உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / பாக்., பயங்கரவாத முகாம்களைத் தாக்க இந்தியா பயன்படுத்திய ஆயுதங்கள் இதுதான்!

பாக்., பயங்கரவாத முகாம்களைத் தாக்க இந்தியா பயன்படுத்திய ஆயுதங்கள் இதுதான்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்களை தாக்க இந்திய ராணுவம் ரபேல் ஜெட் விமானங்கள், ஸ்கால்ப் ஏவுகணைகள், ஹேமர் குண்டுகள் பயன்படுத்தப்பட்டு உள்ளன.பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் 'ஆபரேசன் சிந்தூர்' என்ற பெயரில் தாக்குதலை நடத்தியுள்ளது. இதற்கு ரபேல் ஜெட் விமானங்கள், ஸ்கால்ப் ஏவுகணைகள், ஹேமர் குண்டுகள் இந்திய ராணுவம் பயன்படுத்தி உள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=w92oprr4&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்திய கடற்படையின் ஆதரவுடன் இந்த தாக்குதலை இந்திய ராணுவம் வெற்றிகரமாக நடத்தி உள்ளது. குறிப்பாக பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்களை கடல்வழி மற்றும் வான்வழியாக தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. ஸ்கால்ப் ஏவுகணைகள் 250 கிலோ மீட்டருக்கும் அதிகமான தூரம் சென்று துல்லியமாக தாக்குதல் நடத்தும் திறன் கொண்டது. இந்த ஏவுகணை வான்வழி தாக்குதல் நடத்த பயன்படுத்தப்படும் முக்கியமான ஒன்றாகும். ஹேமர் குண்டுகள் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பு மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைமையகம் உள்ளிட்ட இடங்களில் தாக்குதல் நடத்த பயன்படுத்தப்பட்டு உள்ளது. ஹேமர் குண்டுகளை பிரான்ஸில் இருந்து இந்தியா வாங்கியது. ஹேமர் குண்டு என்பது துல்லியமாக தாக்கும் திறன் கொண்டது. 50 முதல் 70 கிலோமீட்டர் வரை இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்டது. முக்கிய இடங்கள் அடையாளம் காணப்பட்டு தாக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

tcks mahendran
மே 07, 2025 15:53

இந்திய பிரதமர் அவர்கள் செய்த நல்ல விஷயம் நேற்றைய தினம் நடத்திய பாகிஸ்தான் நாட்டின் மீது தாக்குதல் நடத்திய செந்தூர் தாக்குதல் மிக முக்கியமான தவிர்க்க முடியாத இந்திய நாட்டின் கெளரவமான செயல் ஆகும் இந்தியா உலகில் பீடு நடை போடுகிறது மகிழ்ச்சியில் இந்திய மக்கள்


Ramaswamy Sundaram
மே 07, 2025 12:55

இந்த ரபில் விமானங்களை வாங்க யோசனை சொல்லும்போது அந்த சிவகங்கை சீமான் சிதம்பரம் கூறிய வார்த்தைகள் என்ன தெரியுமா? "ரபில் விமானங்களை வாங்குவதா? அந்த விமானத்தின் ஒரு இறக்கையை வாங்கக்கூட நம்மிடம் காசு இல்லை என்றார். ஆனால் இப்போதோ மோடியின் ஆட்சியில் 30க்கும் மேற்பட்ட அதே விமானங்களை வாங்கி விட்டோம்... இப்போது என்ன சொல்வார்?


Dharmavaan
மே 09, 2025 21:19

பசி தேசதுரோகி . அவர் சொன்ன எத்தனையோ இன்று பொய்யாகிவிட்டது


Sundar
மே 07, 2025 11:26

Jaihind


GOPAL
மே 07, 2025 11:21

சூப்பர் ஜெய் ஹிந்த் வினை விதைத்தவன் வினை அறுப்பான்


Karthik
மே 07, 2025 10:44

Salute Indian army..


Ramesh Babu
மே 07, 2025 10:42

இது போன்ற முக்கிய ராணுவ செய்திகளை வெளியிட வேண்டாம் என்பது எனது கருத்து. நன்றி.


Sivasakthi
மே 07, 2025 11:38

Yes Sir. I agree with you.


JAYACHANDRAN RAMAKRISHNAN
மே 07, 2025 11:54

வெளியிட்டாவிட்டால் பப்பு என்று செல்லமாக அழைக்கப்படும் ராகுல் வெளி நாடுகளில் சென்று பொய் பிரச்சாரம் செய்வார். என்ன செய்வது. அவரது உடன் பிறவாத அண்ணன் மற்றும் அவரது கூட்டணியினர் உள்ளூரில் பொய் பிரச்சாரம் செய்வார்கள். இதற்கே இந்த பப்புவும் திராவிட மாடல்களும் சீனாவிடம் இருந்து துண்டு சீட்டுக்காக காத்து கொண்டு இருப்பார்கள்


ashok
மே 07, 2025 10:21

Jaihind..


ashok
மே 07, 2025 10:20

Jaihind


முக்கிய வீடியோ