வாசகர்கள் கருத்துகள் ( 2 )
ஊரான் வீட்டு நெய் என்பது நினைவுக்கு வருகிறது
congratulations to both of them
ஜ ம்மு - காஷ்மீர் அனந்த்நாக்கில் சட்டவிரோதமாக மது விற்ற இருவர் என போலீசார் வெளியிட்ட படம், குபீர் சிரிப்பை ஏற்படுத்துவதாக இருந்தது. காரணம், படத்தில் இருந்த இருவரும், சிரித்துக் கொண்டே 'போஸ்' கொடுத்திருப்பது தான். வழக்கு எண், சட்டப்பிரிவு விவரம் இருக்கும் காகிதத்தை கையில் பிடித்தபடி, வாய் நிறைய சிரிப்புடன் ஒருவரும், அதற்கும் குறைவான சிரிப்புடன் இன்னொருவரும் அந்த படத்தில் நிற்கின்றனர். விளம்பர பிரியர் அலப்பறை; சண்டிகர் போலீசுக்கு தலைவலி
அ மிர்தசரசைச் சேர்ந்த வர்த்தகர் ராகேஷ் டிரெகன். விளம்பர பிரியரான இவர், 'ஐபோன் வாங்க வசதியற்ற 100 பேரை குலுக்கல் முறையில் தேர்வு செய்து இலவசமாக வழங்குவேன்' என அறிவிப்பு வெளியிட்டார். சண்டிகர் மற்றும் மொஹாலியில் பொது நிகழ்ச்சியில், வெளிப்படையாக தேர்வு செய்து ஐபோன் வழங்குவேன் என்ற அவரது அறிவிப்பு, போலீசாரை திகில் அடையச் செய்தது. பெரும் கூட்டம் கூடி, நெரிசல் ஏற்பட்டு விடும் என பயந்த போலீசார், நிகழ்ச்சிக்கு தடை விதித்தனர். இதையடுத்து தன் வீட்டிலேயே குலுக்கலை சிறிய அளவில் நடத்திய ராகேஷ் டிரெகன், 10 பேருக்கு மட்டும் ஐபோன் கொடுத்தார். 'டிராபிக் ஜாம்' செய்தது புலி
ரா ஜஸ்தான் மாநிலம் ரன்தம்போர் தேசிய பூங்காவில் வன விலங்குகளை காணச் சென்ற சுற்றுலா பயணியர், வழியில் தென்பட்ட புலியை கண்டு அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை. வாகனம் செல்லும் பாதையில் அந்த புலி துாங்கிக் கொண்டிருந்தது. செயற்கை நுண்ணறிவு புரட்சிக்கு தலைமை வகிக்கும் இந்தியர்கள்
மு ன்னணி செயற்கை நுண்ணறிவு நிறுவனங்களான, 'ஓப்பன் ஏ.ஐ.,' மற்றும் 'ஆந்த்ரோபிக்' ஆகியவற்றின் தலைமை தொழில்நுட்ப அதிகாரிகளாக, இந்தியர்களான விஜய் ராஜு, ராகுல் பாட்டீல் இருக்கின்றனர். 'டெக் அண்ட் டேட்டா லிஸ்ட்' என்ற பெயரில், 'டைம்' இதழ் வெளியிட்ட 50 முன்னணி தொழில்நுட்பத்துறை நிர்வாகிகளின் பட்டியலில் இவர்கள் இருவரும் இடம் பெற்ற செய்தி, வலைதளங்களில் டிரெண்டிங்கில் உள்ளது. இருவருக்கும் உள்ள ஒற்றுமை, இருவருமே, ஐ.ஐ.டி., கல்வி நிறுவனங்களில் படிக்காதவர்கள் என்பதுதான். விஜய் ராஜு, புதுச்சேரி இன்ஜினியரிங் கல்லுாரியிலும், ராகுல், பெங்களூரு பி.இ.எஸ்.ஐ.டி., கல்லுாரியிலும் பட்டம் பெற்றுள்ளனர். சாலையில் வழிந்தோடிய நெய்
உ .பி., மாநிலம் மொராதாபாத் நெடுஞ்சாலையில், நெய் லோடு ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி கவிழ்ந்து விட்டது. டேங்கரில் இருந்து நெய் வெளியேறி, சாலையெங்கும் சென்றது. இப்படி ஒரு சம்பவம் நடந்தால், மக்கள் அடுத்தது என்ன செய்வர்? ஆம், கேன்களையும், வீட்டுப் பாத்திரங்களையும் எடுத்துச் சென்று சாலையில் வழிந்த நெய்யை சேகரிக்க ஆரம்பித்து விட்டனர்.
ஊரான் வீட்டு நெய் என்பது நினைவுக்கு வருகிறது
congratulations to both of them