உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / பஹல்காம் தாக்குதல் முதல் ஆப்பரேஷன் சிந்துார் வரை

பஹல்காம் தாக்குதல் முதல் ஆப்பரேஷன் சிந்துார் வரை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

2025 ஏப். 22: 'மினி சுவிட்சர்லாந்து' என அழைக்கப்படும் காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கில் சுற்றுலா பயணியர் மீது பாக்., பயங்கரவாதிகள் தாக்குதல். 26 பேர் பலி. இது பாகிஸ்தானுக்கு பதிலடி தர வேண்டும் என மக்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஏப். 23: சவுதியில் இருந்த பிரதமர் மோடி, பயணத்தை பாதியில் முடித்துக்கொண்டு நாடு திரும்பினார். விமான நிலையத்திலேயே தேசிய பாதுகாப்பு செயலர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். ஏப். 23: இரு நாடுகள் இடையிலான 1960ல் நிறைவேற்றப்பட்ட சிந்து நதிநீர் பங்கீடு ஒப்பந்தம் நிறுத்தம், பஞ்சாப் அட்டாரி - வாஹா எல்லை மூடல், பாகிஸ்தானியர்களுக்கான விசா ரத்து, இந்தியாவில் வசிக்கும் பாகிஸ்தானியர்கள் ஏப்., 27க்குள் வெளியேற வேண்டும், துாதரக உறவு முறிவு உள்ளிட்ட நடவடிக்கை எடுப்பதாக இந்தியா அறிவிப்பு. ஏப். 24 : காஷ்மீரில் பயங்கரவாதிகள், அவர்களுடன் தொடர்பு இருந்தவர்களின் வீடுகளை தகர்த்தது இந்திய ராணுவம். ஏப். 25: டில்லியில் அனைத்துக்கட்சி கூட்டம் நடந்தது. பீஹாரில் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், 'பயங்கரவாதிகளுக்கு கனவிலும் நினைக்காத அளவுக்கு பதிலடி தரப்படும்' என பிரதமர் மோடி சூளுரைத்தார். ஏப். 29: பயங்கரவாத தாக்குதலுக்கு எதிரான பதிலடியில் முப்படைகளுக்கு முழு சுதந்திரம் அளித்தார் பிரதமர் மோடி. மே 3: பாகிஸ்தானில் இருந்து அனைத்துவித இறக்குமதிக்கும் மத்திய அரசு தடை. மே 4: செனாப் நதியின் மீதான பாக்லிஹர் அணையில் இருந்து நீர் திறப்பை நிறுத்தியது இந்தியா. மே 6: நாடு முழுதும், 244 இடங்களில் போர் பாதுகாப்பு ஒத்திகை நடத்த வேண்டும் என மத்திய அரசு உத்தரவு. மே 7: அதிகாலை 1:05 - 1:25 மணிக்குள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர், பாகிஸ்தானில் இயங்கிய ஒன்பது பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் துல்லிய தாக்குதல் நடத்தி அழித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Ramesh Sargam
மே 08, 2025 20:35

படத்தில் பயங்கரவாதிகளின் கோழை தாக்குதலில் மரணமடைந்தவர்களின் மனைவிகள் மற்றும் உறவினர்களை பார்த்தாவது, இந்தியர்கள் அனைவரும் ஜாதி மத வேறுபாடுகளை மறந்து, பாகிஸ்தான் மீது இந்திய அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பு கொடுக்கவேண்டும். இந்த வேண்டுகோள் அணைத்து இந்தியாவில் உள்ள அரசியல் கட்சி தலைவர்களுக்கும் கூட.


புதிய வீடியோ