உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / டிரம்ப் மிரட்டல்: மஸ்க் எச்சரிக்கை

டிரம்ப் மிரட்டல்: மஸ்க் எச்சரிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப், 'தொழிலதிபர் எலான் மஸ்க் நிறுவனத்துக்கு செல்லும் பல ஆயிரம் கோடி ரூபாய் மானியத்தை நிறுத்தினால், அரசுக்கு செலவு குறையும்' என மிரட்டல் விட்ட நிலையில், பதிலுக்கு எலான் மஸ்க், நாசா பயன்படுத்தி வரும் தன் நிறுவனத்தின் 'டிராகன்' விண்கலத்தை சேவையில் இருந்து நீக்கப்போவதாக எச்சரித்துள்ளார்.

உரசல்

அமெரிக்க அதிபர் டிரம்ப் நிர்வாகத்தில் அரசின் செலவை குறைக்கவும், திறனை மேம்படுத்தவும் சிறப்பு துறை உருவாக்கப்பட்டது. இதன் தலைவராக தொழிலதிபர் எலான் மஸ்க் இருந்தார். இவருக்கும் டிரம்ப் அமைச்சரவையைச் சேர்ந்தவர்களுக்கும் இடையே உரசல் ஏற்பட்டது.இதனால், சமீபத்தில் அரசு துறை தலைவர் பதவியிலிருந்து மஸ்க் விலகினார். இதைத்தொடர்ந்து அமெரிக்காவின் செனட் சபையில் புதிய செலவு மற்றும் வரி மசோதா தாக்கல் செய்யப்பட்டது.இந்த மசோதாவை எலான் மஸ்க் கடுமையாக விமர்சித்தார். இதனால் கோபமடைந்த அதிபர் டிரம்ப், எலான் மஸ்க் நிறுவனத்திற்கு தரப்படும் அரசு ஒப்பந்தங்கள் மற்றும் மானியங்களை நிறுத்தப்போவதாக மிரட்டல் விடுத்தார்.இதுகுறித்து எலான் மஸ்க் வெளியிட்ட அறிக்கையில், 'என் நிறுவனத்துக்கான அரசு ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டால் 'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனம், 'டிராகன்' விண்கலத்தை பயன்பாட்டில் இருந்து நீக்கும்' என எச்சரித்தார்.

பின்வாங்கல்

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு வீரர்களை அனுப்புவதற்கு டிராகன் விண்கலத்தை 40,000 கோடி ரூபாய் ஒப்பந்தத்தின் கீழ் நாசா பயன்படுத்துகிறது. டிராகனை நிறுத்தினால், உலக நாடுகள் பங்கேற்றுள்ள சர்வதேச விண்வெளி திட்டம் பாதிக்கப்படும். இந்நிலையில் மஸ்கின் சமூக வலைதள பக்கத்தில், பயனர் ஒருவர் நிதானத்தை கடைப்பிடிக்கும்படி கூறினார். அதை ஏற்ற மஸ்க், 'நல்ல அறிவுரை; நாங்கள் டிராகன் விண்கலனை நிறுத்த மாட்டோம்' என முடிவில் இருந்து பின்வாங்கினார்.

ஒரே வாய்ப்பு ரஷ்யா

விண்வெளி சுற்றுப்பாதைக்கு மனிதர்களை அனுப்பும் திறன் கொண்ட ஒரே விண்கலமாக அமெரிக்காவில் எலான் மஸ்க் நிறுவனத்தின் 'டிராகன்' மட்டுமே உள்ளது. அந்த விண்கலத்தின் சேவையை மஸ்க் நிறுத்தினால், அமெரிக்காவிற்கு உள்ள அடுத்த ஒரே வாய்ப்பு ரஷ்யாவின் சூயஸ் விண்கலம் மட்டுமே. இதில், ஒரே சமயத்தில் மூன்று வீரர்களை விண்ணுக்கு அனுப்ப முடியும்.

ஸ்பேஸ்எக்ஸ் வசமுள்ள ஒப்பந்தங்கள்

எலான் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் விண்வெளி நிறுவனத்தின் வசம் நாசாவின் டிராகன் விண்கல ஒப்பந்தம் மட்டுமின்றி இரு வேறு ஒப்பந்தங்கள் உள்ளன. விண்வெளி நிலையம் இனி பயன்படாது என்ற நிலை வரும்போது, அதை சுற்றுப்பாதையில் இருந்து அகற்றுவதற்கான ஒப்பந்தம்; நிலவின் மேற்பரப்பில் விண்வெளி வீரர்களை தரையிறக்க ஸ்டார்ஷிப் விண்கலத்துக்கான ஒப்பந்தத்தை ஸ்பேஸ்எக்ஸ் கைப்பற்றியுள்ளது.

இழந்த மஸ்க்

அமெரிக்க அதிபர் டிரம்புடனான எலான் மஸ்கின் வெளிப்படையான மோதல் மற்றும் டிரம்பின் சமீபத்திய சட்ட மசோதாவில் மின்சார வாகனங்களுக்கு வழங்கப்படும் வரிச்சலுகை நீக்கம் ஆகியவற்றால் மஸ்கின், 'டெஸ்லா' மின்சார கார் நிறுவனத்தின் பங்குகள் கடுமையாக சரிந்தன. நேற்று ஒரே நாளில் சந்தை மதிப்பில் 12.5 லட்சம் கோடி ரூபாயை டெஸ்லா இழந்தது. இதில் பெருமளவு பங்குகளை வைத்துள்ள மஸ்கின் சொத்து மதிப்பு 2.80 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு சரிந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

hariharan
ஜூன் 07, 2025 15:58

என்னப்பா இது, சின்னப்புள்ள சண்டை மாதிரி இருக்கு. நான் கொடுத்த மிட்டாயைக் கொடு.....


ஆரூர் ரங்
ஜூன் 07, 2025 09:12

பின்விளைவுகளை அறியாமல் இஷ்டத்திற்கு உதார் விடுவது நாட்டுக்கு அழிவு.


Kasimani Baskaran
ஜூன் 07, 2025 07:33

இருவரின் சண்டையும் மீடியாக்களுக்கு செய்தி தொடர்ந்து கிடைக்கிறது...


Mecca Shivan
ஜூன் 07, 2025 07:21

எப்படி ஒரே உரையில் இரண்டு கத்திகள் இருக்கக்கூடாது அப்படி ஒரே அறையில் இரண்டு கிறுக்கர்கள் இருக்கக்கூடாது . டொனால்ட் டக்கும் ஏலியன் மஸ்க்கும் அப்படிதான்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை