்ட். பாராட்டுக்கள்!


Raj
நவ 12, 2024 06:13

சீமானுக்கு பேச்சு ஒன்று தான் இருக்கிறது, காரியத்தில் பூஜ்ஜியம் தான். நா த க வலுவை இழக்கிறது சீமானின் பேச்சால். தவளை தன் வாயால் கெடும், கேடு விளைவிக்கும்.


nagendhiran
நவ 12, 2024 05:46

வெறும் முகமூடி அணிந்து இனிக்கும் தமிழ் பேச்சு வைத்து மக்களை வெகுகாலம் ஏமாற்ற முடியாது?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை