உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / ராமதாஸ் - அன்புமணி இணைந்து செயல்பட கோரி 5 பேர் தீக்குளிக்க முயற்சி

ராமதாஸ் - அன்புமணி இணைந்து செயல்பட கோரி 5 பேர் தீக்குளிக்க முயற்சி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திண்டிவனம்: திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்திற்கு முன், ராமதாஸ் - அன்புமணி இணைய வலியுறுத்தி, 5 பேர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.திண்டிவனம் அருகே ஓமந்துாரிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று காலை, பா.ம.க., மாநில செயற்குழு கூட்டம், நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் அன்புமணி பங்கேற்கவில்லை. இந்நிலையில், நேற்று மாலை 5:00 மணிக்கு, தைலாபுரம் தோட்டத்திற்கு மண்ணெண்ணெய் கேனுடன் வந்த 5 பேர், திடீரென அதை உடலில் ஊற்றிக்கொண்டு கோஷம் போட்டனர். அங்கு பாதுகாப்பில் இருந்த போலீசார் விரைந்து சென்று அவர்கள் மீது தண்ணீர் ஊற்றினர்.அந்த ஐந்து பேரும், செயற்குழு கூட்டத்தில் அன்புமணி பங்கேற்காதது எங்களுக்கு வருத்தைத்தை ஏற்படுத்தியது. ராமதாஸ் - அன்புமணி இணைந்து பணியாற்ற வேண்டும் என்று போலீசாரிடம் தெரிவித்தனர். விசாரணையில், அவர்கள் வந்தவாசி அருகே உள்ள கீழக்கொண்டநல்லுார் கிராமத்தை சேர்ந்த பா.ம.க.வினர் தமிழ்ச்செல்வன், கார்த்திக், விஜயன், ஜெகதீசன் என தெரிய வந்தது. தீக்குளிப்பு பின்னணியில் யாராவது உள்ளனரா என கிளியனுார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

naranam
ஜூலை 09, 2025 19:46

பேசாம அவுங்க இரண்டு பேருமே தீக்குளித்து விடலாம். பிரச்சனையும் தீரும்.. அவர்களை நம்பியவர்களும் பிழைத்துப் போவார்கள்..


Shekar
ஜூலை 09, 2025 19:19

எல்லாம் சொத்து சண்டை, இத விட்டுட்டு போய் டீ குடிங்க பசங்களா


sekar ng
ஜூலை 09, 2025 18:51

பண சண்டை, ராமதாஸ் ஒதுங்கி வழிவிட்டு வழிகாட்ட வேண்டும். மேலும் மக்கள் ஜாதி தலைவர்கள் குடும்பத்திற்கு அடிமையாகி விடக்கூடாது


அப்பாவி
ஜூலை 09, 2025 17:06

ஐயோ பதிக்கலை பத்திக்கலை. ஆளுக்கு 2000 ரூவா கெடச்சிருக்குமோ?


சுந்தரம் விஸ்வநாதன்
ஜூலை 09, 2025 15:32

அப்பனும் மவனும்


Ganapathy
ஜூலை 09, 2025 15:24

அடடே உங்களத்தான் தேடுறோம். தேர்தல் வந்தாச்சுல்ல.


சுந்தரம் விஸ்வநாதன்
ஜூலை 09, 2025 14:54

ஏனுங்க கொஞ்சம் மாத்தி யோசிச்சா என்ன? கட்சியை காப்பாத்த அஞ்சு பேரு தீக்குளிக்கறதுக்கு பதிலா , ...?


S Balakrishnan
ஜூலை 09, 2025 13:53

ஒரே வழி தான் மிச்சம் இருக்கிறது. அப்பனும் பையனும் கட்சியை கலைத்து விட்டு அக்கடா என்று ஓய்வெடுத்துக் கொள்ளலாம். மரம் வெட்டி துப்பாக்கி சூட்டில் மரணம் அடைந்தவர்கள் ஆத்மா சாந்தி அடையும்.


Nandakumar
ஜூலை 09, 2025 13:39

எதற்கு மண்ணெண்ணெய்? அப்படியே துணியில் நெருப்பு வைத்துக்கொள்ள வேண்டியதுதானே?


Manaimaran
ஜூலை 09, 2025 12:57

எண்ணைய ஊத்திட்டு. பத்திக்க வேண்டியது தான. எதுக்கு கேசம்? எல்லாம் நடிப்பு சாகமாட்டானுக


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை