உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / கவர்னரை கடவுளாக பார்க்கிறேன்; பெண் ஆட்டோ டிரைவர் நெகிழ்ச்சி

கவர்னரை கடவுளாக பார்க்கிறேன்; பெண் ஆட்டோ டிரைவர் நெகிழ்ச்சி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'வாடகைக்கு ஆட்டோ ஓட்டி வந்த பெண், சொந்தமாக ஆட்டோ வாங்க உதவ வேண்டும்' என, மகளிர் தின விழாவில் கோரிக்கை வைத்த பெண்ணுக்கு, கவர்னர் ரவி ஆட்டோ வாங்கி கொடுத்தார்.சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில், சர்வதேச மகளிர் தின விழா கடந்த மார்ச் 7ம் தேதி கொண்டாடப்பட்டது. இதில், பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் மகளிர் பங்கேற்று, தாங்கள் கடந்து வந்த பாதை குறித்து பேசினர். இவ்விழாவில், செங்கல்பட்டு மாவட்டம் கூவத்துார் அடுத்த விளம்பூர் கிராமத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் அமலா, 34, பங்கேற்றார்.இவருக்கு இரு மகள்கள் உள்ளனர். தினமும் ஊரில் இருந்து பஸ்சில் சென்னை சென்று, ஆட்டோ ஓட்டி வந்தார். விழாவில் அவர் பேசும் போது, 'தற்போது வாடகை ஆட்டோ ஓட்டுகிறேன்; எனக்கு சொந்தமாக ஆட்டோ வாங்கி முன்னேற வேண்டும் என்ற ஆசை உள்ளது. அதற்கு கவர்னர் உதவ வேண்டும்' என்று கோரிக்கை விடுத்தார். அவர் தமிழில் பேசியதை கவனித்த கவர்னர், மூன்று மாதங்களுக்கு பின், அவரது கோரிக்கையை நிறைவேற்றி உள்ளார். தன் விருப்ப நிதியில், அமலாவுக்கு ஆட்டோ வாங்கி கொடுத்துள்ளார். கவர்னர் மாளிகையில், அமலா மற்றும் அவரது மகள்களிடமும், ஆட்டோவிற்கான சாவியை வழங்கினார்.அதன்பின், அமலா ஆட்டோ ஓட்ட... அவரது மகள்களுடன், கவர்னர் பின் சீட்டில் அமர்ந்து சிறிது துாரம் சென்றார். அவருக்கு, அமலா மற்றும் அவரது மகள்கள் நன்றி தெரிவித்தனர். இது குறித்து, அமலா கூறியதாவது: சொந்தமாக ஆட்டோ வாங்குவது, கனவுக்கு அப்பாற்பட்ட விஷயமாக இருந்தது. யாரிடமும் கைகட்டி வேலை பார்க்கக்கூடாது என்ற வைராக்கியம் இருந்தது.

மகிழ்ச்சி

மூன்று மாதங்களுக்கு முன், கவர்னரிடம் கோரிக்கை வைத்தேன். ஆனால், ஆட்டோ கிடைக்கும் என்று நினைத்து பார்க்கவில்லை. எனக்கு சொந்தமாக ஆட்டோ கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. தினமும் காலை 7:00 மணிக்கு புறப்பட்டு, 9:00 மணிக்கு கொட்டிவாக்கம் வருவேன். அங்கிருந்து ஆட்டோ ஓட்டிவிட்டு, இரவு 9:00 மணிக்கு வீடு திரும்புவேன். ஒரு நாளைக்கு 400 ரூபாய் ஆட்டோ வாடகை; மற்ற செலவுகள் போக, கையில் எதுவும் நிற்காது. கவர்னர் சொந்தமாக ஆட்டோ வாங்கி தந்திருப்பதால், இனி சிரமம் குறையும். என் மகள்களை நன்றாக படிக்க வைப்பேன். கடவுளை நான் கண்டதில்லை, கவர்னரை கடவுள் வடிவில் பார்க்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

KRISHNAN
ஜூன் 28, 2025 19:19

வாழ்த்துக்கள், நல்லதை யார் செய்தால் என்ன? நல்லதை யார் சொன்னால் என்ன? மனித நேயம் வளரட்டும் மனித நேயம் மலரட்டும்


அசோகன்
ஜூன் 28, 2025 16:12

ஏழைகளின் கண்களில் ஆனந்த கண்ணீரை பார்ப்பது மோடிஜி கவர்னர் ரவி அவர்கள்........ ஆனால் தமிழக மக்களின் கண்களில் போதையை பார்ப்பது திருட்டு கூட்டம்


முருகன்
ஜூன் 28, 2025 15:53

வருங்காலத்தில் அரசியல் கட்சியில் சேர்ந்து வெற்றி பெற கவர்னருக்கு அனைத்து தகுதிகளும் உள்ளது


venugopal s
ஜூன் 28, 2025 13:25

அந்தக் கடவுளுக்கே படியளப்பது தமிழக அரசு தான்!


Sakthi,sivagangai
ஜூன் 28, 2025 14:54

அறிவாலயத்தில் அடைப்பு எடுக்கிற உனக்கும் படியளப்பது திராவிட மாடல் திமுக அரசுதான்...


Mettai* Tamil
ஜூன் 28, 2025 15:14

எந்த கடவுளுக்கு ?


vivek
ஜூன் 28, 2025 15:45

அறிவிலி வேணுகோபால்....தமிழக அரசுக்கு படி ஆளப்பது தமிழ்.மக்களும், பாட்டில் மேல பத்து ரூபாய் கொடுக்கும் நீயும் தான்


venugopal s
ஜூன் 28, 2025 16:19

ஆளுநர் சம்பளம், ஆளுநர் மாளிகை செலவு எல்லாமே மாநில அரசு தான் கொடுக்கிறது! மத்திய அரசு அல்ல!


vivek
ஜூன் 28, 2025 20:52

மாநில அரசுக்கு தமிழக மக்கள் போடும் பிச்சை..... வேணுகோபால்


Ramesh Sargam
ஜூன் 28, 2025 12:19

அமலா போன்று பலர் உள்ளனர். அனைவருக்கும் உதவேண்டும். கவர்னர் மட்டுமல்ல, மாநில முதலமைச்சரும் கூட உதவவேண்டும். வசதி படைத்த சினிமா நடிகர்கள், நடிகைகள் மற்றும் பலர் கூட உதவவேண்டும்.


ஆரூர் ரங்
ஜூன் 28, 2025 10:36

ரவி அவர்களை சனாதன மத, சாதி வெறியராக சித்தரித்து பொய்ப்பிரச்சாரம் செய்யும் எதிர்கட்சிகளுக்கு சம்மட்டி அடி.


ராஜ்
ஜூன் 28, 2025 10:22

இப்போ தீயமுககாரன் வயிற்று எரிச்சலில் எதாவது திமுககாரனுக்கு விமானம் கொடுத்து விளம்பரம் தேட பார்ப்பார்கள்


Manaimaran
ஜூன் 28, 2025 09:38

தி.மு.க. காரனுகளால் அச்சுறுத்தல் ஏற்படலாம் கவனம்


முக்கிய வீடியோ