உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / தமிழக முக்கிய கோயில்களில் அதிகரிக்கும் பக்தர்கள் கூட்டம்: ஆன்லைன் தரிசன புக்கிங் குறித்து விழிப்புணர்வு குறைவு

தமிழக முக்கிய கோயில்களில் அதிகரிக்கும் பக்தர்கள் கூட்டம்: ஆன்லைன் தரிசன புக்கிங் குறித்து விழிப்புணர்வு குறைவு

மதுரை : தமிழக அறநிலையத்துறையின்கீழ் உள்ள முக்கிய கோயில்களில் அதிகரிக்கும் பக்தர்கள் கூட்டத்தை சமாளிக்கவும், தேவையற்ற சர்ச்சைகளை தவிர்க்கவும் ஆன்லைன் தரிசன புக்கிங் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.இத்துறையின்கீழ் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளன. இதில் மதுரை, ராமேஸ்வரம், திருச்சி, திருச்செந்துார், சமயபுரம், பழநி, சென்னை உள்ளிட்ட இடங்களில் உள்ள கோயில்களில் சமீபகாலமாக பக்தர்களின் கூட்டம் அதிகரித்துள்ளது. கூட்டநெரிசலால் ராமேஸ்வரம், திருச்செந்துாரில் பக்தர்கள் மயக்கம், இறப்பு என அடுத்தடுத்து சர்ச்சை ஏற்பட்டது. சமாளிக்க முடியாமல் அறநிலையத்துறை அதிகாரிகள் விளக்கம் சொல்லியே ஓய்ந்து போயினர்.இதை தவிர்க்க ஆன்லைன் தரிசன டிக்கெட் வசதி குறித்து பக்தர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். திருப்பதியில் தரிசனம் செய்ய ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு செய்வது போல், தமிழக முக்கிய கோயில்களுக்கும் இசேவை மையம், தகவல் மையங்கள் மூலம் பக்தர்கள் 'புக்கிங்' செய்யும் வசதியை ஏற்படுத்தலாம். தற்போது அறநிலையத்துறை இணையதளம் வழியாக சம்பந்தப்பட்ட கோயில் இணையதளத்திற்கு சென்று முன்கூட்டியே தரிசனம் செய்ய 'புக்கிங்' செய்யும் வசதி உள்ளது. ஆனால் 95 சதவீதம் பேருக்கு இதுகுறித்து விழிப்புணர்வு இல்லாததால், நீண்டநேரம் வரிசையில் நின்று தரிசனம் செய்ய வேண்டியிருக்கிறது. இதனால் காலதாமதமும், உடல் சோர்வும் தான் ஏற்படுகிறது.தரிசனம் செய்ய ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு குறித்து கோயில் முன்பும், அது சார்ந்த இடங்களிலும் அறிவிப்பு பலகைகள் வைக்கலாம். ஆன்லைனில் பதிவு செய்யும்போது குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் இவ்வளவு எண்ணிக்கையில் பக்தர்கள் வருவார்கள் என முன்கூட்டியே கோயில் நிர்வாகத்திற்கு தெரிந்துவிடும்(சபரிமலையில் உள்ளது போல) என்பதால் அதற்கேற்ப ஏற்பாடுகளை அறநிலையத்துறை பிரத்யேகமாக செய்ய முடியும். இதுகுறித்து அறநிலையத்துறை பரிசீலிக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

ஆரூர் ரங்
ஏப் 11, 2025 19:07

முக்கியமாக அவரவர் பகுதியிலுள்ள ஆலயங்களை பராமரிக்க வேண்டும். 95 சதவீத ஆலயங்களில் பக்தர்கள் வருகையும் இல்லை. வருமானமும் இல்லை. அவற்றில் வழிபடுவது புனித யாத்திரை செல்வதை விட முக்கியம்.


கல்யாணராமன் மறைமலை நகர்
ஏப் 11, 2025 18:47

அப்பாவி அண்ணே, இதையே ஹஜ் பயணம் செல்பவர்களுக்கும், ஜெருசேலம் புனிதப் பயணம் செல்பவர்களுக்கும் உங்களால் சொல்ல முடியுமா அல்லது நீங்களும் திராவிடம் போல் போலிதானா?


Rangarajan Cv
ஏப் 11, 2025 14:29

Why UPI payment system is not getting introduced in TN temples. Much better than cash handling. Hope concerned minister will implement ASAP. Helpful to both devotees


அப்பாவி
ஏப் 11, 2025 10:15

ஆன்லைன்லேயே கும்புட்டுடலாம். அடிக்கிற வெயில்லே வுட்டிலேயே சாமி கும்புடலாம். காசும் மிச்சம். யாருக்கும் கையூட்டு தரத் தேவையில்லை.


பெரிய ராசு
ஏப் 11, 2025 12:52

இறைவன் எங்கும் இருக்கின்றார் , வீட்டில் தீபாராதனை கட்டி நெய் வேத்தியம் சாற்றி ஆண்டவனின் திருவடிகளை சேவிப்போமாக


Thetamilan
ஏப் 11, 2025 10:12

இதில் இந்துமதவாத குண்டர்கள், தீவிரவாதிகள், மற்ற மதவாத குண்டர்கள், தீவிரவாதிகள் எத்தனைபேர்?. அறியாமையில் உள்ளவர்கள் எத்தனை பேர், இந்துமதவாத கொள்ளையர்கள் தாங்களாகவே வீட்டில் வந்து கொட்டுவார்கள் என்று நினைத்து செல்பவர்கள் எத்தனை பேர், கடவும் கொண்டு வந்து கொட்டும் என்று நினைக்கும் மூடநம்பிக்கையில் உள்ளவர்கள் எதனை பேர், உல்லாசப்பயணம், தேச விரோத பயணம் மேற்கொள்பவர்கள் எத்தனை பேர்.


ஆரூர் ரங்
ஏப் 11, 2025 11:20

துர்கா தேவி இவரை மன்னித்து விடு. அறியாமல் அறிவில்லாமல் பதிவிடுகிறார்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை