உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / அ.தி.மு.க., தலைமையிடம் கள ஆய்வு குழுவினர் அறிக்கை

அ.தி.மு.க., தலைமையிடம் கள ஆய்வு குழுவினர் அறிக்கை

கள ஆய்வுக்குச் சென்ற நிர்வாகிகள் அளித்த அறிக்கை அடிப்படையில், விரைவில் கட்சியில் சில மாற்றங்களை செய்ய, பொதுச்செயலர் பழனிசாமி திட்டமிட்டுள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ix2q7yr7&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அ.தி.மு.க., தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. சசிகலா, தினகரன், பன்னீர்செல்வம் நீக்கம், அதற்கு எதிரான சட்டப் போராட்டம் என, கட்சி தொடர்ந்து பிரச்னைகளை சந்தித்து வருகிறது. கடந்த லோக்சபா தேர்தலில், பலமான கூட்டணி அமையாதது, ஓட்டு சதவீதம் சரிவை சந்தித்தது, கட்சியினரிடம் சோர்வை ஏற்படுத்தி உள்ளது. இதை சரிசெய்து, கட்சியை பலப்படுத்தி, 2026 சட்டசபை தேர்தலுக்கு, கட்சியை தயார் செய்ய வேண்டிய கட்டாயம், கட்சி தலைமைக்கு ஏற்பட்டுள்ளது.கட்சியில் மாவட்ட செயலர்கள், தங்களை யாரும் மாற்ற முடியாது என்ற எண்ணத்தில், தங்களுக்கு வேண்டியவர்களுக்கு பதவிகளை அளிப்பதுடன், மற்றவர்களை ஒதுக்குவதாக, பல மாவட்டங்களில் புகார்கள் எழுந்து, அவை கட்சித் தலைமைக்கும் வந்து சேர்ந்தன. எனவே, கட்சியினரின் செயல்பாடுகள் குறித்து, நேரடியாக கள ஆய்வு செய்து, கட்சி தலைமைக்கு அறிக்கை அளிக்க, 10 பேர் கொண்ட குழுவை, பொதுச்செயலர் பழனிசாமி கடந்த நவ. 11ல் அறிவித்தார்.இக்குழுவில், கட்சி துணை பொதுச்செயலர் கே.பி.முனுசாமி, முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, நத்தம் விஸ்வநாதன், செம்மலை, வேலுமணி, வரகூர் அருணாசலம், ஜெயகுமார், சி.வி.சண்முகம் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.இவர்கள் ஐந்து குழுக்களாக பிரிந்து, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சென்று, கட்சி நிர்வாகிகள் பலரையும் சந்தித்துப் பேசினர். பல மாவட்டங்களில், கள ஆய்வுக்கு வந்த, முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையில், நிர்வாகிகள் இடையே மோதல் ஏற்பட்டது. மாவட்டச் செயலர்கள் குறித்து புகார் தெரிவித்த நிர்வாகிகளை, மாவட்டச் செயலர்களின் ஆதரவாளர்கள் தாக்க, பல இடங்களில், கூட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. சென்னை மாவட்டத்தில், கடந்த 4ல் கள ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டது. இக்கூட்டத்திலும், கட்சியினர் பல்வேறு புகார்களை அடுக்கினர். ஆட்சியில் இருந்தபோது, அமைச்சர்கள் கண்டு கொள்ளவில்லை. இதுதான் கட்சி வளர்ச்சிக்கு பெரும் பின்னடைவு என குற்றம் சாட்டினர். அவர்களை ஆய்வுக்குழுவினர் சமாதானப்படுத்தினர்.கள ஆய்வுக்குச் சென்ற, முன்னாள் அமைச்சர்கள், கள ஆய்வில் கிடைத்த தகவல்களை தொகுத்து, கட்சி தலைமைக்கு அறிக்கை அளித்துள்ளனர். ஒவ்வொரு மாவட்டத்திற்கும், தனித்தனியே அறிக்கை அளித்துள்ளனர். அதில் ஒவ்வொரு மாவட்டத்திலும், கட்சியை வளர்க்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்த விபரங்களை தெரிவித்துள்ளனர்.அந்த அறிக்கை அடிப்படையில், கட்சியில் பல்வேறு மாற்றங்களை செய்ய, பழனிசாமி திட்டமிட்டுள்ளதாகவும், விரைவில் அதற்கான அறிவிப்புகள் வெளியாகும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

கட்சி தலைமை நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:

தலைமை அனுப்பிய கள ஆய்வுக்குழுவிடம், நிர்வாகிகள் அனைவரும் தங்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர். கட்சியில் இளைஞர்கள், இளம்பெண்களை அதிகம் சேர்க்க, நடவடிக்கை எடுக்க வேண்டும். கோஷ்டிப் பூசலை களைய வேண்டும். மாவட்டச் செயலர்கள் தனித்து செயல்படுவதால், கட்சி மீது பற்றுள்ளவர்கள் ஒதுங்கி வருகின்றனர். அவர்கள் இணைந்து செயல்பட வழி செய்ய வேண்டும் என ஆய்வுக்குழுவினரிடம் பலரும் தங்களுடைய கருத்தாக தெரிவித்துள்ளனர்.இவ்விபரங்களை, கள ஆய்வுக் குழுவினர், தாங்கள் தலைமைக்கு அளித்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர். மேலும், சில மாவட்டச் செயலர்களை நீக்கிவிட்டு, புதிய மாவட்டச் செயலர்களை நியமிக்கவும், சில மாவட்டங்களில் கோஷ்டிப் பூசலில் ஈடுபடுவோரை அழைத்துப் பேசி சமாதானப்படுத்தி, அனைவரும் இணைந்து செயல்படவும், தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.அதன் அடிப்படையில், விரைவில் கட்சியில் மாற்றங்களை செய்து, தேர்தலுக்கு அனைவரையும் தயார்படுத்த வேண்டும் என்பது, கட்சியினர் விருப்பம். எனவே, தலைமை முடிவை அனைவரும் எதிர்பார்த்தபடி உள்ளனர்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

பல்லவி
பிப் 09, 2025 13:21

கொஞ்சம் கூட அடக்கி வாசித்தால் நன்றாக இருந்திருக்கும்


குமரன்
பிப் 09, 2025 07:22

அண்ணன் எடப்பாடி அவர்கள் தன்னை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும் முதலில் திமுகவை வெற்றி பெற வேண்டும் என்ற முயற்சியை கைவிட்டு அதிமுக வெற்றி பெற முயற்சி செய்யுங்கள் திமுக ஸ்லீப்பர் ஜெயக்குமார் மாதிரி ஆட்களை கொஞ்சம் அடக்கி வாசிக்க சொல்லுங்கள்


Venkatesh
பிப் 08, 2025 21:12

அதிமுக அழிந்து போகும்... அதை திராவிட மாடல் கூட்டத்தின் ஆணையின் பேரில் செய்து முடிப்பார் எங்கள் தலைவர் தவழ்ந்தபாடியார்


கிஜன்
பிப் 08, 2025 10:32

கள ஆய்வுக்குழுவினர் .... தேஷ்கள் கூட கூட்டணி வேண்டாம்னும் அறிக்கைல சொல்லியிருக்கிறார்களாம் ...அதிமுக, நாதக, கம்மிஸ் 252, குருமா எல்லோரும் சேர்ந்து கூட்டணி வைக்கலாம் ....


அன்பே சிவம்
பிப் 08, 2025 09:12

1). AIADMவிறுக்கு ஒரு Attractive ஆன தலைமை தேவை. 2). எடப்பாடிபழனிச்சாமிக்கு எல்லா தரப்பு மக்கள் மற்றும் சிறவர் முதல் பெரிவர் வரை கவரக்கூடிய Attractive கிடையாது. 3)..இதை எல்லாம் மீறி இவர் உள்கட்சிக்குள் மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு செய்த துரோகம் எடப்பாடி மீது நம்பிக்கை கட்சி தொண்டர்கள் மற்றும் மக்கள் இடையே சுத்தமாக இல்லை. 4). மேலும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் விவகாரம், தேவந்த்ர வெள்ளாளர், வன்னியர் 10% சதவீத இடஒதுக்கீடு என்பது மற்ற மக்களிடம் பழனிசாமி மீது நம்பிக்கை இல்லாமால் போய்விட்டது. 5A). தென் மாவ்டங்களிலும் AIADMK இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது. அதேபோல் கொங்கு நாட்டில் அஇஅதிமுக வைக்கும் கூட்டணி பொருத்து மக்கள் ஒட்டு போடுவார்கள். 5).ஒரு எதிர்கட்சி தலைவராக பழனிசாமி செயல்படவில்லை, அதனால் அவர் மக்கள் மனதில் இருந்து வெளியே சென்று விட்டார். 6). AIADMK என்பது திமுக சிந்தனை செயல்களுக்கு எதிர்மறையான கட்சி. 7). AIADMKவில் இருப்பவர்கள் தமிழ் பற்று உள்ள தேசியம் தெய்வீகம் உடன் பயணிப்பவர்கள். 8). அதனால் தான் அம்மா போன பிறகும் பழனிசாமி பிஜேபி உடன் இணக்கம் ஆக இருந்த போது உடன் இருந்தார்கள். 9). ஆனால் பழனிசாமி பிஜேபி கூட்டணியில் இருந்து வெளியே வந்து மட்டுமில்லாமல் அப்படியே அவன் அச்ச அசலாக DMK போல் செய்யல்படுவது மக்கள் மற்றும் கட்சியினர் இடையே பழனிசாமி மீது வெறுப்பை ஏற்படுத்தி உள்ளது. 10). இதற்கு எல்லாம் மேலாக ஹிந்து விரோதியாக திருப்பரங்குன்றம், முஸ்லீம் தீவிரவாதிகளை ஜெயிலில் இருந்து விடுவிக்க கோரிக்கை, முஸ்லீம் தர்க்கா செல்லும் போது திருநீறு பூசாமல் நடித்தல் போன்றவை மக்களிடம் முகம் சுளிக்க வைத்துவிட்டது. 11). மேலும் இந்துக்களுக்கு ஆதரவாக ஒரு பிரச்சினகளிலும் ஆதரவாக இவர் தற்போதும் இவர் ஆட்சி காலத்திலும் செய்யல்பட்டது இல்லை. 12). உதராணமாக வேல் யாத்திரையை தடையை செய்தது, தற்போதைய திற்பறங்குன்றம் என்ன சொல்லி கொண்டே செல்லலாம். 13). AIADMK உள்ள செங்கோட்டையன் அல்லது தங்கமணி கட்சியை நடத்தி செல்ல வேண்டும். தங்கமணி மற்றும் பழனிச்சாமி கட்சி தலைவராகவும் செங்கோட்டையன் முதல்வர் வேட்பாளராக தேர்வு செய்தால் கட்சிக்கு எதிர்காலம் உள்ளது. 14). முஸ்லிம் கண்டிப்பாக DMK மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு ஒட்டு அளிப்பார்கள். 15). கிருஸ்தவர்கள் இந்த முறை கிருஸ்தவ ஜாதி வாரியாக DMK, congress, Vijay, Seeman மற்றும் இறுதியாக VCK என ஒட்டு அளிப்பார்கள். 16). Again இவர்கள்(காங்கிரஸ், விஜய், சீமான், VCK, கம்யூனிஸ்ட் )தமிழ் பற்று உள்ள தேசியம் தெய்வீகம் உடன் பயணிப்பவர்கள் ஆகிய AIADMK ஹிந்துக்கள் and நடுநிலை மக்களுககெதிரானவர்கள். 17). ஒருவேளை பழனிசாமி இவர்களுடன் கூட்டணி வைத்தால் அது பொருந்தாத கூட்டணி ஆகிவிடும். 18). AIADMK படு தோல்வி அடைவதுடன் கூட வந்த கூட்டணி கட்சிகளை மண்ணை கவர செய்யும். 19). AIADMKவிருக்கு பொருத்தமான கூட்டணி தற்போது உள்ள பிஜேபி கூட்டணி மற்றும் 2026 கூட்டணி ஆட்சி. 20). பழனிசாமி இதை புறியாமல் ஏதாவது செய்தால் AIADMKவிருக்கு 2026 தான் கடைசி தேர்தல் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.


முக்கிய வீடியோ