உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / தற்கொலை பண்ணிக்குவேன்னு பயமா இருக்கு: தி.மு.க., பிரமுகர் மீது புகார் கூறிய மாணவி கதறல்

தற்கொலை பண்ணிக்குவேன்னு பயமா இருக்கு: தி.மு.க., பிரமுகர் மீது புகார் கூறிய மாணவி கதறல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

அரக்கோணம்: கல்லுாரி மாணவியை திருமணம் செய்து துன்புறுத்தியதாக, தி.மு.க., பிரமுகர் மீது, மாணவி புகார் கொடுத்துள்ள நிலையில், 'தற்கொலை பண்ணிக்குவேன்னு பயமா இருக்கு' எனக் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த காவனுாரை சேர்ந்தவர், தி.மு.க., ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் தெய்வசெயல், 40. அரக்கோணம் பருத்திப்புதுாரை சேர்ந்தவர் கல்லுாரி மாணவி பிரித்தி, 21.

முறையீடு

இவரை காதலிப்பதாகக் கூறி, கடந்த ஜன., 31ல், 2வதாக தெய்வசெயல் திருமணம் செய்து கொண்டார். அவர் கடந்த, 2 மாதமாக பிரித்தியை அடித்து துன்புறுத்தி, தி.மு.க., பிரமுகர்களுக்கு இரையாக்க முயற்சித்ததாகக் கூறிய பிரித்தி, கடந்த, ஏப்., 5ல், தற்கொலைக்கு முயன்றார்.பின், போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என, அரக்கோணம், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., ரவியை சந்தித்து முறையிட்டார். அவர், நீதி கிடைக்கும்வரை ஆதரவாக இருப்பதாக, பிரித்தியிடம் கூறினார்.இந்நிலையில், பிரித்தி நேற்று வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது: போலீஸ்காரங்க வீட்டுக்கு வராங்க, போட்டோ எடுக்கறாங்க. ஆனா, எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கமாட்டேங்குறாங்க. குற்றவாளி மாதிரி, என்னை ட்ரீட் பண்றாங்க. 20 பொண்ணுங்களை வெச்சு, தி.மு.க., முக்கியஸ்தர்களுக்கு தெய்வசெயல் விருந்தாக்குவதாக சொல்லியிருந்தேன்.அதை வெச்சு, அந்த பொண்ணுங்க யாருன்னு கேட்டு தொந்தரவு பண்றாங்க. யாருன்னு போலீஸ் தான கண்டுபிடிக்கணும். ஆனா, போலீஸ்கிட்ட நான் ஆதாரமா கொடுத்தத்தையெல்லாம் வீடியோவா போடுறாங்க; எப்படின்னு தெரியல.எல்லா மீடியாக்காரங்களும், என்னோட முகத்தை மறைத்துதான் போடுறாங்க. ஆனா, அவங்க என் முகத்தை அப்படியே வெளியிடுறாங்க. இத எல்லாம் பார்த்ததால், தற்கொலை பண்ணிக்குவேன்னு பயமாக இருக்கு. எனக்கு இவ்வளவு சோதனையை கொடுத்த தெய்வசெயலை பிடிக்க மாட்டேங்குறாங்க. சந்தோஷமா திரிய விட்டிருக்காங்க.

நீதி வாங்கி தரணும்

பாதிக்கப்பட்ட எனக்கு நீதி கிடைக்காதோங்கற மனநிலைக்கு தள்ளப்பட்டிருக்கேன். இந்த உலகில், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி சொல்ல யாருமே இல்லையா? பொதுமக்கள்தான் நீதி வாங்கி தரணும். இவ்வாறு அதில் பேசி உள்ளார். இந்நிலையில், தி.மு.க., இளைஞரணி செயலரும், துணை முதல்வருமான உதயநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், 'அரக்கோணம் மத்திய ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் தெய்வசெயல், அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். 'அவருக்குப் பதிலாக, கவியரசு என்பவர், அந்தப் பொறுப்பில் நியமிக்கப்படுகிறார்' என தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

சத்யநாராயணன்
மே 21, 2025 11:48

பர்வீன் சுல்தானா அவளுடைய அப்பாவிடம் சொல்லி ஏதாவது நடவடிக்கை எடுப்பார் பார்க்கலாம்


lana
மே 21, 2025 11:32

தற்காலிகமாக பொறுப்பு இல் இருந்து விடுவிக்க பட்டு வரும் காலங்களில் இன்னும் பெரிய மாநில அளவில் பொறுப்பு தரப்படும்.


அப்பாவி
மே 21, 2025 11:29

எல்லாம் தெய்வச்செயல்...


theruvasagan
மே 21, 2025 10:23

எடுக்கறது பிச்சையாம். ஆனால் பேர் கோடீஸ்வரனாம். செய்யறது அயோக்கியத்தனமாம். பேரு தெய்வீகமாம்.


theruvasagan
மே 21, 2025 10:19

கடவுள் நம்பிக்கை உள்ளவர்களுக்கு ஏதாவது துன்பம் வந்தால் எல்லாம் தெய்வச்செயல் என்று நினைத்துக் கொண்டு மனதை தேற்றிக் கொள்ளுவார்கள். கடவுள் இல்லை என்கிற கொள்கையை உடைய கட்சியிலும் தெய்வச்செயலால் மற்றவர்களுக்கு துன்பம் ஏற்படும் என்பது ஆன்மீகத்துக்கு விடப்பட்ட சவால் மாதிரி உள்ளதே.


ஈசன்
மே 21, 2025 09:59

இக்காலத்தில் சினிமா மோகம் கொண்ட பெண்கள் ஏராளம். அதிலும் கல்லூரியில் படிக்கும் பெண்கள் சினிமாவில் வரும் ஹீரோயின் போல் தங்களை கற்பனை செய்து கொண்டு வாழ விரும்புகிறார்கள். அதற்கு பணம் வேண்டும். 21 வயதில் கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவிக்கு படிப்பை தவிர வேறு எண்ணங்கள் எப்படி வந்தது. ஏமாற்றி விட்டார் என்று புலம்பும் இந்த பெண் தன் பெற்றோருக்கு கீழ் படிந்து நடந்தாரா என்பது கேள்வி குறி.


Padmasridharan
மே 21, 2025 09:58

பெத்தவங்கள நம்பாம வெளி ஆட்களை நம்பறது நல்லவனா கெட்டவனா தெரியாம பண, பொருள் பலத்த பார்த்து காதல் பேச்சுல விழறது காவலர்கள் மக்களுக்குகாக உண்மையா வேலை செய்றாங்கன்னு எண்ணறது தவறுதான்... மாதா பிதா குரு தெய்வம் இத மதிக்கிறதே இல்ல, இப்ப நிறைய பேர். இந்த செய்தி தற்கொலைக்கு சம்மந்தப்பட்டிருக்கிறது அப்படி இருக்கையில் ஸ்னேஹாவின் விவரங்கள் ஏன் வெளியிடப்படவில்லை செய்திக்கு கீழ்


முருகன்
மே 21, 2025 09:36

இது ஒரு கணவன் மனைவி தனிப்பட்ட பிரச்சினை இதில் கட்சியை தொடர்பு படுத்தி பரபரப்பு


krishna
மே 21, 2025 16:32

ARAI VEKKADU MURUGAN.VEKKAMA ILLA IPPADI KARUTHU.MURASOLI THUDAITHA MOOLAYODU ADI MUTTAL AAGA THIRIYAADHE 200 ROOVAA COOLIE.


சுந்தர்
மே 21, 2025 08:24

அப்படிப் பார்த்தால் எல்லாரையும் பொறுப்பிலிருந்து விடுவிக்க தமிழக மக்கள்தான் தேர்தல் மூலம் ஆவன செய்ய வேண்டும்


ராஜ்
மே 21, 2025 08:21

உனக்கு வயசு 21 அவனுக்கு 40 19 வயசு வித்தியாசத்தில் அவனை திருமணம் செய்ய ஏன் சம்மதிக்க வேண்டும். உனக்கு பணத்து ஆசை வசதியான வாழ்க்கை கிடைக்கும் என்ற பேராசை அது உன்னை இந்த நிலைமையில் கொண்டு வந்து விட்டது.


புதிய வீடியோ