பாக்., முகத்திரையை கிழித்த இந்தியா; பயங்கரவாத எதிர்ப்புப் போரில் முதல் வெற்றி
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் மூண்ட நிலையில், முன்பு எப்போதும் இல்லாத வகையில், 'பேக் வார்' எனப்படும் பொய் தகவல்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பரப்பப்பட்டது. அதில் முக்கியமாக, பாகிஸ்தானுக்கு ஆதரவான 'வார் ரூம்' போராளிகள் அதிகமாகவே காணப்பட்டனர். பாகிஸ்தானால் இந்தியாவை எக்காலத்திலும் வெற்றி பெற முடியாது என்பதால், இரு நாட்டு மக்கள் மற்றும் சர்வதேச கவனத்தை பெறும் விதத்தில், போலியான செய்திகளையும், பழைய படங்களையும் உருவாக்கி, சமூக வலைதளங்களில் பகிர்ந்து வந்தனர்.இந்தியாவின் வான் பாதுகாப்பு கவசம் சுதர்சன சக்கரம் எனப்படும் எஸ்.400 அமைப்பை,பாகிஸ்தானின் ஜெ.எப்., 17 ஏவுகணை சேதப்படுத்தியது என பாக்., பொய் பிரசாரம் செய்தது. அதேபோல், பிரம்மோஸ் ஏவுகணை தளங்களை அழித்ததாகவும், கதைகளை இட்டுக்கட்டி வெளியிட்டது. சிர்சா, ஜம்மு, பதான்கோட், பதிடிண்டா, நலியா மற்றும் பூஜ் ஆகிய இடங்களில் உள்ள விமானப்படை தளங்கள் மீது தாக்குதல் நடத்தினோம் என பாகிஸ்தான், 'பம்மாத்து' செய்திகளை பரவவிட்டது. ஆனால், இவை எதுவும் உண்மையில்லை என, இந்தியா ஆதாரத்துடன் ஆணித்தரமாக வெளியிட்டு, பாகிஸ்தானின் போலி பிரசாரத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தது.மேலும், இந்திய ராணுவம் மசூதிகளை தாக்கி அழித்ததாக பாகிஸ்தான் பொய் குற்றச்சாட்டு சுமத்தியது. ஆனால், வழிபாட்டு தலங்களை பயங்கரவாத கூடமாக்கி பதுங்கியிருக்கும் தீவிரவாதிகளையே இந்தியா அழித்தது. இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என, தெள்ளத்தெளிவாக விளக்கி, பாக்., முகத்திரையை கிழித்தது.பாகிஸ்தான் தரப்பில் துவங்கப்பட்ட தொடர்ச்சியான, பொய் தகவல் பிரசாரங்களை இந்தியா முறியடித்து வந்தது தான், நமது முதல் வெற்றி.