உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / மின் வாரிய கடனுக்கான வட்டி செலவு 10 ஆண்டுகளில் ரூ.1 லட்சம் கோடி

மின் வாரிய கடனுக்கான வட்டி செலவு 10 ஆண்டுகளில் ரூ.1 லட்சம் கோடி

சென்னை: புதிய மின் திட்டங்கள் உள்ளிட்ட பணிகளுக்கு, நிதி நிறுவனங்கள், வங்கிகளிடம் கடன் வாங்கப்படுகிறது. இந்த கடன்களுக்கான வட்டி செலவு, கடந்த 10 ஆண்டுகளில், 1 லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது.தமிழக மின் வாரியத்திற்கு, வரவை விட, செலவு அதிகம் இருப்பதால் பல ஆண்டுகளாக நஷ்டத்தை சந்தித்து வருகிறது. இதற்கு, மின் கொள்முதலுக்கு அதிகம் செலவிடுவதே முக்கிய காரணமாக உள்ளது.எனவே, புதிய மின் நிலையம் உள்ளிட்ட மின் திட்டங்களுக்கும், நடைமுறை மூலதன செலவுகளை சமாளிக்கவும் கடன் வாங்கப்படுகிறது.அதன்படி, மத்திய அரசின், 'ரூரல் எலக்ட்ரிபிகேஷன், பவர் பைனான்ஸ்' உள்ளிட்ட நிதி நிறுவனங்களிடம் இருந்தும், வங்கிகளிடம் இருந்தும், பல்வேறு வட்டி விகிதங்களில், மின் வாரியம் கடன்களை வாங்கியுள்ளது.கடந்த ஆண்டு நிலவரப்படி மின் வாரிய கடன் நிலுவை, 1.60 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.கடன்களுக்கு செலுத்தக்கூடிய வட்டியாக ஆண்டுக்கு, 10,000 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்யப்படுகிறது. கடந்த, 10 ஆண்டுகளில் மட்டும், மின் வாரியம் வட்டிக்காக செலவு செய்த தொகை, 1.01 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டில், 16,440 கோடி ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது.இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:கடன்களுக்கான வட்டி, 8, 9, 10, 11 சதவீதம் என, பல்வேறு விகிதங்களில் உள்ளன. இதை ஒரே அளவில், 8 சதவீதமாக குறைக்குமாறு வங்கிகள், நிதி நிறுவனங்களிடம் வலியுறுத்தப்பட்டது. இதனால் ஆண்டுக்கு, 2,000 கோடி ரூபாய் வட்டி செலவு மிச்சப்படுத்தப்பட்டது. தொடர்ந்து, வட்டி செலவை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள, 12 சர்க்கரை ஆலைகளில் இணை மின் நிலையம் அமைக்கும் பணியை மின் வாரியம், 2010ல் துவக்கியது. திட்டச்செலவு, 965 கோடி ரூபாய். இதுவரை, ஆறு ஆலைகளில் மின் உற்பத்தி துவங்கியுள்ள நிலையில், பணிகள் முழுமை பெறவில்லை. ஆனால், இத்திட்டத்திற்கு வாங்கிய கடனை விட, அதிகமாக இதுவரை, 1,400 கோடி ரூபாய்க்கு மேல் வட்டி செலுத்தப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ