உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / அருண் ஐ.பி.எஸ்.,க்கு உயர் நீதிமன்றம் கண்டனம்

அருண் ஐ.பி.எஸ்.,க்கு உயர் நீதிமன்றம் கண்டனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: கட்டுமான நிறுவன உரிமையாளருக்கு எதிரான குண்டர் சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:சந்தோஷ் சர்மாவை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்க கூறப்பட்டுள்ள காரணங்கள், சமூகத்தை பாதிக்கச் செய்யும் வகையில் இல்லை. ஒப்பந்தங்களை மீறியது குற்றமாக இருந்தாலும், அது நீதிமன்றங்களில் விசாரிக்கக் கூடியவையே. இந்த வழக்கால் பொது ஒழுங்கு பாதித்ததாகக் கூறுவது கேலிக்கூத்தானது. இந்த வழக்கில் குண்டர் சட்டத்தை பயன்படுத்த எந்த அவசியமும் இல்லை.சந்தோஷ் சர்மா மீதான இந்த வழக்கு, பொது அமைதி வரம்பில் வராது என்பது தெரிந்திருந்தும், 28 ஆண்டுகள் அனுபவம் பெற்றுள்ள ஐ.பி.எஸ். அதிகாரியான அருண், இந்த உத்தரவை பிறப்பித்திருக்கிறார் என்றால், வேண்டுமென்றே தான், இந்த உத்தரவை பிறப்பித்திருக்கிறார் என அர்த்தம் கொள்ள வேண்டியுள்ளது.குண்டர் சட்டத்தில் சிறையிலடைத்து உத்தரவிடுவதை வழக்கமாக கொண்டுள்ள அருண், பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். நீதிமன்றத்தில் ஆஜராகியும், தான் தவறான உத்தரவை பிறப்பித்துவிட்டோம் என அவர் உணர்ந்ததாக தெரியவில்லை. தன் செயலை வலுவாக நியாயப்படுத்தினார். இந்த வழக்கில், தொடர்பில்லாத காரணத்துக்கு சந்தோஷ் சர்மாவை குண்டர் சட்டத்தில் சிறையிலடைத்து உத்தரவு பிறப்பித்துள்ள அருணின் செயல் கண்டனத்துக்குரியது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை