உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / கோவையில் வாங்கிய நிலத்தில் பால் பண்ணை அமைக்க போகிறேன்: அண்ணாமலை விளக்கம்

கோவையில் வாங்கிய நிலத்தில் பால் பண்ணை அமைக்க போகிறேன்: அண்ணாமலை விளக்கம்

சென்னை: கோவையில் வாங்கிய நிலத்தில் பால் பண்ணை அமைக்கப் போவதாக, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம், காந்திபுரம் சார் - பதிவாளர் அலுவலக எல்லைக்கு உட்பட்ட பகுதியில், 11 ஏக்கர் விவசாய நிலத்தை அண்ணாமலை வாங்கியுள்ளார். இது தொடர்பாக, சமூக வலைதளங்களில் விமர்சனம் எழுந்த நிலையில், அதற்கு விளக்கம் அளித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கை: என் அரசியல் வேலைகளுக்கு அப்பாற்பட்டு, சமூக நலனுக்காகவும், இயற்கை விவசாய நலனுக்காகவும், நான் செய்து வரும் பணிகள் குறித்து, சிலர் வதந்தி பரப்பி வருகின்றனர். இயற்கை விவசாயத்தின் மீதான என் ஆர்வத்தையும், எங்கள், 'வி த லீடர்ஸ்' அறக்கட்டளை, இயற்கை விவசாயம் தொடர்பாக பல முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருவதையும், பலர் அறிந்துள்ளனர். கடந்த ஜூலை 12ல், விவசாய நிலத்தை நான் வாங்கியிருப்பது உண்மை தான். இந்த நிலத்தை நான், என் மனைவி சேமிப்பு மற்றும் கடன் ஆகியவற்றை பயன்படுத்தி வாங்கியுள்ளேன். கடந்த இரு மாதங்களாக, என் வங்கி கணக்கு வாயிலாக, அந்த கடனுக்கான மாதாந்திர வட்டியையும் செலுத்தி வருகிறேன். நிலத்தை பதிவு செய்யும் நாளில், நான் செல்லவில்லை என்று கூறுபவர்கள், ஒரு அசையா சொத்தை, 'பவர் ஆப் அட்டர்னி' வாயிலாக வாங்க முடியும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். ஜூலை 10ம் தேதி கோவை மாவட்டம், காளப்பட்டி பதிவு அலுவலகத்தில், என் மனைவி அகிலாவுக்கு, 'பவர் ஆப் அட்டர்னி' வழங்கப்பட்டது. இந்த நிலத்தை பதிவு செய்வது தொடர்பாக, தமிழக அரசுக்கான பத்திரப்பதிவு, முத்திரைத்தாள், இதர கட்டணம் என, 40.59 லட்சம் ரூபாய் செலுத்தி உள்ளோம். மேலும், மத்திய அரசு திட்டத்தின் கீழ், ஒரு பால் பண்ணை அமைப்பதற்கான கடனுக்கும் நான் விண்ணப்பித்துள்ளேன். அந்த விண்ணப்பம், தற்போது பரிசீலிக்கப்பட்டு வருகிறது. அடுத்த ஆண்டுக்கான என் வருமான வரி அறிக்கைகள், நிச்சயமாக இவை அனைத்தையும் பிரதிபலிக்கும். சுருக்கமாக சொன்னால், நான் இதுவரை வாங்கிய, முதல் மற்றும் ஒரே அசையா சொத்து இதுதான். நம் இளைஞர்களின் தொழில் ஆர்வத்தை ஊக்குவித்து உதவுவதன் வாயிலாகவும், சமூக நிறுவனங்கள் மற்றும் தொடக்கநிலை மற்றும் சிறு, குறு நிறுவனங்களில் முதலீடு செய்வதன் வாயிலாகவும், தங்கள் முதலீட்டு கனவுகளை நனவாக்கும் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு உதவ, விரைவில் மற்றொரு முதலீட்டு நிறுவுனத்தை துவக்கும் ஆரம்ப கட்ட பணியில் ஈடுபட்டு உள்ளேன். தமிழகத்தில் பா.ஜ., மாநில தலைவரானதில் இருந்து, கடந்த ஏப்., 2025 வரை, என் குடும்பத்துடன் செலவிட, எனக்கு மிக குறைந்த நேரமே கிடைத்தது. நானும், என் மனைவியும் நம் நாட்டின் மிகவும் புகழ்பெற்ற நிறுவனங்களில் ஒன்றில் இருந்து, வணிக மேலாண்மை பட்டம் பெற்றுள்ளோம். தற்போது, என் குடும்பத்திற்காகவும், என் குழந்தைகளின் எதிர்காலத்தை பாதுகாக்கவும், சட்டத்திற்கு உட்பட்டு, நாங்கள் இப்போது சில வணிக முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறோம். இதில், சில ஆர்வக் கோளாறுகளுக்கு வருத்தம் ஏற்பட்டால், அவர்களை கடவுள் காப்பாற்றட்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

pakalavan
செப் 14, 2025 11:03

கட்சி இவன கை கழுவிடுச்சு, வேற கட்சிக்கு போகலாம்னுபாத்தா, யாருமே இந்த பித்தலாட்டகாரடை சேத்துக்க தயாரில்லை, அதான் கொள்ளையடிச்ச பணத்தை வச்சி பொழப்பு ஓட்டிட்டு இருக்கார்


Elangho
செப் 13, 2025 21:41

you too brutus


venugopal s
செப் 13, 2025 20:05

பி எம் இ ஜி பி திட்டத்தில் வங்கிக் கடன் சர்வீஸ் செக்டாருக்கு இருபது லட்சம் ரூபாய் தான் கிடைக்கும்.இவருடைய ப்ராஜெக்ட் பெரியது போல் தோன்றுகிறது. அதனால் இது கருப்பை வெள்ளையாக்க ஊரை ஏமாற்றும் சால்ஜாப்பு வேலை என்று தோன்றுகிறது!


R K Raman
செப் 14, 2025 14:23

தீனிக்கேற்ற ...


Natchimuthu Chithiraisamy
செப் 13, 2025 17:37

ரஜனி நடித்த அண்ணாமலை படத்தை பார்த்த பின்பு பால்காரன் என்கிற பாட்டி பாடி நிலம் வாங்க ஆசை வந்தது


Sangi Mangi
செப் 13, 2025 17:30

மேல நான் சொன்னது இல்ல - அண்ணாமலை DMK Files ஒவ்வொண்ணா வெளியிடப் போறேன்னு அலம்பல் செஞ்சான். அண்ணா அறிவாலயச் செங்கலை ஒவ்வொண்ணா உருவப் போறேன்னு சொன்னான். இன்னைக்கு அவனோட ஃபைல்ஸ் வெளியே வந்துருக்கு அதுவும் அவனோட சொந்த கட்சிக்காரன் மூலமாக. இது அண்ணாமலை பிஜேபி மாநிலத் தலைவராக இருந்து சம்பாதித்த சொத்தில் 10 விழுக்காடு தானாம். அண்ணாமலையை Tag செய்து, பதிலை எதிர்பார்த்து கல்யாணராமன் போட்ட ட்வீட்


visu
செப் 13, 2025 19:53

அவர் வாங்குவது தமிழ்நாட்டில் ஆட்சில இருப்பது திமுக இதில் திரை மறைவு வேலைகள் இருந்தால் திமுக அரசு சும்மா இருக்குமா சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் வேறெங்காவது வாங்கி இருந்தாலே சொல்லலாம்


Sangi Mangi
செப் 13, 2025 17:29

தம்பி annamalai_k அண்ணாமலை, திருடனுக்கு தேள் கொட்டியதை போல பதட்டத்தில் நிலம் வாங்கியது உண்மை என ஒப்பு கொண்டதற்கு நன்றி அதே போல 2021 மே மாதம் வரை யாரென்றே தெரியாத கரூர் சேரலாதனுடன் சேர்ந்து Zen Path Ventures தொடங்கியதையும் ஒப்பு கொண்டதற்கு நன்றி. நான் இதுவரை வெளியிட்டது ஒரு சிறு துளி மட்டுமே, இன்னும் உன்னுடைய நண்பன் CR.சிவக்குமார், உதவியாளர் அஸ்வின் செல்வம் தொடங்கியுள்ள புதிய நிறுவனங்கள், தங்ககடத்தல் பிருத்வி, மச்சான் சிவக்குமார் -சத்திரபட்டி செந்தில் பற்றியும் விரைவில் அறிக்கை அளிப்பாய் என நம்புகிறேன். ஆனால், உன்னுடைய இன்றைய முதல்கட்ட அறிக்கை என்னுடைய நியாயமான கேள்விகளுக்கு பதில் சொல்வதை விட மேலும் பல கேள்விகளை கேட்க வைக்கிறது. ₹4.50 கோடி விலை + ₹40 லட்சம் பத்திர பதிவு + செலவு என ₹4.90 கோடி செலவு செய்து வாங்கியுள்ளதாக நீயே ஒப்புகொண்ட அந்த நிலத்தின் சந்தை மதிப்பு என்ன என்பதை அறிக்கையில் குறிப்பிட மறந்துவிட்டாய். பரவாயில்லை, அந்த இடத்தின் உண்மை மதிப்பு என்ன என்பதை தமிழக மக்களுக்கு ஏற்கெனவே தெரிந்து விட்டது. கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில் உன்னுடைய தேர்தல் அபிடவிட்டில் நீயே கையெழுத்திட்டு பதிவு செய்துள்ள உன்னுடைய குடும்பத்தின் மொத்த வருமானம், வங்கி சேமிப்பு மற்றும் இதர சொத்துக்களை பற்றி பார்ப்போம் - கணவன் மனைவி என உங்கள் இருவரின் கடந்த ஐந்தாண்டு கால மொத்த வருமானம் : ₹1.25 கோடி மட்டுமே. - நீங்கள் நடத்தும் Core Talent நிறுவனத்தின் ஐந்தாண்டு கால மொத்த லாபம் : ₹30.0 லட்சம் மட்டுமே. ஆக, உங்களுடைய ஐந்தாண்டு கால மொத்த வருமானம் : ₹1.55 கோடி மட்டுமே. இதில்தான் குழந்தைகளின் பள்ளி கட்டணம் உள்பட உன்னுடைய குடும்ப செலவுகளை செய்திருக்க வேண்டும், லண்டன் சென்று படித்ததற்கும் இதிலிருந்துதான் செலவு செய்திருக்க வேண்டும். செலவு போக மீதம் இருப்பதில் முதலீடுகள் செய்யலாம். இந்த சேமிப்பில் இருந்து ₹72 லட்சம் எடுத்து தானே சூலூர் செலக்கரச்சல் கிராமத்தில் 21.10.2023 அன்று சர்வே 15/1B வாங்கினாய் அந்த ஆறு ஏக்கர் South Estate வீட்டுமனையின் இன்றைய சந்தை மதிப்பு ₹30 கோடி. சந்தை மதிப்பை விட்டு விடலாம், மொத்த சேமிப்பில் ₹72 லட்சத்தை கழித்தால் மீதி இருப்பது வெறும் ₹83 லட்சம் மட்டுமே. இப்பொழுது கேள்வி்க்கு வருவோம். 1. உனக்கு இந்த நிலம் வாங்க ₹4.0 கோடி கடன் கொடுத்த வங்கியின் பெயர் என்ன? கோவை கூட்டுறவு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியா? 2. உன்னுடைய லண்டன் சுற்றுலா, அமெரிக்க சுற்றுலாவிற்கு செலவு செய்தது யார்? 3. நான்காண்டுகளில் ₹2.0 கோடி செலவு செய்து நான்கு புதிய கார்கள் Innova Crysta, Fortuner, KIA Carnival, Innova Hycross வாங்க பணம் கொடுத்தது யார்? 4. எந்த மடையானவது ₹5.0 கோடி கடனில் நிலம் வாங்கி, பின்னர் மேலும் கடன் வாங்கி மாட்டு பண்ணை வைப்பானா? அப்படியே பால் பண்ணை வைக்க நினைத்தால் சொந்த ஊரான தொட்டம்பட்டியில் ஏற்கெனவே இருக்கும் 70 ஏக்கர் சொந்த நிலத்தில் ஏன் பால் பண்ணை வைக்கவில்லை? 5. நிலம் வாங்க ₹4.50 கோடி வங்கி கணக்கில் இருந்து செலுத்தியிருக்கிறாய், அந்த வங்கி கணக்கின் கடந்த இரண்டு ஆண்டு கால பரிவர்த்தனைகளை வெளியிட தயாரா? [ ரபேல் பில்லை போல மூன்று மாதம் கழித்து கையில் எழுதி தராமல் உடனடியாக ஆன்லைன் ஸ்டேட்மென்ட்டை எடுத்து போடு]


Elangho
செப் 13, 2025 22:01

100% true


என்னத்த சொல்ல
செப் 13, 2025 23:00

யார் சார் நீங்க... இவ்வளவு விவரமா பேசுறீங்க.. உங்க அறிவுக்கும் பேருக்கும் சம்பந்தம் இல்லையே...


அப்பாவி
செப் 13, 2025 16:47

சிறுக சிறுக சேமிச்சு கோவையில் 11 ஏக்கர் வாங்கும் அளவுக்கு ... அடுத்த ரெண்டு ரீல்களில் அமுலுக்கு போட்டியா வளர்ந்துருவாரு


ராமகிருஷ்ணன்
செப் 13, 2025 14:34

இதெல்லாம் திமுகவின் பகுதி செயலாளர்கள் வாங்கி சுருட்டி முழுங்கி ஏப்பம் விடும் சொத்துக்கள்.


Raja
செப் 13, 2025 13:38

அண்ணாமலை சரியான மோசடி பேர்வழி.. திமுகவுடன் கள்ள உறவு வைத்துகொண்டு அதிமுகவை அழிக்க நினைப்பவர் திமுக கைக்கூலி பன்னீர், பிராடு தினகரன் என்று எல்லா தீய சக்திகளும் சேர்ந்துகொண்டு திரு எடப்பாடி அவர்களை எதிர்க்கின்றன. அண்ணாமலை பி.ஜே.பிக்கும் துரோகம் செய்கிறார். பீகார் தேர்தல் முடிந்தவுடன் இதற்கான விலையை அண்ணாமலையை கொடுக்க வைப்பார்கள்


Natchimuthu Chithiraisamy
செப் 13, 2025 17:40

உண்மை போல் தெரிகிறது. இனி இது போல் செய்யக் கூடாது பாவம் சும்மா விடாது


venugopal s
செப் 13, 2025 10:38

பரவாயில்லையே, எந்த அரசாங்க பதவி,அதிகாரம் எதுவும் இல்லாமல் தேசிய கட்சியின் மாநிலத் தலைவராக மட்டுமே இருந்து இவ்வளவு குறுகிய காலத்தில் நிறையவே பணம் சொத்து சேர்த்து விட்டாரே! அண்ணாமலை முழு அரசியல்வாதியாக மாறி விட்டார்!


சமீபத்திய செய்தி