உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / ஆதாயம் தரும் இரட்டை பதவி: சட்டத்தை திருத்த அரசு முடிவு

ஆதாயம் தரும் இரட்டை பதவி: சட்டத்தை திருத்த அரசு முடிவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ஆதாயம் தரும் இரட்டை பதவி வகிக்கும் எம்.பி.,க்களை தகுதி நீக்கம் செய்ய வழி செய்யும் சட்டத்தை நீக்கிவிட்டு, தற்போதைய தேவைக்கு ஏற்ப புதிய சட்டத்தை இயற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது.மத்திய அரசிடம் இருந்து ஊதியம் பெறும் எம்.பி.,க்கள், கவர்னர்கள் உள்ளிட்டோர், அரசியல்சாசன சட்டப்பிரிவு 158(2)ன் கீழ், அரசு ஊதியம் பெறும் மற்றொரு பதவியை வகிக்க முடியாது. இந்த சட்டம் குறித்து விரிவான ஆய்வு செய்து பரிந்துரைகளை அளிக்கும்படி, எம்.பி., கல்ராஜ் மிஸ்ரா தலைமையில், 16வது லோக்சபாவில் கூட்டுக்குழு அமைக்கப்பட்டது. இந்த கூட்டுக்குழு ஆய்வு மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அதன்படி ஆதாயம் தரும் இரட்டை பதவி வகிப்போரை தகுதி நீக்கம் செய்வதில் சில திருத்தங்களை மேற்கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளது.இது தொடர்பான, சட்ட வரைவு மசோதாவை சட்ட அமைச்சகம் வெளியிட்டுள்ளது. தற்போதுள்ள சட்டத்திற்கும், தகுதி நீக்கத்திற்கு ஆளாகாமல் இருப்பதற்கான வெளிப்படையான விதியைக் கொண்ட வேறு சில சட்டங்களுக்கும் இடையே உள்ள முரண்பாட்டை நீக்க அதில் முன்மொழியப்பட்டுள்ளது.மேலும், தற்காலிக பதவி நீக்கம் செய்ய வழிசெய்யும் சட்டப்பிரிவு 4ஐ நீக்கவும், தேவையான திருத்தங்களை செய்ய மத்திய அரசுக்கு அதிகாரம் அளிக்கிறது.ஆதாயம் தரும் இரட்டை பதவி வகிப்போரை தகுதி நீக்கம் செய்யும் 65 ஆண்டுகால பழைய சட்டத்தை நீக்கிவிட்டு, தற்போதைய காலத்துக்கு ஏற்ப புதிய சட்டத்தை இயற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

rama adhavan
நவ 18, 2024 23:26

மந்திரியே கட்சியில் மாவட்ட செயலாளர் ஆகவும் கட்சியில் ஏதோ ஒரு தலைமை பதவிகளிலும் உள்ளார். அந்த மாதிரி கட்சிப் பதவிகளையும் புதிய சட்டத்தில் இரட்டை ஆதாய பதவிகள் தடை சட்டத்தில் இணைக்க வேண்டும்.


ஆரூர் ரங்
நவ 18, 2024 10:24

எம்ஜியார் அமைச்சர் பதவி கேட்ட போது அமைச்சர்கள் நடிப்பு போன்ற தொழில் சம்பாத்தியத்தை விட வேண்டும் என்று பதவி கொடுக்க மறுத்தார் கருணாநிதி. ஆனால் அவர் பதவியிலிருந்து கொண்டே புத்தகம், சினிமா கதை வசனம் எழுதினார். ஆளுக்கொரு நியாயம்.


ஆரூர் ரங்
நவ 18, 2024 10:20

எம்எல்ஏ க்கள் வாரியத் தலைவர்களாகவும் இருந்து இரட்டைச் சம்பளம் வாங்குகிறார்கள். அது?


பேசும் தமிழன்
நவ 18, 2024 07:45

முதலில் ஒரு வேட்பாளர் இரண்டு தொகுதியில் போட்டியிட தடை விதிக்க வேண்டும்... அதற்க்கான சட்டத்தை உடனே கொண்டு வர வேண்டும்..... மக்களின் வரிபணத்தை வீணடிக்க யார் இவர்கள்.... எவன் அப்பன் வீட்டு பணம்? ராகுல் காந்தி இரண்டு தொகுதியில் போட்டுட்டு.... ஒரு தொகுதியை ராஜினாமா செய்து விட்டார்... இப்போது அந்த தொகுதிக்கு இடைதேர்தல்.... இன்னும் எத்தனை பேர் இதை போல மக்களின் வரிபணத்தை வீணடித்து கொண்டு இருக்கிறார்களோ ???


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை