உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / குற்றச்சாட்டு புரியவில்லை: சுப்பிரமணியன்

குற்றச்சாட்டு புரியவில்லை: சுப்பிரமணியன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

''அண்ணாமலை என் மீது கூறியுள்ள குற்றச்சாட்டு என்னவென்று எனக்கு தெரியவில்லை,'' என, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.சென்னை எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில், கருணாநிதி பிறந்த நாள் நிகழ்ச்சியில் பங்கேற்ற பின், அவர் அளித்த பேட்டி:அண்ணா பல்கலையில் நடந்த சம்பவத்தில், தமிழக காவல் துறை மிகச் சிறப்பாக நடவடிக்கை எடுத்து, ஐந்து மாதத்தில் குற்றம்சாட்டப்பட்டவருக்கு தண்டனை பெற்று தந்துள்ளது. போலீசாரின் செயல்பாட்டுக்கு, நீதிபதியும் பாராட்டு தெரிவித்துள்ளார். வட்டச்செயலர் சண்முகம் எனக்கு போன் செய்தார் என, அண்ணாமலை குற்றம்சாட்டுகிறார். நான், மாவட்டச்செயலர். என் தலைமையில் உள்ள நிர்வாகத்தில், 82 வட்டச்செயலர்கள் உள்ளனர்.தினமும், 10 முதல் 15 வட்டச்செயலர்கள், எனக்கு போன் செய்கின்றனர். இந்த தேதியில், இந்த நேரத்தில், வட்டச்செயலர், அமைச்சர் சுப்பிரமணியனுக்கு போன் செய்துள்ளார் எனவும், அவரை விசாரிக்க வேண்டும் எனவும், அண்ணாமலை சொல்கிறார். இது என்ன குற்றச்சாட்டு என்றே புரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Ramesh Sargam
ஜூன் 04, 2025 20:33

இவன் அதுக்கு சரிப்பட்டு வரமாட்டன். அதுபோல, அதாவது வடிவேலு போல அமைச்சர் சுப்பிரமணியன் நிலைமை.


kannan sundaresan
ஜூன் 04, 2025 15:13

எப்படி யார் அந்த சார்?


ஆரூர் ரங்
ஜூன் 04, 2025 14:33

SIDCO மோசடி வழக்கில் உள்ளே போயிருக்க வேண்டிய ஆளு. நீதிமன்றத்தின் தாமதத்தால் வெளியிலேயே இருந்துகொண்டு அன்புத்தம்பியின் சிறப்பு கவனிப்பில் மகிழ்ச்சியாக இருந்தார். இப்போ என்ன புரியல?.


சந்திரன்
ஜூன் 04, 2025 14:14

இப்பவும் புரியல இல்லை


பாரத புதல்வன்
ஜூன் 04, 2025 11:44

புரிய வைப்பது அண்ணாமலை அவர்களின் கடமை.... ஆனால் புரிந்து கொண்டபின் 10 ரூபாய் அணிலிடம்( எ)தியாகியிடம் அனுபவத்தை கேட்டு தெரிந்து கொள்ளவும்.


கண்ணன்
ஜூன் 04, 2025 10:57

ஒழுங்கான படிப்பிருந்தல் புரிந்திருக்கும்


pv, முத்தூர்
ஜூன் 04, 2025 08:58

யார் அந்த சார்....... கேக்குதா... ஊஊஊஊஊஊஊஊ


theruvasagan
ஜூன் 04, 2025 08:27

அந்த சார் யாருங்கிற சாதாரண விஷயம் கூடவா புரியலை.


பேசும் தமிழன்
ஜூன் 04, 2025 07:56

அண்ணாமலை அவர்கள் வேறு அமைச்சர் யாரையும் விசாரிக்க வேண்டும் என்று கூறவில்லை... குற்றவாளியுடன் தொடர்பில் இருந்த ஆட்களிடம் மட்டும் தான் விசாரணை நடத்த வேண்டும் என்று கோரி இருக்கிறார்... குற்றம் செய்த பின்பு.... குற்றவாளி யாரிடம் எல்லாம் பேசினானோ.. அவர்களை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வர வேண்டும் என்று கேட்பது எந்த வகையில் தவறு ???


Rajasekar Jayaraman
ஜூன் 04, 2025 07:17

புரிய வைப்பார் அண்ணாமலை இதுபோல் தான் ஒருவன் முன்பு கேட்டான் கைது செய்யும் போது....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை