உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / தி.மு.க., அரசை விமர்சிக்க மாட்டேன்: வைகோ

தி.மு.க., அரசை விமர்சிக்க மாட்டேன்: வைகோ

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தி.மு.க., தலைமை அலுவலகமான அறிவாலயத்தில், முதல்வர் ஸ்டாலினை நேற்று ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ சந்தித்தார்.

சந்திப்புக்கு பின், வைகோ அளித்த பேட்டி:

தி.மு.க., அரசுக்கு எதிராக, எந்தக் கட்டத்திலும், எந்தப் பிரச்னையிலும் ஒரு வார்த்தை கூட விமர்சனம் வைத்ததில்லை; வைக்கவும் மாட்டேன். தி.மு.க.,வுக்கு பக்கபலமாக இருப்பேன் என, கருணாநிதிக்கு அளித்த உறுதிமொழியை என்றும் காப்பேன். இதை ஸ்டாலினிடம் கூறினேன். இந்தியாவுக்கே முன்னோடியாக, ஸ்டாலின் ஆட்சி நடத்தி வருகிறார். எனது, 61 ஆண்டுகால பொது வாழ்வில், 30 ஆண்டுகள் தி.மு.க.,வில் பணியாற்றினேன்; 31 ஆண்டுகளாக ம.தி.மு.க.,வை வழிநடத்தி வருகிறேன். ஹிந்துத்துவ, சனாதன சக்திகள், பா.ஜ., என்ற குடையில் இருந்து கொண்டு, திராவிட இயக்கத்தை தகர்க்க வேண்டும்; அழிக்க வேண்டும் என நினைக்கின்றன. இமயமலையை கூட அசைத்து விடலாம். ஆனால், தமிழகத்தில் திராவிட இயக்கத்தை அசைக்க முடியாது. வாஜ்பாயும், அத்வானியும் எனக்கு மத்திய 'கேபினட்' அமைச்சர் பதவி தருவதாகச் சொன்னபோது, ஏற்க மறுத்தவன் நான். கடந்த 2014ல், பிரதமர் மோடி பதவியேற்பு விழாவுக்கு, அன்றைய இலங்கை அதிபர் ராஜபக்சேவை அழைத்ததால், பா.ஜ., கூட்டணியிலிருந்து வெளியேறினோம். கொள்கையில் உறுதியாக இருப்பவன் நான். இவ்வாறு அவர் கூறினார்.

முதல்வருடன் சந்திப்பு ஏன்?

வைகோவுக்கு மீண்டும் ராஜ்யசபா எம்.பி., பதவி வழங்கப்படாததால், தி.மு.க., -- ம.தி.மு.க., உறவில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. மாநிலக் கட்சி அந்தஸ்து பெற வேண்டுமானால், வரும் சட்டசபை தேர்தலில் குறைந்தது, 12 தொகுதிகளில் போட்டியிட விரும்புவதாக துரை வைகோ தெரிவித்திருந்தார். இதனால், பா.ஜ., கூட்டணிக்கு செல்லவும், மகன் துரையை மத்திய இணை அமைச்சராக்கவும், வைகோ முடிவு செய்து விட்டதாக செய்தி வெளியானது. இந்த சூழ்நிலையில், முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து, அரை மணி நேரம் பேசியிருக்கிறார் வைகோ.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 51 )

shyamnats
ஜூலை 04, 2025 09:39

தனக்கு வாக்களித்த மக்கள் நலனை விட, தனக்கு அரசியல் சலுகை காட்டும் கட்சிக்கு உண்மையாக இருக்கிறார். இவரை எப்படி மக்கள் மதிப்பார்கள்


Raj S
ஜூலை 03, 2025 23:10

இதெல்லாம் என்ன ஜென்மமா இருக்கும்னு தெரியலையே?


Jagan (Proud Sangi )
ஜூலை 03, 2025 22:54

நீயே தெலுங்கு அப்புறம் என்னே இலங்கை தமிழர் பற்றி முதலை கண்ணீர் ? தமிழுக்கும் உனக்கும் என்ன சம்பந்தம் ?


Ramesh Sargam
ஜூலை 03, 2025 22:15

ஒருவேளை விமர்சித்தால் அந்த திருபுவனம் இளைஞன் நிலை உங்களுக்கு ஏற்படலாம். ஜாக்கிரதை.


Vijay D Ratnam
ஜூலை 03, 2025 21:56

அரசியலில் இருந்து ஒதுங்கி மீதமிருக்கும் வாழ்வில் கெளரவமாக இருக்கலாம்.


Sundaran
ஜூலை 03, 2025 21:13

மானம் கெட்ட பிழைப்பு தேவையா கோபால்.கட்டுமரத்தை கண்டபடி திட்டிவிட்டு பின்னர் காலில் விழுந்தீர்.இப்போது சுடலைக்கு பல்லாக்கு தூக்குகிறீர் இதற்கு அரசியலில் இருந்து விலகி விடுவதே சால சிறந்தது.


சந்திரன்
ஜூலை 03, 2025 21:10

இன்னும் இவரை நம்பிகினு இருக்கானுவ


D Natarajan
ஜூலை 03, 2025 20:55

எப்படித்தான் ஸ்டாலினை சந்திக்க மனசு வருதோ. கொஞ்சம் கூட - இல்லையா. தன் மானம் என்று ஒன்று இருக்கிறது ஞாபகம் இருக்கா


JaiRam
ஜூலை 03, 2025 19:58

வெட்கம், மானம் ,சூடு ,சொரணை ஏதும் இல்லை? நீங்க நடத்துவது ஒரு கட்சி ?


Gokul Krishnan
ஜூலை 03, 2025 19:44

இதை கேட்ட பின்னும் ம தி முக வுக்கு ,தொண்டர்கள் என்று யாராவது இருந்தால் தயவு செய்து நீங்கள் சாப்பிடும் போது சோற்றை தான் சாப்பிடுகிறீர்கள் என்று உறுதி செய்து விட்டு சாப்பிடவும்


புதிய வீடியோ