உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / விதவிதமான பொய்கள் சொல்லி சைபர் அடிமைகளாக மாற்றினேன்; கைதானவர் வாக்குமூலம்

விதவிதமான பொய்கள் சொல்லி சைபர் அடிமைகளாக மாற்றினேன்; கைதானவர் வாக்குமூலம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'திருமண செலவை ஏற்பேன்; சொந்த வீடு கட்டித் தருவேன் என, விதவிதமான பொய்களை சொல்லி, கிராமப்புற பெண்கள் மற்றும் இளைஞர்கள் வாயிலாக, கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்தேன்' என, கைதான முனீர் உசேன் வாக்குமூலம் அளித்துள்ளார்.சென்னை தேனாம்பேட்டையில், போலி கால்சென்டர் நடத்தி, பல கோடி ரூபாய் மோசடி செய்த முனீர் உசேன், 36; அசோகன், 44 ஆகியோரை, 'சைபர் கிரைம்' போலீசார் உதவியுடன், மத்திய குற்றப்பிரிவு போலீ சார் கைது செய்துள்ளனர்.போலீசாரிடம் முனீர் உசேன் அளித்துள்ள வாக்குமூலம்: நான் வி.சி., கட்சி நிர்வாகி போல, காரில் அக்கட்சி கொடியை கட்டி வலம் வந்தேன். 2020ம் ஆண்டு, போலி கால்சென்டர் நடத்தி பண மோசடி செய்தது தொடர் பாக, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டேன்.அப்போது, என்னை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்தனர். சிறையில் இருந்து வெளியே வந்த பிறகும், போலி கால்சென்டர் நடத்தினேன். கட்டடங்களை வாடகைக்கு எடுப்பேன். ஆனால், என் பெயரில் ஒப்பந்தம் போடமாட்டேன். உறவினர்களின் பெயரில் ஒப்பந்தம் செய்வேன்.அதன்பின், அவர்களின், மனைவி, தாயார் ஆகியோர் பெயரில், நானே போலி ஒப்பந்தம் தயார் செய்வேன். போலீசாருக்கு சந்தேகம் ஏற்படக்கூடாது என்பதற்காக, இந்த ஏற்பாடுகளை செய்து வந்தேன்.காப்பீடு நிறுவனங்கள் மற்றும் முன்னணி வங்கிகள் பெயரில், முதலீட்டாளர்களை ஏமாற்றி, கோடிக்கணக்கில் பணம் பெற்று மோசடி செய்து வந்தேன். இதற்கு பலி ஆடுகளாக கிராமப்புற இளம் பெண்கள் மற்றும் வாலிபர்களை தேர்வு செய்வேன்.அவர்களின் திருமண செலவை நானே ஏற்றுக் கொள்வதாக, ஒப்பந்த பத்திரம் தயார் செய்து, நம்ப வைப்பேன். சொந்த வீடு கட்டித் தருவேன் என, விதவிதமான பொய்கள் சொல்லி, அவர்களை நம்ப வைத்து, பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ளேன்.இதற்காக கூட்டாளி அசோகனுடன் சேர்ந்து, சென்னை ராயப்பேட்டை ஒயிட்ஸ் சாலையில் உள்ள அடுக்குமாடி கட்டடம் ஒன்றில், போலி கால்சென்டர் நடத்தி வந்தேன். இந்த இடத்தில் எங்களுக்கு எதிர்ப்பு கிளம்பியது. எனவே, ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலைக்கு இடம் பெயர்ந்தேன்.அதேபோல, தேனாம்பேட்டையிலும் போலி கால்சென்டர் நடத்தி வந்தேன். என்னிடம், 500க்கும் மேற்பட்ட இளம் பெண்கள், இளைஞர்கள் பணிபுரிந்து வந்தனர். அவர்களுக்கு மோசடி செய்யும் தொகைக்கு ஏற்ப சம்பளம் கொடுத்து வந்தேன். இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Ganapathy
ஜூன் 30, 2025 20:27

இஸ்லாமின் உண்மையான அடிமை


என்றும் இந்தியன்
ஜூன் 30, 2025 16:30

குற்றத்திற்கு தண்டனை இது ஒன்றே சரியானது "தவறு கண்டேன் சுட்டேன்"


shakti
ஜூன் 30, 2025 14:28

அமைதி மார்க்கம் என்ன மூர்க்கம்?


Bahurudeen Ali Ahamed
ஜூன் 30, 2025 12:16

அறியாமல் தவறு செய்து தண்டனை அனுபவிப்பவர்களுக்கு மட்டும் ஜாமீன் கிடைக்கச்செய்ய வேண்டும் தெரிந்தே வேண்டுமென்றே தான்வாழ மற்றவர்களை ஏமாற்றி பிழைப்பவர்களுக்கு கடுமையான தண்டனை தரப்படவேண்டும் அவர்களின் சொத்துக்களை பிடுங்கி ஏமாற்றப்பட்டவர்களுக்கு வழங்கவேண்டும்


Ramesh Sargam
ஜூன் 30, 2025 11:53

திமுக ஆட்சியில் இருக்கும்வரையில் இதுபோன்ற கொடுமைகளை மக்கள் சந்தித்துக்கொண்டுதான் இருக்கவேண்டும். அது அவர்கள் விதி போல.


Senthoora
ஜூன் 30, 2025 15:26

அப்போ பாஜக ஆட்சிதான் இந்தியவிழாநடக்குது, என்னமோ இப்போதான் சம்பவங்கள் நடகுத்துனு நினைப்பு, திமுகவை திட்டாவிட்டால் துக்கம் வராது?


kannan sundaresan
ஜூன் 30, 2025 11:53

இதூபோன்ற மோசடி ஆட்களை கைது செய்து, பெயிலில் விடுவதால், அவர்கள் மீண்டும் தவறு செய்கிறார்கள். தண்டனை போதாது.


Kalyanaraman
ஜூன் 30, 2025 10:35

குற்றம் செய்தவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு பிறகு பெயிலில் வெளியே வந்து விடுகிறார்கள். ஆண்மையற்ற முதுகெலும்பற்ற சட்டங்களால் இந்த வழக்குகள் பல வருடங்கள் முடிவு தெரியாமல் போய்க் கொண்டே இருக்கிறது. இதுதான் குற்றவாளிகளுக்கு மேலும் குற்றங்களை செய்ய ஊக்குவிக்கிறது. அதுவும் போலீசுக்கு "வாய்க்கரிசி" போட்டு விட்டால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.


சிந்தனை
ஜூன் 30, 2025 09:16

நம் நாட்டில் நடப்பது கொஞ்சம் அதிசயமாக இருக்கிறது குற்றவாளிகளை இந்த நாடு தண்டிக்கிறது ஆனால் குற்றவாளிகளை குற்றவாளிகள் இல்லை என்று வாதாடிய வக்கீல்களை தண்டிப்பதில்லை குற்றவாளிகளை விடுவித்த நீதிபதிகளை தண்டிப்பது இல்லை இதுவும் கூட குற்றங்கள் அதிகமாக ஒரு வாய்ப்பு அதனால் குற்றவாளிகளை குற்றமற்றவர் என்று வழக்காடிய வக்கீல் அவரை விடுதலை செய்த நீதிபதிகள் இவர்களுக்கும் தூக்குத்தண்டனை என்று சட்டத்தை கொண்டு வர வேண்டும் அப்பொழுது நாட்டில் குற்றங்கள் குறையலாம் என்று தோன்றுகிறது நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்


சமீபத்திய செய்தி